நிர்மலா சீத்தாராமன்

 நிர்மலா சீத்தாராமன்

நிர்மலா சீத்தாராமன்

நிர்மலா சீத்தாராமன்

இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர். இந்திரா காந்தியைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவர் . இவர் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பது கூடுதல் சிறப்பு.

பிறப்பு
நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையை பூர்விகமாக கொண்டவர் . 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாளில் பிறந்தவர் இவர் .

குடும்பம் :
நிர்மலா சீத்தாராமன் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் .இவரது பெற்றோர் ஸ்ரீ நாராயணன் சீத்தாராமன்-சாவித்ரி ஆவார். இவரின் அப்பா ரயில்வே துறையில் பணியாற்றியவர் . இவரது அம்மாவுக்கு புத்தகங்கள் என்றால் கொல்லிப் பிரியம் .இவரது அப்பாவின் பணியிட மாற்றம் காரணமாக தனது இளமையைப் பல இடங்களில் கழித்துள்ள இவருக்கு மாற்றங்களும் , புதுமையை ஏற்றுகொள்ளும் பண்பும் இயல்பாகி போனது. பரக்கல பிரபாகர் என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் லண்டனுக்கு குடிப் பெயர்ந்தார். சிறிது காலம் லண்டனில் கழித்தப் பின்பு 1991 ஆம் இந்தியாவிற்கு திரும்பி வந்த இவரை அரசியல் வாழ்க்கை எதிர்பார்த்து காத்து இருந்தது .இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார்.

இளமையும் கல்வியும் :
தனது இளங்கலைப் பட்டத்தை திருச்சியில் உள்ள சீத்தாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் முடித்த இவர் முதுகலை பட்டத்திற்காக டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் சேர்ந்தார் . படிக்கும் காலத்தில் இவரின் விருப்ப பாடம் ” உலகமயமாக்கலும் , வளரும் நாடுகளின் மீதான அதன் விளைவும் “. இந்த ஆர்வமே அவரை இந்தியாவின் தொழித்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சராகியது . இளைமையில் நிர்மலா சீத்தாராமன் மிகுந்த பேச்சுத்திறன் வாய்ந்தவராகவும் , தலைமைப் பண்பு மிக்கவராகவும் வலம் வந்திருக்கிறார். விளையும் பயிர் முளையிலே தெரியுமல்லவா ?

அரசியல் வாழ்க்கை :
இவரின் குடும்பம் பாரம்பாரியமாக காங்கிரஸ் கட்சியை சார்ந்தது என்றாலும் , இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது ஆச்சரியமே ! நிர்மலா சீத்தாராமனை கட்சியில் இணைத்ததில் சுஷ்மா சுவராஜின் பங்கு குறிப்பிடத் தக்கது என்று சொல்லலாம் . 2003 – 2005 ஆண்டுகளில் நிர்மலா சீத்தாராமன் “ பெண்கள் நல ஆணையத்தில் “ உறுப்பினராக பணியாற்றி வந்தார் . அப்பொழுது தான் சுஷ்மா சுவராஜ் இவரின் ஆளுமையை கண்டு வியந்து அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்திருக்கிறார். அவரின் அழைப்புப்படி 2006 ஆம் ஆண்டு கட்சியின் வெறும் பேச்சாளராக இணைந்த இவர் , 2010 ஆம் ஆண்டு ரவி சங்கர் தலைமையிலான கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக உருவாகினார். இதன் பின்னரே ஊடங்களில் மட்டுமல்ல , மக்கள் மத்தியிலும் தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டார் .2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கும் , பா.ஜா.காவிற்கும் ஆதரவான இவரது பிரச்சாரம் இவரை மோடி தலைமையிலான அமைச்சரவையில் இவருக்கான இடத்தைப் பெற்றுத் தந்தது . மே 26 , 2௦14 ஆம் நாளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரானர் .ஆந்திராவில் நெடுருமல்லி ஜனரதன் ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து , இவர் அம்மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் . இதனைத் தொடர்ந்து தற்பொழுது கர்நாடகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

தன அரசியல் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் மெல்ல மெல்ல தந்துக்கொண்டிருந்த நிர்மலா சீத்தாராமன் செப்டம்பர் 3 , 2017 ல் மோடி தலைமையிலான அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றத்தில் “ இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக “ அறிவிக்கப்பட்டார். இந்திரா காந்திக்கு பிறகு இவரே இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத் தக்கது.  

