ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

'பேய்  படம்' என்றால் பயந்து கொண்டிருந்த நேரத்தில் பேய் படத்திற்க்கென்று தனி வழிதடத்தை அமைத்தவர், லாரன்ஸ். Horror + comedy என்று புதுவித முயற்ச்சியில் வெற்றிபெற்றார். நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.   

இந்தியாவின்  சிறந்த நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனரை தாண்டி திரையில் நடிப்பு, இயக்கம், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என  தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லாரன்ஸ்.  1993 - ல் சிறந்த நடன  இயக்குனர் என அங்கிகாரத்திற்கு பிறகு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது 22 வயதின் போது தெலுங்கு திரைப்படத்தில் முதன்முறையாக தோன்றினார். தன் வாழ்நாள் முழுவதும் முன்னணி கதாநாயகர்களுடனும், இயக்குனர்களுடனும் பணிபுரிந்தார். இவரின் தனிச்சிறப்பு என்றால் hip hop  மற்றும் Western நடன அசைவுகள்தான்...

பிறப்பு :
ராகவேந்திரா லாரன்ஸ் 29 அக்டோபர் 1976ஆம் ஆண்டு பூந்தமல்லியில்  பிறந்தார்.  இவருக்கு எல்வின் என்ற ஒரு சகோதரர் உண்டு. 

பெயர் காரணம்  :
லாரன்ஸ் குழந்தையாக இருக்கும்போது அவருக்கு மூளையில் கட்டி இருந்தது. எனவே அவர் குறைந்த நாட்களே பள்ளிக்கு சென்றார். இவர் குணமடைய வேண்டும் என்பதற்க்காக லாரன்ஸின் அன்னை ராகவேந்திரா சுவாமி  கோவிலுக்கு சென்று வந்தார். அதன்பிறகே, லாரன்ஸ் குணமடைந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ராகவேந்திராவின் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக மாறினார், லாரன்ஸ். எனவே ராகவேந்திரா  எனும் பெயரை  தன் பெயரோடு சேர்ந்து கொண்டார். ஆவடி -  அம்பத்தூர் வழியே , திருமுல்லைவயலில், ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் கோவிலை கட்டி  ஜனவரி 1, 2010 - ல்   திறந்து வைத்தார். 

திரைப்பயணம் :
முதலில் ராகவா லாரன்ஸ் சூப்பர்  சுப்பராயனிடத்தில்  கார் சுத்தம் செய்பவராக  பணிபுரிந்தார்.   ரஜினிகாந்த் இவரின்  நடனத் திறமையை கண்டு நடன கலைஞர்களின் தொழிற்சங்கத்தில் ( Dancers union) சேர்த்தார்.

நடன இயக்குனராக,... 
(1993 - இல் இருந்து,.... )  

சிரஞ்சீவி, தனது ஹிட்லர்  படத்தில் லாரன்ஸ்க்கு நடனஇயக்குனராக பணிபுரிய வாய்ப்புக் கொடுத்தார்.  இவரின் திறமையை  பார்த்து தொடர்ந்து  மாஸ்டர் படத்திலும் வாய்ப்பு  கிடைத்தது.  
1989- ஆம் ஆண்டு  T. ராஜேந்திரன்   இயக்கிய 'சம்சார சங்கீதம்' என்ற தமிழ்படத்தின் ஒரு பாடலில் முதன்முறையாக தோன்றினார். ஜெண்டில்மேன் படத்தில் ' சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ' எனும்  பாடலில்  பின்னணியில்  நடனமாடி  இருப்பார்.
ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக 1993 - ல்   உழைப்பாளி ( உழைப்பாளி இல்லாத ),
1994- இல் சின்னமேடம் 
1995- இல் தாய் தந்தை பாசம் 
1999- இல் அமர்க்களம்( மஹா கணபதி)  
2000- இல் உன்னை கொடு  என்னைத் தருவேன் ( சொல்லு தலைவா) மற்றும்  திருநெல்வேலி  ( ஏலே அழகம்மா )
2002- இல் வருஷமெல்லாம் வசந்தம் ( நீங்க ரெடியா)   ரோஜாக்கூட்டம் (அப்பம்மா ) பாபா (மாயா மாயா)
2003- இல் புதிய கீதை ( அண்ணாமலை ), திருமலை (தாம்தக தீம்தக)
2010- இல் பெண் சிங்கம் ( அடி ஆடி அசையும் இடுப்பு),  
2015- இல் கதை  திரைக்கதை வசனம் இயக்கம் ( Live the movement)  போன்ற தமிழ்படங்களில் நடனஇயக்குனராக பணிபுரிந்தார். 


நடிகராக.....
(1998 -ல் இருந்து,...)    
  
