நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்

தோற்றம்:
            நிவேதா பெத்துராஜ், மதுரையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி 1991-ம் ஆண்டு பிறந்தார்.இவரின் தந்தை பெத்துராஜ் ஆவார்.


குடும்பம்:
            இவர் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்தவர்.இந்து சமயத்தைச் சேர்ந்தவர்.சொந்த ஊர் மதுரை மாவட்டம்.அப்பா கப்பல் பொறியாளர். ஆரம்பகாலத்தில் இவரது அப்பா தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்தார். பின்னர் ஏற்பட்ட பணியிடை மாற்றம் காரணமாக துபாய் செல்ல நேர்ந்தது.பிறகு அப்படியே குடும்பத்துடன் துபாயில் செட்டிலாகிவிட்டார்கள். இவரது சொந்த பந்தங்கள் இன்றும் மதுரையில் வசித்து வருகின்றனர்.வருடத்திற்கு ஒரு முறையாவது மதுரைக்கு வந்து ஓரிரு வாரங்கள் தங்கி இங்குள்ள உணவுகளை சுவைப்பது இவரின் வழக்கம்.


இளமைப்பருவம்-கல்வி:
               மதுரைப் பொண்ணு 12 வயது வரை தூத்துக்குடியில் பள்ளி படிப்பை பயின்றார்.பின் தனது 13-ம் வயதில் துபாயில் உள்ள GEMS அரேபிய வாழ் இந்தியப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.தனது கல்லூரிப் படிப்பை ஹுரியோட் வாட் பல்கலைக்கழகத்தில் “மனிதவள மேலாண்மை” துறையில் (MBA) பட்டம் பெற்றார்.


தனிப்பட்ட வாழ்க்கை:
                கல்லூரிப் படிப்பை முடித்துப் பின் நல்ல ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்வது என்ற எண்ணம் இருந்தது.சினிமாவிற்கு வருவது போன்ற எந்த ஆசையும் இல்லை.துபாயில் நடந்த “மிஸ்.யுஏஇ” (அரேபிய அழகி) போட்டியில் டைட்டில் வின் பண்ணிய பிறகு பல அறிமுகங்கள்,நண்பர்கள் என பிசியாயிட்டாங்க.தன்னுடைய மாடலிங் வேலையக் கவனித்தார்.பின் திரைப்பட வாய்ப்பு வந்தது.


சினிமா பயணம்:
                  சென்னையில் திரைப்பட ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் தனது தோழி மூலமாகவே முதல் பட வாய்ப்பு கிடைத்துப் பின் ஒத்திகை மூலம் தான் தேர்வு செய்யப்பட்டதாக நிவேதா தெரிவித்திருக்கிறார்.2015-ம் வருடம்  “யுஏஇ” பட்டம் பெற்ற பிறகு, 2015-ல் கோலிவுட்டில் நுழைந்தார். “யுஏஇ” பட்டம் பெற்றதனால் தன மீது தனது குடும்பத்திற்கு நம்பிக்கை வந்ததால் சினிமாவிற்கு நடிக்க ஒப்புக்கொண்டனர்,என நிவேதா கூறியுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.


நடித்த படங்களின் நிலை:
                    இவர் நடித்த திரைப்படங்கள் நான்கு. முதல் படமான “ஒரு நாள் கூத்து” படத்தில் “அட்டக்கதி தினேஷ்” ஜோடியாக நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்தார்.இப்படம் 10.06.2016 அன்று திரைக்கு வந்தது.முதல் படத்திலேயே கெத்தான நடிப்பால்,தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இதனைத் தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் இருந்து பட வாய்ப்பு வரத் தொடங்கியது.பின் தொடர் பட வாய்ப்பின் காரணமாக துபாய்க்குச் செல்லாமல் சென்னையில் கதை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
              இரண்டாவது படம் தளபதி பிரபு இயக்கத்தில் “உதயநிதி ஸ்டாலினுடன்”  ஜோடியாக பொதுவாக என்மனசு தங்கம்” என்ற படத்தில் நடித்தார்.இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி 2017 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது.இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
               வெங்கட் பிரபு இயக்கத்தில் பாட்ர்டி என்ற தமிழ் படத்தில் ஒரு பெரிய சினிமா பட்டாளத்துடன் நடித்து வருகிறார்.இப்படம் 22.12.2017 அன்று திரைக்கு வர உள்ளது.
               தெலுங்கில் கால்பதித்த இவர் ஸ்ரீவிஷ்ணு  ஜோடியாக “விவேக் ஆத்ரையா” இயக்கத்தில் மெண்டல் மதிலோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.தற்போது ரிலீசுக்காகக் காத்திருக்கிறது.
                பின் தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் “ஜெயம்ரவியுடன்” சேர்ந்து “டிக் டிக் டிக்” என்ற படத்தில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி வெளியாக உள்ளது.மேலும் பல நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.எத்தனை படம் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை எத்தனை படத்தில் ரசிகர்களின் மனதில் படிகிறோம் என்பதை குறிக்கோலாகக் கொண்டுள்ளார்.  


