ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

பிறப்பு:
தமிழகத்தின் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரானோஜி கயாக்வட்டிற்கும் கோவை எல்லையில் பிறந்த ராம்பாயிற்கும் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த மூன்றாவது மகன், சிவாஜி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட 'ரஜினிகாந்த்'.ரஜினிக்கு உடன் பிறந்த  சகோதரி ஒருவரும் உள்ளார்.  ரானோஜி ராவ்விற்கு கர்நாடக காவல் துறையில் வேலைகிடைத்ததால் கர்நாடகாவிற்கு குடுமபத்துடன் இடம் பெயர்ந்தார்.
 
இளமைப்பருவம் :
பெங்களுர்  பசவன்குடியில் உள்ள பிரிமியம் மாடல் பள்ளியில் தொடக்கப் பள்ளியில் ரஜினிகாந்த் சேர்ந்தார்.சிறுவயதில் படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரராக ரஜினி விளங்கினார்.அந்த பிஞ்சு மனதை உலுக்கிய சம்பவம் அவரது ஒன்பதாவது அகவையில் நிகழ்ந்தது.உடல்நிலைக் குருவாக இருந்த  தனது தாயை ரஜினி இழந்தார்.அதன் பிறகு ரஜினியின் நடத்தையின் மாற்றம் ஏற்பட்டது.இந்த மாற்றத்தை அவரது அன்னான் பெரிதும் கண்டித்தார். தனது 16வது வயதில் ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ரஜினி சேர்ந்தார்.அப்பள்ளியின் கட்டுப்பாடுகள், யோகா பயிற்சி,வழிபாட்டு முறைகள், இவரது முரட்டுத்தனத்தையும் அடாவடித்தனத்தையும் மெல்ல மாற்றியது.
 
மாற்றம்:
ரஜினியின் தந்தை  கர்நாடக காவல் துறையில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவி வகித்து வந்தார்.தனது மகனாவது காவல் துறையில் உயர் அதிகாரி ஆகவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.ஆனால் ரஜினியோ சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வந்தார்,வீட்டுக்கு தெரியாமல் சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் பெங்களுர் திரும்பினார்.
தனது உறவினர் ஒருவரில் சிபாரிசால் கர்நாடக போக்குவரத்து காலத்தில் கண்டக்டர் பனி கிடைத்தது. ஆனால் அது அவருக்கு முழு மனநிறைவை தரவில்லை. எப்படியாவது நடிகராக வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக பதிந்தது.தனது நண்பரர்களின் உதவியுடன் அவர் மீண்டும் சென்னை வந்தார்.தமிழ்நாட்டு திரைப்படக்  சேர்ந்து பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் மட்டும் அல்லாமல் உலகின் சிறந்த நடிகர்களின் படங்களை பார்த்து தன்னை தானே சினிமாத்துறைக்கு தயார் படுத்துக்கொண்டார்.அவரது பயிற்சிக்காலம் முடிய மூன்று மாதங்கள் உள்ளநிலையில், அக்கல்லூரிக்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் விருதாக தகவல் வெளியானது.அதை அறிந்த ரஜினி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கே.பாலச்சந்தரை சந்திக்க வேண்டும் என்று எண்ணினார்.
 
கலைப்பயணம்:
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ரஜினி பாலச்சந்தரை சந்தித்தார்.ரஜினியின் நடிப்பு திறனை அறிந்த கே.பாலச்சந்தர்,அவருக்கு வாய்ப்பளித்தார். ரஜினியின் முதல் திரைப்படம்-'அபூர்வ ராகங்கள்'.. சிறு கதாபாத்திரம் , ஆனால் முக்கிய கதாபாத்திரம். "நீங்க தமிழ் நல்ல பேச கத்துக்குட்டிங்கனா உங்கள எங்கேயோ கொண்டு போவேன்" என்று பாலச்சந்தர் கூறியதும் ரஜினி தமிழ் கற்றுக்கொண்டார், முதல் நாள் படப்பிடிப்பு- நடிகர் கமல்ஹாசனுடன். மூடியுள்ள கேட்டை திறந்து,"நான் பைரவியின் புருஷன்" என்று கூறுவதே ரஜினியின் முதல் வசனமாகும். 'சிவாஜி ராவ்' என்ற பெயருக்கு பதில் தனது முந்தைய பட கதாபாத்திரமான 'ரஜினிகாந்த்'ஐ பாலச்சந்தர் வழங்கினார்.1975ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் 'அபூர்வ ராகங்கள்' வெளியானது. அன்று முதல் சிவாஜி ராவை உலகம் 'ரஜினிகாந்த்' என்று அழைத்தது.
அடுத்து 'மூன்று முடிச்சு'-இதில் வில்லனாக நடித்தார். அதனை தொடர்ந்து வெளியான 'அவர்கள்' படத்தில் வில்லத்தனமான ஹீரோவாக ரஜினி நடித்தார்.இதில் ரஜினியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார்.
 