தயாரிப்பாளரான TVD  பிரசாத்  speed dancer  என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க லாரன்ஸ்க்கு முதன்முதலாக வாய்ப்பு கொடுத்தார் . இவரின் முதல்படம்  தோல்வியை தழுவியது. இதன்பிறகு இரண்டு  தமிழ் படங்களில் நடித்தார், லாரன்ஸ்.  இவையும் தோல்விதான். இருந்தாலும் தனது நம்பிக்கையில் மனம் தளரவில்லை.  பிறகு,  இயக்குனரான K. பாலச்சந்திரனின் 100- வது படத்தில்  நடிக்க லாரன்ஸ்க்கு ஒரு அழைப்பு  வந்தது. கதாநாயகனாக தனது வெற்றிப்பயணத்தை 'பார்த்தாலே பரவசம்' (2001) படத்திலிருந்து தொடங்கினார். 2007ல் வெளியான முனி  திரைப்படம் இவரது  திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது. 2000-  உன்னைக்கொடு என்னை தருவேன், பார்த்தேன் ரசித்தேன் 2001 - ல் பார்த்தாலே பரவசம், 2002- ல்  அற்புதம், 2004- ல்  தென்றல், 2007- ல்  முனி, 2008- ல் பாண்டி, 2009 - ல்  ராஜாதிராஜா, 2010-ல் இரும்புகோட்டை முரட்டு சிங்கம், 2011-ல்  முனி காஞ்சனா 2, 2017- ல்  மொட்டசிவா கெட்டசிவா, சிவலிங்கா போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார். ஸ்டைல்(2002), டான் (2007), போன்ற தெலுங்கு படங்களிலும் நடிகராக வலம்வந்தார், லாரன்ஸ். 

இயக்குனராக.... 
(2004 ல் இருந்து,.... )

தானாகவே படத்தை இயக்கி,  நடிக்கவும் செய்தார் லாரன்ஸ்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் :
மஸ்தானா  மஸ்தானா.

சமூக சேவை :
சுமார் 160 குழந்தைகளுக்கு மேல் இருதய சிகிச்சை மற்றும் கண்சிகிச்சைக்கு  தேவையான பணத்தை  அறக்கட்டளை மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார்.  இவர் மேலும் பலரின் படிப்பிற்க்காக உதவிகளையும், பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

விருதுகள்:
பிலிஃம் பேர் விருதுகள் : 
2000,  2001, 2002 ஆம் ஆண்டின்  சிறந்த நடன இயக்குனருக்கான  விருதை அன்னயா, பார்த்தாலே பரவசம், இந்திரா போன்ற படத்திற்க்காக வென்றார்.
2006ஆம் ஆண்டின்  சிறந்த  நடன இயக்குனருக்கான விருதை தெலுங்கு படமான 'ஸ்டைல் ' படத்திற்க்காக  பெற்றார்.

தமிழ்நாடு மாநில திரைபட விருதுகள் :  
1999 ஆண்டு சிறந்த நடன இயக்குனருக்கான  தமிழ்நாடு மாநில விருதை 'கண்ணுப்பட போகுதய்யா' படித்திற்க்காக  பெற்றார். அதோடு 2016ஆம் ஆண்டு காஞ்சனா படத்திற்க்காக தமிழ்நாடு மாநில திரைபட  விருது பெற்றார்.

நந்தி விருதுகள் :
2000- ம் ஆண்டு 'அன்னய்யா' படத்திற்க்காகவும், 2002 ஆண்டு 'இந்திரா 'எனும் தெலுங்கு  படத்திற்காகவும், 2006 ஆண்டு ' style' படத்திற்காகவும் சிறந்த நடன இயக்குனருக்கான  நந்தி விருதை பெற்றார். 

எடிசன் விருதுகள் : 
2015 - மனித நேயத்திற்க்கான  விருது லாரன்ஸ்க்கு  வழங்கப்பட்டது.
2015 - எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபார்மன்ஸ்க்கான விருது, காஞ்சனா  2 படத்திற்காக வழங்கப்பட்டது.

கண்மணி ராகவா லாரன்ஸ்:
மொட்டை சிவா கெட்ட சிவா  படத்தின் டைட்டில் கார்டில்  ராகவா லாரன்ஸ்க்கு ' மக்கள் சுப்பர் ஸ்டார்' என்ற பட்டம் அடைமொழியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு விளக்கம் தரும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், லாரன்ஸ் . அதில் இத்திரைப்படத்தில் எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று இயக்குனர் கூறியிருந்தார், அது என்ன என்பதை இப்போது புரிந்து கொண்டேன். உண்மையிலேயே இந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் இல்லை.  சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும், அதுவும் நம்முடைய தலைவர் ரஜினிகாந்த்தாக தான் இருக்க முடியும். என்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர  ரசிகன் நான். இனிமேல் வரும்  படங்களில் எனது பெயர் 'கண்மணி ராகவா லாரன்ஸ்' என்றே வரும் ; என்னுடைய தாயின்  பெயரை  என் பெயரின் முன்னால் வைப்பதை விட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது, என்று விளக்கம் அளித்துள்ளார். 