தமிழகத்திலும் இவரின் அரசியல் பிரவேசம் கூடிய விரைவில் வரலாம் .

தனிநபர் வருமான வரி மாற்றங்கள்... சவால்களும் சலுகைகளும்
வி.தியாகராஜன்

தனிநபர் வருமான வரி மாற்றங்கள்... சவால்களும் சலுகைகளும்

`வரிவசூல் போதுமானதாக இல்லை; ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் மேலும் தாமதம்!'- நிர்மலா சீதாராமன்
தெ.சு.கவுதமன்

`வரிவசூல் போதுமானதாக இல்லை; ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் மேலும் தாமதம்!'- நிர்மலா சீதாராமன்

அன்புச்செழியனுடன் 
தொடர்பில் உள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள்!
செ.சல்மான் பாரிஸ்

அன்புச்செழியனுடன் தொடர்பில் உள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள்!

`நீண்ட உரைக்கு மன்னிக்கவும்; ஆனால்..." - பட்ஜெட் உரைக்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்!
ராம் சங்கர் ச

`நீண்ட உரைக்கு மன்னிக்கவும்; ஆனால்..." - பட்ஜெட் உரைக்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட்டில் இடம்பெற்ற ‘பசுமை’அறிவிப்புகள்!
துரை.நாகராஜன்

பட்ஜெட்டில் இடம்பெற்ற ‘பசுமை’அறிவிப்புகள்!

`தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய்; உ.பி-க்கு ரூ.7,000 கோடி!' - கொதிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி
செ.சல்மான் பாரிஸ்

`தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய்; உ.பி-க்கு ரூ.7,000 கோடி!' - கொதிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி

எல்.ஐ.சி  ஐ.பி.ஓ... சரியா, தவறா?
செ.கார்த்திகேயன்

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... சரியா, தவறா?

பட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்!
தெ.சு.கவுதமன்

பட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்!

`இந்தியாவும் இந்த சுமையை தாங்க வேண்டியிருக்கும்!' - பொருளாதார மந்தநிலை குறித்து நிர்மலா சீதாராமன்
ராம் பிரசாத்

`இந்தியாவும் இந்த சுமையை தாங்க வேண்டியிருக்கும்!' - பொருளாதார மந்தநிலை குறித்து நிர்மலா சீதாராமன்

ஏர் இந்தியா, எல்.ஐ.சி... தொடரும் தனியார் மயம்...  யாருக்கு லாபம்? - விரிவான அலசல்!
தெ.சு.கவுதமன்

ஏர் இந்தியா, எல்.ஐ.சி... தொடரும் தனியார் மயம்... யாருக்கு லாபம்? - விரிவான அலசல்!

மயான அமைதியில் காஷ்மீர்; சிறையில் தலைவர்கள், கொதிக்கும் ஜம்மு... சிறப்புச் சட்டம் இல்லாத 6 மாதங்கள்!
ர.முகமது இல்யாஸ்

மயான அமைதியில் காஷ்மீர்; சிறையில் தலைவர்கள், கொதிக்கும் ஜம்மு... சிறப்புச் சட்டம் இல்லாத 6 மாதங்கள்!

`9 திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் ஒதுக்கீடு!’ - கேள்விக்குறியாகும் தமிழக ரயில்வே திட்டங்கள்?
சத்யா கோபாலன்

`9 திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் ஒதுக்கீடு!’ - கேள்விக்குறியாகும் தமிழக ரயில்வே திட்டங்கள்?