1977ஆம் ஆண்டில் 15 படங்களில் ரஜினி நடித்தார்.இவற்றுள் சிவகுமார் ஹீரோவாக நடித்த 'கவிக்குயில்'படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் சிறப்பாக  அமைந்தது.அந்த ஆண்டில் மாபெரும்  வெற்றி பெற்ற படம், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'புவனா ஒரு கேள்விக்குறி'. இப்படத்தின் மூலம், அதுவரை ஹீரோவாக நடித்த சிவகுமார் வில்லனாகவும் வில்லனாக நடித்துவந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்தனர். இத்திரைப்படம் ரஜினியின் கலைப்பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.அதுவரை  ஸ்டைல் வில்லனாக நடித்த ரஜினி, எல்லா வித ரோல்களுக்கும் பொருந்துவார் என்பது எல்லோருக்கும் புரிய வந்தது.
 
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான '16 வயதினிலே', தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.அப்படத்தின் "பரட்டை"என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினி,"சப்பாணி"யை கலாய்ப்பது  பக்கா வில்லத்தனம். இப்படம் அவருக்கு புது பரிமாணத்தை தந்தது.பின்னர் கமலுடன் இணைந்து நடித்த 'ஆடுபுலி ஆட்டம்'படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 1978ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரம் ஜென்மங்கள்', அவரது ஜெண்டல்மேன் ந டிப்பை வெளிப்படுத்தியது.அதே காலகட்டத்தில் தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.இதன் மூலம் 1978ஆம் ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்தார்.
 
இயக்குனர் கலைஞானம் இயக்கிய 'பைரவி' ரஜினிக்கு தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை பதிக்க உதவியது. படம் பார்த்தவர்கள், பத்திரிக்கையாளர்களின் பாராட்டில் இப்படம் மிதந்தது.இந்த படத்தின் மூலம் தான் ரஜினிகாந்த  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்'தாக மாறினார்.  மீண்டும் ரஜினி-கமல் இணைந்து நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படம்,அவரது இயல்பான நடிப்பால் 25 வாரங்களைக் கடந்து ஓடியது.
 இயக்குனர் மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படத்தில் அவர் ஏற்று நடித்த 'காளி' கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும். அடுத்து வெளியான படம் 'பிரியா',  பெரும்பாலான   வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.

சிறிய தடுமாற்றம்:
தொடர்ந்து இடைவெளியின்றியும் தூக்கமின்றியும் இரவு பகல் பாராமல் நடித்து வந்ததால் ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு ரஜினி உள்ளானார்.இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றார்.அவரது நெருங்கிய வட்டாரங்கள் இதை அவரது 'இருண்ட காலமாக' வர்ணித்தது.

ரீ-என்டிரி:
'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் மூலம் ரீ-என்டிரி குடுத்த ரஜினியின் நகைச்சுவை நடிப்பாலும்  பாடல் காட்சிகளாலும் இப்படம் பெரும் ஹிட்டானது. 1979ஆம் ஆண்டு வெளியான 'ஆறிலிருந்து அறுவது வரை' திரைப்படத்தின் மூலம் ஸ்டைல் கதாநாயகனாக வெளிப்பட்ட  ரஜினி யதார்த்த நாயகனாக நடித்து  தமிழ் சினிமாவில் தனக்கென ஓர்இடம் பிடித்தார். அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம், கிருஷ்ணமூர்த்தி இயக்கிய 'பில்லா'. இரட்டை வேடத்தில் ரஜினி நடித்த இப்படம், அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது. மீண்டும் இரட்டை வேடங்களில் ரஜினி நடித்து மகேந்திரன் இயக்கிய 'ஜானி' பெரும் வெற்றி பெற்றது.
அதே ஆண்டில் வெளியான 'முரட்டு காளை', அவரது அசாத்திய நடிப்பாலும் அதுவரை ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் வில்லனாக நடித்ததும் அப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.
 