தனிப்பட்ட வாழ்க்கை : 
லாரன்ஸ்,  ' லதா ' என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு ராகவி என்ற  ஒரு பெண் குழந்தையும் உண்டு.

கோலிவுட் ஸ்பைடர்: சிவகார்த்திகேயன் - கவுண்டமணி காம்போ; டிமாண்டி காலனி 2 ரெடி; ஹீரோவாகும் தனுஷ் மகன்!
கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்: சிவகார்த்திகேயன் - கவுண்டமணி காம்போ; டிமாண்டி காலனி 2 ரெடி; ஹீரோவாகும் தனுஷ் மகன்!

சந்திரமுகி 2 : ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்?
உ. சுதர்சன் காந்தி

சந்திரமுகி 2 : ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்?

சிலிர்க்க வைத்த சில நாட்டுப்புற பாடல்கள்! | My Vikatan
மா. யுவராஜ்

சிலிர்க்க வைத்த சில நாட்டுப்புற பாடல்கள்! | My Vikatan

``குடிசை வீட்டுலதான் இருக்கோம்; சொந்த வீடு கிடைக்கும்னு..!" 'ஜெய் பீம்' பார்வதி குடும்பத்தினர்
கு.ஆனந்தராஜ்

``குடிசை வீட்டுலதான் இருக்கோம்; சொந்த வீடு கிடைக்கும்னு..!" 'ஜெய் பீம்' பார்வதி குடும்பத்தினர்

வெற்றிமாறன் - லாரன்ஸ் படம் எப்போது தொடங்குகிறது?
மை.பாரதிராஜா

வெற்றிமாறன் - லாரன்ஸ் படம் எப்போது தொடங்குகிறது?

கோலிவுட் ஸ்பைடர்: அஜித்தின் ஆன்மிக ரூட்; உதயநிதியின் அரசியல் ரூட்; ரெடின் கிங்ஸ்லி காட்டில் மழை!
கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்: அஜித்தின் ஆன்மிக ரூட்; உதயநிதியின் அரசியல் ரூட்; ரெடின் கிங்ஸ்லி காட்டில் மழை!

"என் தங்கச்சி எப்பவும் சந்தோஷமா இருக்கணும்!"- ஐஸ்வர்யாவுடனான சந்திப்பு குறித்து ராகவா லாரன்ஸ்
சனா

"என் தங்கச்சி எப்பவும் சந்தோஷமா இருக்கணும்!"- ஐஸ்வர்யாவுடனான சந்திப்பு குறித்து ராகவா லாரன்ஸ்

கோலிவுட் ஸ்பைடர்: தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு - சமாதானம் பேச மறுத்த பிரபலம்; ராகவா லாரன்ஸின் ரொமான்ஸ் ரூட்!
நா.கதிர்வேலன்

கோலிவுட் ஸ்பைடர்: தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு - சமாதானம் பேச மறுத்த பிரபலம்; ராகவா லாரன்ஸின் ரொமான்ஸ் ரூட்!

"வருங்கால வாழ்கையைக் காண முடியவில்லை!"- `காஞ்சனா 3' ரஷ்ய நடிகை தூக்கிட்டு தற்கொலை... பின்னணி என்ன?!
அந்தோணி அஜய்.ர

"வருங்கால வாழ்கையைக் காண முடியவில்லை!"- `காஞ்சனா 3' ரஷ்ய நடிகை தூக்கிட்டு தற்கொலை... பின்னணி என்ன?!

``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா?'' - பார்த்திபன் - 9
தேவன் சார்லஸ்

``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா?'' - பார்த்திபன் - 9

Ranjith, Vishal, Lawrence|Kollywood Celebrities ANGRY Mood! Justice for Jayaraj & Bennix Sathankulam
Gopinath Rajasekar

Ranjith, Vishal, Lawrence|Kollywood Celebrities ANGRY Mood! Justice for Jayaraj & Bennix Sathankulam

அப்செட்டில் ஓ.பி.எஸ்; பதறும் தலைமைச்செயலகம்; அ.ம.மு.க-வின் `ஆபரேஷன் சவுத்'... கழுகார் அப்டேட்ஸ்!
கழுகார்

அப்செட்டில் ஓ.பி.எஸ்; பதறும் தலைமைச்செயலகம்; அ.ம.மு.க-வின் `ஆபரேஷன் சவுத்'... கழுகார் அப்டேட்ஸ்!