Banner 1
திரைப்படம்

NGK Tamil Movie

செல்வராகவன் இயக்க, சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு “NGK" டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை 'அருவி', 'தீரன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது சூர்யாவின் 36-வது படம்.

மார்ச் 5, 2018: சூர்யாவுடன் செல்வராகவன் இணையும் முதல் படம் இது என்பதால், இப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியாய், இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பை படக்குழு மேற்கொண்டு வருகிறார்கள். இத்திரைப்படத்துக்கு 'சூர்யா 36' என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த நிலையில்,  இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டார். 

NGK-Tamil-Movie

தொகுப்பு : விகடன் டீம்