திருமண வாழ்க்கை:
'பொல்லாதவன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில்  சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவிகள், ஒரு  சிறப்பிதழிற்காக ரஜினியைப் பேட்டியெடுக்க வந்தனர்.அப்போது தமிழ்,ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சரமாரியாக கேள்விகளைக் கேட்ட மாணவி ஒருவர் ரஜினியை அசத்தினார்.அப்போது அவர் கேட்ட ஒரு கேள்வி,"உங்களுக்கு எப்போது திருமணம்?".அதற்கு, "உங்களை போல ஒரு பெண்ணைப் பார்த்தவுடன்" என்று ரஜினி கூறிய பதில் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்னர், திருமணத்தில் முடிந்தது.அந்த பெண். ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கையான லதா. இறுகுடும்பத்தினரின் சம்மதத்துடன் 26-02-1981 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் நடைபெற்றது.அதுவரை 'போக்கிரிராஜா'வாக இருந்த ரஜினி திருமணத்திற்கு பிறகு 'புதுக்கவிதை' எழுதத் தொடங்கினார்.

மீண்டும் சினிமா:
1981ஆம் ஆண்டு வெளியான  'தில்லு முல்லு' படத்தின் மூலம் தனது நகைச்சுவை நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.

1982ஆம் ஆண்டு R.M.வீரப்பனின் இயக்கத்தில் சத்திய மூவிஸ் தயாரித்த படம்  'மூன்று முகம்'. இப்படத்தில் டிரிபிள் ஆக்ஷனில் நடித்த ரஜினிக்கு பாராட்டல்களும் விருதுகளும் குவிந்தன.

1984ஆம் ஆண்டு வெளியான 'தங்கமகன்','நான் மகான் அல்ல','தம்பிக்கு எந்த ஊரு' போன்ற படங்கள் தொடர் வெற்றியை அளித்தது. அதேபோல் 'கை கொடுக்கும் கை','அன்புள்ள ரஜினிகாந்த்','உன் கண்ணில் நீர்வழிந்தால்' போன்ற படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவின.
 
1984இல்  அவர் நடித்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் இளமை முதுமை என இரண்டு வயதினரையும் கவர்ந்தார்.இப்படத்திற்காக விருதுகளையும் பெற்றார்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ரஜினி, தீவிர ராகவேந்திரர் பக்தன்.அதற்கேற்ப அவரது 100வது படமாக 'ஸ்ரீ ராகவேந்திரர்'  அமைந்து, இப்படம் அவரது சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியது.

பின்னர் வந்த 'மிஸ்டர் பாரத்' மீண்டும் அவரது துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியது. 'மாவீரன்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ரஜினி அடியெடுத்து வைத்தார். இந்தப்படம் கலந்த விமர்சனத்துக்கு உள்ளானது. 1987ஆம் ஆண்டு வெளியான 'மனிதன்', 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.  எஸ்.பி. முத்துராமன் மீண்டும் அவர் நடித்த 'குரு சிஷியன்' 25  நாளில் நடித்து முடித்தார்.இப்படத்தில் பிரபு,வினுச்சக்கவர்த்தியுடன்  அவர் நடித்த நகைச்சுவைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. பின்னர் அவர் நடித்து வெளியான 'தர்மத்தின் தலைவன்','ராஜாதி ராஜா','ராஜ சின்ன ரோஜா','மாப்பிள்ளை' போன்ற படங்கள் அவருக்கு நல்ல வெற்றியைத் தேடித்தந்தது.

1988ஆம் ஆண்டு 'பிளட்ஸ்டோன்' என்ற ஹாலிவுட் படத்திலும் ரஜினி நடித்தார், 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும் மலையாள நட்சத்திர நடிகர் மம்மூட்டியும் இணைந்து நடித்த 'தளபதி' மாபெரும் வெற்றிபெற்றது. தாய்-மகன் பாசம், நண்பனுடன் நேசம் என அனைத்திலும் ரஜினி ஜொலித்தார். 1992ஆம் ஆண்டு 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் வெளியான 'மன்னன்' வசூலைக் குவித்தது.

