ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி என்பவர் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பேரன் ஆவார். இவரது பெற்றோர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் தற்போதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆவர். 19 ஜூன் 1970ல் பிறந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு மற்றும் இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொருப்பாளராக உள்ளார். கேம்பிரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் வளர்நிலைக் கல்வியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.  மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் தான் யாரென்று வெளியில் சொல்லாமல் பணிபுரிந்தார்.  இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டதை பார்த்து இவரும் அரசியலுக்கு வரப்போகிறார் என்று ஊடகங்களில் பேசப்பட்டது. அதே போல், மார்ச் 2004 தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார். ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார். செப்டம்பர் 2007 ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார். இச்சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும், இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ல், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவருக்கு மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் கிடைத்தும் அதை வேண்டாமென்று கட்சியின் நிலையை அறிந்து அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இன்றளவும் பழங்குடி மக்களுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அவருடைய தொகுதியில் மக்களால் ஆர்ஜி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

 - உ.சுதர்சன் காந்தி

``கல்பனா சாவ்லா போல சாதிக்கணும்!" - ராகுல் காந்தியால் இஸ்ரோ சென்ற மாணவி நெகிழ்ச்சி
சிந்து ஆர்

``கல்பனா சாவ்லா போல சாதிக்கணும்!" - ராகுல் காந்தியால் இஸ்ரோ சென்ற மாணவி நெகிழ்ச்சி

ரஃபேல் ஒப்பந்தம்:  இந்திய இடைத்தரகருக்கு டசால்ட் நிறுவனம் லஞ்சம்? - பூதாகரமாகும் சர்ச்சை!
ரா. அரவிந்த்ராஜ்

ரஃபேல் ஒப்பந்தம்: இந்திய இடைத்தரகருக்கு டசால்ட் நிறுவனம் லஞ்சம்? - பூதாகரமாகும் சர்ச்சை!

தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! #VoiceOfAval
அவள் விகடன் டீம்

தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! #VoiceOfAval

அரசியல் ஆல்பம்
ஜூனியர் விகடன் டீம்

அரசியல் ஆல்பம்

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

மோடி, அமித் ஷா முன் பழனிசாமி தலைகுனிகிறார்; அதற்கு விலை கொடுப்பது தமிழக மக்களே - ராகுல் காந்தி
ரெ.சு.வெங்கடேஷ்

மோடி, அமித் ஷா முன் பழனிசாமி தலைகுனிகிறார்; அதற்கு விலை கொடுப்பது தமிழக மக்களே - ராகுல் காந்தி

``பெண்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்..!" - வைரலாகும் ராகுல் காந்தியின் பேச்சு
அந்தோணி அஜய்.ர

``பெண்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்..!" - வைரலாகும் ராகுல் காந்தியின் பேச்சு

``என் முடிவு இதுதான்; வதந்திகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!'' - விளக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ
கு.ஆனந்தராஜ்

``என் முடிவு இதுதான்; வதந்திகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!'' - விளக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

170 எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல்; 5 மாநிலங்களில் ஆட்சியிழப்பு - பெரிதும் பாதிக்கப்பட்ட காங்கிரஸ்
துரைராஜ் குணசேகரன்

170 எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல்; 5 மாநிலங்களில் ஆட்சியிழப்பு - பெரிதும் பாதிக்கப்பட்ட காங்கிரஸ்

குமரி: சிறுவனுக்கு வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்; மற்றொருவருக்கு இஸ்ரோ வாய்ப்பு! - அசத்திய ராகுல்
சிந்து ஆர்

குமரி: சிறுவனுக்கு வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்; மற்றொருவருக்கு இஸ்ரோ வாய்ப்பு! - அசத்திய ராகுல்

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?
சுகுணா திவாகர்

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

எலெக்‌ஷன் ஜங்ஷன்
ஜூனியர் விகடன் டீம்

எலெக்‌ஷன் ஜங்ஷன்