பா.இரஞ்சித்

பா.இரஞ்சித்

பா.இரஞ்சித்

தமிழ் சினிமாத்துறையில் கமர்ஷியல் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எதார்த்தமான படங்கள் எடுக்கும்இயக்குனரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கமர்ஷியலிசம் மற்றும் நகைச்சுவை படங்கள் கை ஓங்கி நிற்கும் இந்தகாலக்கட்டத்தில் அதிலிருந்து சற்று விலகி, மனித வாழ்வியலை அச்சு பிசகாமல் வெளிச்சம் போட்டு சினிமாவில்அரசியல் பேசுபவர் பா.ரஞ்சித். கபாலி படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.

பிறப்பு,இளமைக்காலம்:-

            வட சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூருக்கு ,அருகில் உள்ள கரலபாக்கம் என்கிற கிராமத்தில் 1980 இல்பிறந்தவர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்தார். தன் வீட்டிலிருந்து கல்லூரி வரை செல்லும்அந்த பயணங்கள் தான் தனக்கு கதை எழுதுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக கூறுவார்.

      கல்லூரி படிப்பின் போதே  ஃபிலிம் சேம்பரில் சேர்ந்து வருடந்தோறும் நடக்கும் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு உலக சினிமாக்களை தவறாது பார்த்து வந்தார். முதன்முதலாக சினிமாவில் நுழையும் போது கலை இயக்குனராக வர வேண்டும் என்று இருந்தவர், அப்போது நடந்த பிலிம் பெஸ்டிவலில் பார்த்த கிளாசிக்கல் கல்ட் ‘Life is  Beautiful’ , ‘cinema paradiso’ இந்த இரண்டு படம் தான் இரஞ்சித்துக்கு சினிமா என்பது மிகப்பெரும் கருவி என்று மனதில் உறைத்தது. ’The Battle of Algiers’(1966) என்ற படம் அவர் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுவார். அந்த படத்தில் அரசியலும் கலைத்தன்மையும் அற்புதமாக இருக்கும் எனவும் அது தன்னுடைய வழிகாட்டி படம் என்றும் கூறியிருக்கிறார்.    2002 இல் வெளிவந்த City Of God  படம் தான் நிறைய கதைமாந்தர்கள் பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் இதன் பிறகு தான் அவரிடம் வேரூன்றியதாம்.

சினிமா வாழ்க்கை:-

             2006  இல் சிவ சண்முகம் இயக்கிய தகப்பன்சாமி படத்தில் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு இயக்குனர் லிங்குசாமியிடமும், வெங்கட் பிரபுவிடமும் உதவி இயக்குனராய் பயிற்சி பெற்றார். பிறகு  2007வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் உதவி இயக்குனராய் பணிபுரிந்தார். 2010 இல் கோவா படத்திலும் ஒரு உதவி இயக்குனர்.

             இரஞ்சித் 2௦12 இல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். புதுமுக தயாரிப்பாளாரான சி.வி.குமார் இந்த படத்தை தயாரித்தார். 5௦ நாட்களில் படமாக்கப்பட்ட இந்த படம் ஒரு கோடியே எழுபத்தி ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.  விமர்சகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது  இந்த படம்.

              இதனைத் தொடர்ந்து 2014இல் வெளிவந்த மெட்ராஸ்,    வட சென்னையிலுள்ள சுவரை வைத்து பின்னப்பட்ட அரசியல் களம் கொண்ட திரைப்படம். இந்த படத்தில் தலித்துகள் எவ்வாறு உயர் சாதியினரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாசுக்காக கூறியிருப்பார்.இத்தனைக்கும் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட தலித் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. 

              இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஒரு சுவர் உள்ளது, அந்த சுவர் தான் இரு நாட்டையும் பிரிக்கும் ஒரே விஷயம். அதை பற்றிய ஒரு ஆவணப்படம் பார்த்த சமயத்தில் இங்கு கோயம்பேடில் சுவரை வைத்து ஒரு பிரச்சனை நடக்க, இதையெல்லாம் மெட்ராஸ் பிறந்தாக கூறியுள்ளார். மெட்ராஸ் படம் மூலம் தமிழ் திரையுலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் இரஞ்சித். 

               மெட்ராஸ் படத்துக்கு பின்னர் , சூர்யா வைத்து படம் எடுப்பதற்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி முடித்தார்.அப்போது சூர்யாவின் கால்ஷீட் தள்ளிப்போக அப்போது தான் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியின் வழக்கமான ஸ்டையிலை தவிர்த்து முற்றிலும் வேறொரு ரஜினியை திரையில் காண்பித்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’ நினைவு கூர வைத்தார். மலேசியாவில் உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டு ஒடுக்கப்பட்ட   தமிழர்களின் வாழ்வை கூறும் கேங்ஸ்டர் கதை. இப்படம் கலந்த விமர்சனத்திற்கு உள்ளானாலும், இது தற்போது ரஜினியை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கம் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு காலா திரைப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
      
