நிவின் பாலி

நிவின் பாலி

நிவின் பாலி

   'நிவின்பாலி' மலையாளம் மற்றும் தமிழ்சினிமாவின் நடிகர் ஆவார்.அக்டோபர் 11 1984ம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவரின் தந்தையும்,தாயும் ஸ்விட்சர்லாந்தில் வேலை பார்த்த காரணத்தால்,விடுமுறை நாட்களில் மட்டும் தன் பெற்றோருடன் சேர்ந்து நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததார்.சிறுவயதில் இருந்தே நிவின்பாலிக்கு சினிமா மீது ஒரு தீராத ஆர்வம் இருந்து வந்தது.மலையாள சினிமா ஹீரோக்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலயைும் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனையும் பிடிக்கும் என்பார்.

   படிப்பிலும் குறைவில்லாமல் படித்து கேரளாவின் இன்ஜீனியரிங்கில் தலைசிறந்து விளங்கும் கல்லூரிகளின் ஒன்றான 'பெடரல் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜீ'கல்லூாியில் எலக்ட்ரிக்கல் அன்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றார்.சினிமா ஆசை அவ்வப்போது எட்டி பார்தாலும் அதை மறைத்துவிட்டு பெங்களூரில் உள்ள இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தார்.தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு வேலையைவிட்டு சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.இந்த காலகட்டத்தில் சிறிய மியூசக் ஆல்பம்,குறும்படம் என தன்னை சினிமா தொடர்பான விஷயங்களில் இணைத்து கொண்டே வந்தார்.

     2010ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் தயாரிப்பில்.மாம்பழம்,சைக்கிள்,மாக்கண்டே அச்சன் போன்ற படங்கறை இயக்கிய இயக்குநர் சீனிவாசன் தனது அடுத்தபடமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்புக்கு நடிகர்கள் தேர்ந்தெடுக்க ஆடிஷன் வைத்தார்,அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பெரும் வெற்றி பெற்ற அப்படத்தின் மூலம்  வெளிச்சத்துக்கு வந்தார் 'நிவின்பாலி'. அதன்பிறகு ட்ராபிக்,தி மெட்ரோ,செவன்ஸ் என நடிப்பில் நல்ல பெயரை பெற்று தரும் படங்களாக அமைந்தன.2012ம் ஆண்டு நடிகை நஸ்ரியாநசீம் உடன் இவர் நடித்த 'உவ்க்' இவருக்கு நல்ல பிரபலித்தை கொடுத்து.2013ல் இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

   இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நிவின் பாலிகாகு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.பல வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் நிவின்பாலியின் ஸ்பஷெலாகும்.மல்ட்டி ஹீரோ கான்ச்செப்டில் நடித்த 'பெங்களுர் டேஸ்' இவருக்கு பெரும் படமாக அமைந்தது மட்டுமில்லாமல் கடைநிலை ரசிகன் வரை இவரை கொண்டு போய் சேர்த்தது.'1983' என்ற படத்தின் மூலம் கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.இதற்கெல்லாம் கிரீடம் வைக்கும் விதமாக 2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவர் நடித்த "பிரேமம்" இந்திய அளவில் இவருக்கு பெயரினை தேடி தந்தது.பிறகு இப்படம் தெலுங்கிலும் டப் செய்யபட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ் சினிமா என பல்வறு சிறப்புகளை இப்படம் இவருக்கு பெற்று தந்தது.இந்த படத்தின் மூலம் மல்லுவுட்டில் ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் நிவின்பாலி.இதன்பிறகு நிவின்பாலியின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்ததன.அதன் பிறகு ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ,சகாவு போன்ற படங்கள் வெளியாகின.தமிழ் சினிமா மீதும் தனது கவனத்தை குவித்து அதற்கேற்ப கதைகளங்களில் நடித்து வருகிறார்.தன்னுடன கல்லூாியில் படித்த "ரின்னா ஜாய்"என்ற பெண்ணை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்,இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தமிழ்ப் படம்! மலையாள படம்! எது பெஸ்ட்? | Richie | Nivin Pauly Interview
Vikatan Correspondent

தமிழ்ப் படம்! மலையாள படம்! எது பெஸ்ட்? | Richie | Nivin Pauly Interview

'விஜய் 63' பாடல்கள்; பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கும் தனுஷ்! #CinemaVikatan20/20
தார்மிக் லீ

'விஜய் 63' பாடல்கள்; பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கும் தனுஷ்! #CinemaVikatan20/20

ரஜினி இல்லனா என்ன, ஷாருக் கான் இருக்காரே, இயக்குநரின் முடிவு! #CinemaVikatan2020
சந்தோஷ் மாதேவன்

ரஜினி இல்லனா என்ன, ஷாருக் கான் இருக்காரே, இயக்குநரின் முடிவு! #CinemaVikatan2020

`என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பல!'- அழைக்கும் கட்சிகளுக்கு ஐ.எம்.விஜயன் பதில்
சிந்து ஆர்

`என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பல!'- அழைக்கும் கட்சிகளுக்கு ஐ.எம்.விஜயன் பதில்

`கபாலிக்கு விமானம்; நிவின் பாலிக்கு ரயில்'- ரசிகர்களை ஈர்த்த `காயங்குளம் கொச்சுண்ணி' விளம்பரம்!
மலையரசு

`கபாலிக்கு விமானம்; நிவின் பாலிக்கு ரயில்'- ரசிகர்களை ஈர்த்த `காயங்குளம் கொச்சுண்ணி' விளம்பரம்!

``தயாரிப்பாளர் எடிட் பண்ணிட்டார்; அதைக் கேட்குற உரிமை எனக்குக் கிடையாது..!’’ - நட்டி
சனா

``தயாரிப்பாளர் எடிட் பண்ணிட்டார்; அதைக் கேட்குற உரிமை எனக்குக் கிடையாது..!’’ - நட்டி

நிவின் பாலி, மோகன்லால் இணைந்து நடிக்கும் பிரமாண்டமான வரலாற்றுப் படத்தின் டிரெய்லர்! #KayamkulamKochunni
மு.ராஜேஷ்

நிவின் பாலி, மோகன்லால் இணைந்து நடிக்கும் பிரமாண்டமான வரலாற்றுப் படத்தின் டிரெய்லர்! #KayamkulamKochunni

`என் மாநில மக்கள் நிலைமை மனதைப் பிசைகிறது' - நிவின் பாலி உருக்கம்!
கலிலுல்லா.ச

`என் மாநில மக்கள் நிலைமை மனதைப் பிசைகிறது' - நிவின் பாலி உருக்கம்!