 ஆர்வம்:
          இவருக்கு மாடலிங் ஆர்வம் தனது நண்பர்கள் கொடுத்த பரிந்துரையால் ஏற்பட்டது.இவர் மல்யுத்தம், குத்தச் சண்டை மீது ஆர்வம் கொண்டுள்ளார்.தற்காப்பு மற்றும் ப்ட்னஸில் அசத்திக் கொண்டிருக்கிறார்.ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்குகிறார்.


சாதனைகள்:
            2015-ம் ஆண்டு நடைபெற்ற “மிஸ்.யுஏஇ” (அரேபிய அழகி) பட்டத்தை 15 போட்டியாளர்களுக்கு இடையே தட்டிச் சென்றார்.இந்திய அளவில் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி என்ற சிறப்புக்குரியவர்.ஒரு நாள் கூத்து படத்திற்காக அவரே குரல்(Duubbing) கொடுத்தது மேலும் ஒரு சிறப்பு. ப்ட்னஸ் பயிற்சித் துறையில் எக்ஸ்பேட்டாக திகழும் இவர் இத்துறையில் சான்றிதழும் பெற்றுள்ளார்.”அடியே அழகே” பட்டைக் கேட்டதும் ரசிகர்களுக்கு இவரின் முகம் நியாபகம் வருவதும் இவர் செய்த மிகப்பெரிய சாதனையே.


விருதுகள்:
           2015-ம் ஆண்டில் “மிஸ்.யுஏஇ” (அரேபிய அழகி) பட்டம் பெற்றார். ஒரு நாள் கூத்து படத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பின் காரணமாக இவருக்கு சிறந்த புதுமுக நடிகை  என்ற விருதை “பிகைன்வுட்ஸ் கோல்டுமெடல்ஸ்” 2017-ம் ஆண்டு வழங்கிச் சிறப்பு செய்தது.
 

India's first space film - Tik Tik Tik Audio Launch | Jayam Ravi, Nivetha Pethuraj
Vikatan Correspondent

India's first space film - Tik Tik Tik Audio Launch | Jayam Ravi, Nivetha Pethuraj

Sketch of Viral Cartoon featured in Vikatan Magazine| Modi | Xi Jinping
ஜீவாகரன் தி

Sketch of Viral Cartoon featured in Vikatan Magazine| Modi | Xi Jinping

Red alert: Ayodhya Verdict | The Imperfect Show
சுரேஷ் குமார் R

Red alert: Ayodhya Verdict | The Imperfect Show

Seeman booked for provocative speech!
நீ.இராஜசேகரன்

Seeman booked for provocative speech!

Remove Pimple & Acne in 1 week | Easy Facepack | Overnight | Pimple
Nivetha R

Remove Pimple & Acne in 1 week | Easy Facepack | Overnight | Pimple

Seeman controversial statement | Americai V Narayanan Interview
ஆவுடையப்பன்

Seeman controversial statement | Americai V Narayanan Interview

Revealed: Dual Face of Seeman | The Imperfect Show
ந.கார்த்திக்

Revealed: Dual Face of Seeman | The Imperfect Show

Verbal war between EPS & Stalin! | The Imperfect Show
Nivetha R

Verbal war between EPS & Stalin! | The Imperfect Show