ரஜினியின்  கலைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'அண்ணாமலை'.இப்படத்தின் வசனம்,நடிப்பு அதில் கூறப்பட்ட சில செய்திகள் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் வெளியான 'எஜமான்' பெரும் வெற்றிபெற்றது. 1995ஆம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' தமிழ் சினிமாவின் மைல் கல்லாகவே கருதப்படுகிறது.இப்படத்தில் அவர் பேசிய பன்ச் வசனங்கள்  ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் அவரது 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்த்தையும் உயர்த்தியது. இத்திரைப்படம் கோவையில் 365 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனைப் படைத்தது. அடுத்து வெளியான 'முத்து', பெரும் கமர்ஷியல் வெற்றி பெற்றது.இப்படம் மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜப்பானில் வெளியாகி 23 வாரங்கள் ஓடியது.

1999ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜியுடன் ரஜினி கடைசியாக நடித்த 'படையப்பா' 200 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வசூல் சாதனைப்படைத்தது. இப்படத்தின் பன்ச் வசனங்களும் பாடல் வரிகளும் நல்ல கருத்துகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டு ரஜினி தயாரித்து பல தடைகளைத் தாண்டி வெளியான திரைப்படம் 'பாபா'.தனது ஆன்மீக ஈடுபாட்டையும் அரசியலில் ஈடுபடுவது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இப்படம் அமைந்தது. வசூல் ரீதியில் பெரும் தோல்வியைத்தழுவியது. இப்படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினார் ரஜினி.
 
2005ஆம் ஆண்டு வெளியான பி.வாசு இயக்கத்தில் வெளியான 'சந்திரமுகி' மெகாஹிட் ஆனது. இப்படம் சென்னை சாந்தி திரையரங்கில் 800 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனைப்படைத்தது.

2007இல் ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'சிவாஜி' சமூக கருத்துகளை தெரிவித்து மாபெரும் கமர்ஷியல் வெற்றி பெற்றது .பின்னர் வெளியான 'குசேலன்' பெரும் தோல்வியை சந்தித்தது.

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கவைத்து உலக அளவில் மெகா ஹிட்டானது.ரஜினி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வில்லனாக ரோபோ வடிவில் நடித்து அதகளப்படுத்தினார்.

உடல் நிலை பாதிப்பு:
2011ஆம்  ஆண்டு  மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சுவாச பிரச்சனையால் சிங்கப்பூர் சென்று உயர் சிகிச்சை பெற்றார்.
 
மீண்டும் களத்தில்: 
உடல்நிலை தெளிவுற்றவுடன் ஷாரூக் கான் நடித்த 'ரா.ஒன்' படத்தில் 'சிட்டி' ரோபோவாக சிறப்பு தோற்றம் அளித்தார். இந்திய திரையுலகிலேயே மோஷன் கேப்சர்  கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம், 2014ஆம் ஆண்டு ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'கோச்சடையான்'.அதே ஆண்டில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'லிங்கா'பெரும் தோல்வியுற்றது.
 
2016ஆம்  ஆண்டு, இளம் இயக்குனர் பா.ரஞ்சித் உடன் கை கோர்த்து  ரஜினி நடித்த 'கபாலி' தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
 
தற்போது இணயக்குனர் ஷங்கருடன்  எந்திரன் இரண்டாம் பாகமான '2.௦'விலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'காலா'விலும்  ரஜினி நடித்து வருகிறார்.
 
குடும்ப வாழ்க்கை:
ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா  நடிகர் தனுஷை   திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இளைய மகள் சௌந்தர்யா, தொழிலதிபர் அஸ்வின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். சௌந்தர்யாவிற்கும் அவரது கணவருக்கும் இந்த ஆண்டு விவாகரத்தானது.
 
விருதுகள்:
1984ஆம் ஆண்டு-தமிழக அரசின்'கலைமாமணி'விருதும், எம்.ஜி.ஆர்.விருதும் பெற்றார். அதே ஆண்டில் 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படத்திற்காக 'பிலிம் பேர்' விருது பெற்றார்.

2000 ஆண்டில் மத்திய அரசு 'பத்ம பூஷன்' விருது வழங்கி சிறப்பித்தது.

2007ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா அரசு 'ராஜ் கபூர்' விருதை வழங்கியது.

2016ஆம் ஆண்டு மத்திய அரசு 'பத்ம விபூஷண்' விருதை வழங்கி சிறப்பித்தது.
 
