Banner 1
வைரஸ்

நிபா வைரஸ்

வௌவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நிபா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கிய விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும், மாம்பழங்களை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறுகிறது. இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது. 

தொகுப்பு : விகடன் டீம்