கொள்கைகள்:-
       அம்பேத்கர், மார்க்ஸ், சேகுவாரா, சார்லி சாப்ளின், மால்கம் எக்ஸ்,பெரியார் போன்றோரால் ஈர்க்கப்பட்டவர். குறிப்பாக அம்பேத்கரால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் இரஞ்சித். அவரது ட்விட்டர் கணக்கு அம்பேத்கரின் இயற்பெயரில் தான் இருக்கிறது (‘@beemji’). இவருடைய  முதல் படம் ‘அட்டகத்தி’ ஜாலியான படம் என்பது எல்லாரோட கருத்தாக இருக்கு .ஆனால் அவரோ அந்தப் படம் மிக முக்கியமான அரசியல் திரைப்படம் எனவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இந்தக் கதை மூலம் சொன்னதே பெரிய அரசியல் தான் எனக் கூறியிருக்கிறார். அட்டகத்தி,மெட்ராஸ்,கபாலி தொடர்ந்து காலா படத்திலும் தலித் அரசியல் பற்றி பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். மனிதனே மனித கழிவை அகற்றும் இழிவான நிலை மாற வேண்டும் என்பது இவர் கொள்கைகளில் ஒன்று. இதன் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மஞ்சள் என்கிற நாடகம் ஒன்றை காமராஜர் அரங்கில் அரங்கேற்றினார். சமூக கருத்துகள் இல்லாத கலை, கலையே அல்ல என்றும் இவர் கூறியுள்ளார்.

Vikatan Poll Results: தனுஷுடன் இதுவரை பணியாற்றாத இயக்குநர்கள்... யாருடன் அவர் அடுத்து இணையலாம்?
விகடன் டீம்

Vikatan Poll Results: தனுஷுடன் இதுவரை பணியாற்றாத இயக்குநர்கள்... யாருடன் அவர் அடுத்து இணையலாம்?

``Rajini சாரோட Call-க்காக Waiting!" - Anupama Kumar | Sarpatta Parambarai | Aval Vikatan
ஆர்.வைதேகி

``Rajini சாரோட Call-க்காக Waiting!" - Anupama Kumar | Sarpatta Parambarai | Aval Vikatan

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

சூர்யாவுக்காக 'ஜெய் பீம்' டைட்டிலை மகிழ்ச்சியோடு கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித் !
உ. சுதர்சன் காந்தி

சூர்யாவுக்காக 'ஜெய் பீம்' டைட்டிலை மகிழ்ச்சியோடு கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித் !

'' 'சார்பட்டா' வெற்றியைக் கொண்டாட மாறன் இல்லையே'' - கலங்கும் 'மஞ்சா கண்ணன்' மனைவி கிளாரா!
உ. சுதர்சன் காந்தி

'' 'சார்பட்டா' வெற்றியைக் கொண்டாட மாறன் இல்லையே'' - கலங்கும் 'மஞ்சா கண்ணன்' மனைவி கிளாரா!

பட்டாக் கத்திகளும் படுகொலைகளும் இல்லா வடசென்னை வரலாறு! - சார்பட்டா பரம்பரை வாசகர் விமர்சனம்
விகடன் வாசகர்

பட்டாக் கத்திகளும் படுகொலைகளும் இல்லா வடசென்னை வரலாறு! - சார்பட்டா பரம்பரை வாசகர் விமர்சனம்

சார்பட்டா பரம்பரை: திமுக - வைத் தூக்கிப்பிடித்து அதிமுக -வை விமர்சிக்கிறதா பா. இரஞ்சித்தின் இப்படம்?
இரா.செந்தில் கரிகாலன்

சார்பட்டா பரம்பரை: திமுக - வைத் தூக்கிப்பிடித்து அதிமுக -வை விமர்சிக்கிறதா பா. இரஞ்சித்தின் இப்படம்?

`திமுக-வை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த இரஞ்சித் எனும் ஈட்டி மழுங்கிப்போனதா?’-கொதிக்கும் ஜெயக்குமார்
பிரேம் குமார் எஸ்.கே.

`திமுக-வை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த இரஞ்சித் எனும் ஈட்டி மழுங்கிப்போனதா?’-கொதிக்கும் ஜெயக்குமார்

‘சார்பட்டா’ மாரியம்மாள்களின் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஒரு கேள்வியும், கோரிக்கையும்!
வித்யா.மு

‘சார்பட்டா’ மாரியம்மாள்களின் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஒரு கேள்வியும், கோரிக்கையும்!

சார்பட்டா பரம்பரை: விளையாட்டில் அரசியல், அரசியலில் விளையாட்டு! பா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணி வென்றதா?
விகடன் டீம்

சார்பட்டா பரம்பரை: விளையாட்டில் அரசியல், அரசியலில் விளையாட்டு! பா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணி வென்றதா?

பா.இரஞ்சித் சொன்ன MGR, Rajini Reference - Aegan | Costume Designer | Sarpatta Parambarai
Gopinath Rajasekar

பா.இரஞ்சித் சொன்ன MGR, Rajini Reference - Aegan | Costume Designer | Sarpatta Parambarai

‘நான் கடவுள்’ முதல் ‘சார்பட்டா’ வரை : ஆர்யாவின் உழைப்பு அபாரமானது... ஆனால், இமேஜ்?!
சுரேஷ் கண்ணன்

‘நான் கடவுள்’ முதல் ‘சார்பட்டா’ வரை : ஆர்யாவின் உழைப்பு அபாரமானது... ஆனால், இமேஜ்?!