ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம்

பிறப்பு:  

ஜனவரி 14, 1951

இயற்பெயர் :

 பேச்சிமுத்து

இளமைப் பருவம்/கல்வி :

ஜாதகம், ஜோதிடத்தில் பேச்சிமுத்துக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. நியூமராலஜிஸ்ட் ஒருவரை பேச்சிமுத்து சந்தித்தபோது, 'தம்பிக்கு இந்தப் பேரு அதிர்ஷ்டம் இல்லையே... உன்னோட பொறந்த தேதியை வெச்சு கணக்குப் போட்டு பார்த்தேன். உன்னோட பேரை இப்படி மாத்தி வெச்சா நீ ஓஹோன்னு வருவே!’ என்று கூட்டி கழித்துப்போட்டு ஒரு சீட்டைக் கொடுக்கிறார் அவர். அதை வாங்கிப் பார்க்கிறார் பேச்சிமுத்து. அந்த சீட்டில் இருந்த பெயர் பன்னீர்செல்வம். அந்தப் பேச்சிமுத்துதான் தற்போதைய ஓ.பன்னீர்செல்வம்! எட்வர்டு நினைவு பள்ளியில் படிப்புக்குப் பிறகு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு பட்டப்படிப்பை முடித்தார். 

குடும்பம் :

அப்பா ஓட்டக்காரத்தேவருக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர். பழனியம்மாளைத் திருமணம் செய்துகொண்டு இவர் பெரியகுளத்தில் வந்து செட்டிலாகிறார். பன்னீர்செல்வத்தின் மனைவின் பெயர் விஜயலட்சுமி, இவர்களின் மகள் பெயர் கவிதா பானு, மகன்கலின் பெயர்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப். 

தனிப்பட்ட வாழ்க்கை :

சிறு வயதில் அப்பாவுடன் சென்றது விவசாயம் செய்து வந்தார். பின் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், பால் பண்ணை ஒன்று நிறுவி தொழில் செய்து வந்தார். வெளியூர்களுக்கு சென்று வேலை செய்ய விருப்பம் இல்லாததால் நண்பர்களுடன் இணைந்து டீ கடை நடத்தி வந்தார். 

துறை சார்ந்த அனுபவம்  :

அரசியலில் காலூன்றாத காலத்தில் எம்.ஜி.ஆர்.க்கு மிகப்பரிய அரசியல் விசிறியாக இருந்தார். அ.தி.மு.க.வின் சார்பாக எங்கெல்லாம் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதோ அங்கெல்லாம் பன்னீர்செல்வம் கண்டிப்பாக கலந்துகொள்வார். இந்த அனுபவங்கள் தான் பின்னாளில் அரசியலில் கொடிகட்ட பறக்க அடித்தளமிட்டது.

அரசியல் :

எம்.ஜி.ஆர் என்றால் பன்னீர்செல்வத்துக்கு உயிர். அதுதான் அவரை அ.தி.மு.க உதயமானபோது உறுப்பினராக்கியது. 1982-ல் பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் என்பதுதான் அவருக்குக் கட்சியில் கிடைத்த முதல் பொறுப்பு. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும் அவர் மீது இருந்த பற்றினால் இந்த மிஸ்டர் விசுவாசம், ஜானகி அணியில் தீவிரமானார். அந்தக் காலகட்டத்தில் போடி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து பணியாற்றினார் பன்னீர்செல்வம். 1993-ம் ஆண்டு இவருக்கு பெரியகுளம் நகர கழகச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கொடுத்த வாய்ப்பு பன்னீருக்கு வெற்றி வாய்ப்பானது. 'நம்ம டீக்கடைக்கார தம்பிதான் தலைவராகியிருக்கு...’ என்று பெரியகுளம் முழுக்கவே அப்போது பேச்சாக இருந்தது. இப்படி பெரியகுளம் வட்டாரத்தில் மட்டுமே வலம் வந்த பன்னீர்செல்வத்துக்கு, 1999 நாடாளுமன்றத் தேர்தல் திருப்புமுனையாக அமைந்தது. பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தின் வீடு தினகரனின் தேர்தல் அலுவலகமாக மாறியது. தேர்தல் வரவு செலவு கணக்கைக் கவனிக்கும் பொறுப்பும் பன்னீருக்கு வழங்கப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்து முடிக்க... தினகரனின் நம்பிக்கைக்குரியவராக மாறினார் பன்னீர்.

அந்த நம்பிக்கைதான் அடுத்த சில மாதங்களில் அவரை தேனி மாவட்டச் செயலாளராக்கியது. 2001 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது தினகரனால் பெரியகுளம் தொகுதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பன்னீர்செல்வம். சீட் கிடைத்தது. எம்.எல்.ஏ-வும் ஆனார். அவர் பெயரை அமைச்சர் பட்டியலிலும் பரிந்துரைத்து, 'பவர்ஃபுல்’லான வருவாய்த் துறையையும் வாங்கிக் கொடுத்தார் தினகரன். அந்த ஆண்டுதான் டான்சி வழக்குத் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் ஜெயலலிதா. 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை 162 நாட்கள் தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார். அதையடுத்து, 2002 மார்ச் மாதம் முதல்வர் பதவி மீண்டும் ஜெயலலிதா வசம் சென்றது. சில வருடங்களில் அ.தி.மு.க-வின் கழகப் பொருளாளர் பதவியை அவருக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பெருமளவில் தோல்வி அடைந்தபோதும் பன்னீர்செல்வம் ஜெயித்ததுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆனார். 2011 தேர்தலில் பெரியகுளம் தனி தொகுதியாக மாற்றப்பட்டதால், போடி தொகுதியில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. அங்கேயும் ஜெயித்தார். ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். பிறகு பொதுப்பணித் துறையும் அவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஜெயலலிதாவுடன் தமிழகம் முழுவதும் சென்றவர் பன்னீர்செல்வம் மட்டுமே. அ.தி.மு.க-வில் சொல்லப்படும் புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட, நால்வர் அணியில் பன்னீர்தான் முதல்வர்.

