ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்
இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இவர் 25.7.2017 அன்று இந்தப் பதவியை ஏற்றுள்ளார். இவர், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குடியரசு தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்தலில் வெற்றிபெற்றார்.
கல்வி :
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 1, 1945-ம் ஆண்டு பிறந்தவர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்றார். தில்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
பணி:
1971-ம் ஆண்டு, புதுதில்லியில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, இலவச சட்ட உதவி மூலம் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு பல உதவிகளைச் செய்தார். 1977-78-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்க்கு தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்தவர்.
அரசியல்:
1991-ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினரானார். 1994-ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஆண்டுகள் எம்.பி.-யாக இருந்தபோது அமெரிக்கா, பாகிஸ்தான், ஜெர்மனி, ஐரோப்பா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்துள்ளார்.
பதவிக்காலம்:
அடுத்த ஐந்து வருடங்களுக்கு குடியரசுத் தலைவர் பதவியில் ராம்நாத் கோவிந்த் நீடிப்பார்.
- ஜெ.ஆபிரகாம் (மாணவப் பத்திரிகையாளர்)

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு - யார் இவர்? | முழுப் பின்னணி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்கள் - வங்கதேச பிரதமரின் பரிசு

திரெளபதி முர்மு, தமிழிசை, அனுசுயா... பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ரேஸில் யார் யார்?!

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கணக்கு... வெற்றி சாத்தியமாகுமா?!

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களம் காண்கிறாரா சரத் பவார்?

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? - முழு விவரம் இதோ!

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக, காங்கிரஸ் `திட்டம்’ என்ன?

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்! - குடியரசுத் தலைவர் உத்தரவு

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக-வுக்கு டஃப் கொடுக்க, எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?!
புகார்க் கடிதம்; அண்ணாமலை டு அமித் ஷா; ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டு டிஜிபி -டெல்லி செல்லும் ஆளுநர்