அரசியல் ஈடுபாடு:
'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி சமூக பொறுப்புடன் பேசிய வார்த்தைகள், அந்நாட்களில் தமிழத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனால் ரஜினி அரசியலில் நுழைவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.
  
2000 ஆண்டில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கோரி கர்நாடக அரசை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.அப்போது நதி நீர் இணைப்பை வலியுறுத்தி கங்கை-காவேரி நதிகளை இணைக்க ஒரு கோடி ருபாய் தருவதாக அறிவித்தார்.

சமூக சேவை:
சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரர் கல்யாண மண்டபம் என்ற பெயரில் மண்டபம் ஒன்றை தன் செலவில் கட்டினார். வருடம் தோறும் அதில் இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார்.

''ரஜினிகாந்தை நம்பி, அவரோடு இணைந்தேன். ஆனால்...'' - விளக்குகிறார் அர்ஜுனமூர்த்தி
த.கதிரவன்

''ரஜினிகாந்தை நம்பி, அவரோடு இணைந்தேன். ஆனால்...'' - விளக்குகிறார் அர்ஜுனமூர்த்தி

வாய்ஸ் அரசியலுக்கு இழுக்கும் கமல்! - ரஜினியின் மைண்ட் வாய்ஸ் என்ன?
அழகுசுப்பையா ச

வாய்ஸ் அரசியலுக்கு இழுக்கும் கமல்! - ரஜினியின் மைண்ட் வாய்ஸ் என்ன?

“எனது ஒட்டுமொத்த அறிவும் தமிழகத்துக்கே!” - ‘அடேங்கப்பா’ அர்ஜுனமூர்த்தி...
த.கதிரவன்

“எனது ஒட்டுமொத்த அறிவும் தமிழகத்துக்கே!” - ‘அடேங்கப்பா’ அர்ஜுனமூர்த்தி...

ரஜினி வீட்டில் கமல்... மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டாரா?!
நமது நிருபர்

ரஜினி வீட்டில் கமல்... மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டாரா?!

EXCLUSIVE: Narrated Dhruva Natchathiram to Rajini Sir - Gautham Vasudev Menon | GVM
Gopinath Rajasekar

EXCLUSIVE: Narrated Dhruva Natchathiram to Rajini Sir - Gautham Vasudev Menon | GVM

"இங்கே நிம்மதி கிடைக்குது சாமி'' - இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் ரஜினி!
நா.கதிர்வேலன்

"இங்கே நிம்மதி கிடைக்குது சாமி'' - இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் ரஜினி!

தனுஷுக்கு ஏன் போயஸ் கார்டனில் வீடு பார்த்தார் ரஜினி?!
நமது நிருபர்

தனுஷுக்கு ஏன் போயஸ் கார்டனில் வீடு பார்த்தார் ரஜினி?!

போயஸ் கார்டனில் புது வீடு... லாஸ் ஏஞ்சலீஸில் THE GRAY MAN ஷூட்டிங்... தனுஷ் பிளான் என்ன?
தேனூஸ்

போயஸ் கார்டனில் புது வீடு... லாஸ் ஏஞ்சலீஸில் THE GRAY MAN ஷூட்டிங்... தனுஷ் பிளான் என்ன?

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

"ரஜினிக்கிட்ட அடிவாங்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்!" -Shihan Hussaini
Gopinath Rajasekar

"ரஜினிக்கிட்ட அடிவாங்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்!" -Shihan Hussaini

ஷங்கரின் `எந்திரன்’ கதை யாருடையது... `நோ கமென்ட்ஸ்' சொன்னாரா ரஜினி? #Endhiran
அய்யனார் ராஜன்

ஷங்கரின் `எந்திரன்’ கதை யாருடையது... `நோ கமென்ட்ஸ்' சொன்னாரா ரஜினி? #Endhiran

மீண்டும் 'அண்ணாத்த' ஸ்பாட்டில் ரஜினி, அனல்பறக்கும் ஏப்ரல் ரிலீஸ், சென்னை டெஸ்ட்டில் ரசிகர்கள்?!
தேனூஸ்

மீண்டும் 'அண்ணாத்த' ஸ்பாட்டில் ரஜினி, அனல்பறக்கும் ஏப்ரல் ரிலீஸ், சென்னை டெஸ்ட்டில் ரசிகர்கள்?!