2001 ஆம் ஆண்டு டான்சி வழக்கில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பதவி பறிபோனது. அப்போது 21-9-2001 முதல் 01-03-2002 வரை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். அதன் பின் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 2014 ஆண்டு ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்தது. அப்போது 29-9-2014 முதல் 22-05-2015 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அதன் பின் 2016 ஆம் செபடம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 5-12-2016 அன்று இயற்கை எய்தினார். அன்று இரவே அதவாது 5-12-2016 மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்று சிறப்பாக பணி செய்து வந்தார். 8-2-2017 அன்று அ.தி.மு.க. பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்ற இரு அணிகளாக பிரிந்தது. தன்னிடம் மெஜாரிட்டி எம்.எல்.ஏ.கல் இல்லாத காரணத்தால் 16-2-2017 அன்று தனது முதலமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது. 

சாதனைகள்  :

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தந்து சொந்த தொகுதியான பெரியகுளத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இவருக்கு முதன்முறையிலேயே அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதிலும் வருவாய் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

சேவைகள்  :

1.வர்தா புயலை ஒட்டி தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி, மீட்புப் பணிகள் வரை அனைத்தும் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. இதற்காக, தமிழக அரசு சுறுசுறுவென செயல்பட்டது. சிறப்பான முறையில் ஓ.பி.எஸ்., ‘வர்தா’ முன்னெச்சரிக்கைகளை எடுத்தார். 

2. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் லட்சகணக்கான பொதுமக்கள் மாபெரும் போராட்ட்டம் நடத்தினர். இந்த போரட்டத்தின் விளைவாக பன்னீர்செல்வம் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்றினார். அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் அளவில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டது. 

3.கிருஷ்ணா நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை பார்த்து பேசி சுமூக தீர்வு கொண்டு வந்தார்.

விமர்சனங்கள்  :

ஜெயலலிதாவுக்கு ஒரு பன்னீர்செல்வம் எனும் அளவுக்கு மிகுந்த விசுவாசியாக இருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு முதலைச்சராக பதவி ஏற்றார். அதன் பின் சசிகலாவுக்கு எதிராக தனியாக பிறந்து வந்தார். இதனால் சசிகலா தரப்பினர்கள் 'இவரை அ.தி.மு.க.வின் துரோகி என்றும், பதவிக்கு ஆசை பட்டவர்' எனும் விமர்சனங்கள் வைத்தனர்.

 

தொகுப்பு : ஜே.அன்பரசன்

``அரசியலே வேண்டாம் என்றுதான் எங்கள் குடும்பம் ஒதுங்கியிருக்கிறது!'' - சொல்கிறார் எம்.ஜி.ஆர் பேரன்
த.கதிரவன்

``அரசியலே வேண்டாம் என்றுதான் எங்கள் குடும்பம் ஒதுங்கியிருக்கிறது!'' - சொல்கிறார் எம்.ஜி.ஆர் பேரன்

``சசிகலாவை அதிமுக-வில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு'' - ஓ.பி.எஸ் அதிரடிக்குப் பின்னால்?!
வருண்.நா

``சசிகலாவை அதிமுக-வில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு'' - ஓ.பி.எஸ் அதிரடிக்குப் பின்னால்?!

சசிகலா அதிமுக-வில் இணைப்பு?!  `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்
செ.சல்மான் பாரிஸ்

சசிகலா அதிமுக-வில் இணைப்பு?! `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்

"கையெழுத்து போட மாட்டேன்"
- முரண்டு பிடித்த பன்னீர்
ந.பொன்குமரகுருபரன்

"கையெழுத்து போட மாட்டேன்" - முரண்டு பிடித்த பன்னீர்

`கட்சி என்றிருந்தால், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்!' - ஒப்புக்கொள்கிறார் அதிமுக அன்வர் ராஜா
த.கதிரவன்

`கட்சி என்றிருந்தால், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்!' - ஒப்புக்கொள்கிறார் அதிமுக அன்வர் ராஜா

கழுகார் பதில்கள்
கழுகார்

கழுகார் பதில்கள்

சசிகலாவைச் சந்திக்கக் காத்திருக்கும் அதிமுக தலைவர்கள் யார்? - Journalist Lakshmi Subramanian
Nivetha R

சசிகலாவைச் சந்திக்கக் காத்திருக்கும் அதிமுக தலைவர்கள் யார்? - Journalist Lakshmi Subramanian

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...
ந.பொன்குமரகுருபரன்

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

அதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி?! | Elangovan Explains
சே.த இளங்கோவன்

அதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி?! | Elangovan Explains

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்
ஜூனியர் விகடன் டீம்

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்

அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்!
த.கதிரவன்

அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்!

சசிகலாவின் புதிய சபதம்; ஸ்டாலினின் லாப கணக்கு... பாஜக-வின் 3 செக் | Elangovan Explains
சே.த இளங்கோவன்

சசிகலாவின் புதிய சபதம்; ஸ்டாலினின் லாப கணக்கு... பாஜக-வின் 3 செக் | Elangovan Explains