அஸ்வின் ரவிச்சந்திரன்

அஸ்வின் ரவிச்சந்திரன்

அஸ்வின் ரவிச்சந்திரன்

"கேரம் பால் "அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில்   2 பேர் அவற்றில் இவரும் ஒருவர். மேலும் டெஸ்டில் மிகவேகமாக 50, 100, 150, 200, 250 விக்கெட்டுகளைவீழ்த்திய ஒரே இந்திய நபர் அஸ்வின். 

குடும்பம்:

19- செப்டம்பர் 1986 சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படிப்பை முடித்தார். பி.டெக் ஐ.டி பிரிவை எஸ். எஸ்.என் கல்லூரியில் முடித்தார். வேகப்பந்து வீச்சாளரான இவரது அப்பா ரவிச்சந்திரன், கிளப் அகாடமி நடத்தி வருகிறார்.  அம்மா பெயர் சித்ரா .அஸ்வின் அதிகம் ஓடி பந்து வீச கூடாது என்பதற்காக ஸ்பின் பவுலிங்கைதேர்வு செய்ய வைத்தார்.  13. நவம்பர் 2011 அன்று பிரித்தி நாராயணன் என்ற பள்ளிப்பருவ தோழியை கல்யாணம் செய்தார். இவர்களுக்கு அகுரா, ஆத்யா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

பவுலிங் ஸ்டைல்:

அஸ்வின், ஏகப்பட்ட பந்தின் சுழற்சியை பிட்சுக்கு செல்வதற்கு முன்னே இடையில் உருவாக்குபவர்.
உதாரணமாக, ஆர்ம் பால், 
கேரம்பால், 
லெக் பிரேக்,
கூக்ளி,
தூஷ்ரா ஆகியவை.   

கிரிக்கெட் பாதை:

ஆரம்பம் : 
சர்வதேச ஒரு நாள் போட்டி: இந்தியா Vs இலங்கை ஜூன் 05, 2010

டெஸ்ட்: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் நவம்பர், 2011

டி20 : இந்தியா 20 : இந்தியா Vs ஜிம்பாப்வே ஜூன் 12, 2010 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் ஏப்ரல் 18 2009.

ஐபிஎல் :

இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் மிகச் சிறந்த பவுலர்களில் அஸ்வினும் ஒருவர். 2010 ம் ஆண்டு, சிஎஸ்கே அணிக்காக விளையாடி , அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையையும், தொடர் நாயகன் விருதையும் வென்றார். மேலும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்கு விளையாட ரூ 7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.    

சிஎல் டி20 :

அதிக முறை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 4 முறை விளையாடியவர்.

ஒரு நாள் போட்டி:

2011ம் ஆண்டு உலகப் கோப்பைவென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்திய அணிக்காக 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளையும் 674 ரன்களையும் எடுத்துள்ளார். சிறந்து பந்து வீச்சு 4/25 .ஒரு அரைசதமும் அடித்துள்ளார்.  

டெஸ்ட் போட்டி:

49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 275 விக்கெட்டுகளையும், 4சதமும், 10 அரை சதமும் எடுத்துள்ளார். 5விக்கெட்டுகள் 25  முறையும் , 10 விக்கெட்கள் 7 முறையும், சிறந்த பந்து வீச்சாக 7/59 பதிவுசெய்துள்ளார். முதல் டெஸ்ட் தொடரிலே தொடர் நாயகன் விருதை பெற்றார்.  முதல் டெஸ்டிலே 5 விக்கெட்கள், அடுத்த டெஸ்ட் போட்டியிலும் 2 முறை  5 விக்கெட் மற்றும் சதமும் அடித்து ஆட்டநாயகன் விருதையும்பெற்றார் .2010 -2010 - நியூசிலாந்து எதிராக டெஸ்ட் போட்டியின் போது 5-0 என்று ஒயிட் வாஷ் செய்தனர். அந்த தொடரில் அதிக விக்கெட்களைகைப் பற்றி, தொடர் நாயகன் விருதையும் வென்றார் அஸ்வின். தனது 18 வது போட்டியில் 100 வது விக்கெட் எடுத்து 80 வருடங்களுக்கு முன் செய்த சாதனையை முறியடித்தார் அஸ்வின். 2015ல் 150 விக்கெட்களையும், 2016ல் இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றி 200 வது விக்கெட்டை பூர்த்தி செய்தார். 

விருதுகள் :

  • 2014 ஆம் ஆண்டு அர்ஜீனா விருது,
  • 2016 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஐசிசிடெஸ்ட் கிரிக்கெட் வீரர்.  

டிவிட்டர் :
4.9 மில்லியன் ரசிகர்கள் அஸ்வினை பின் தொடர்கிறார்கள் டிவிட்டரில் ...

`இந்த Industry-யே ரொம்ப Male Dominated; அதனாலதான்..!' - Baby Photographer Amrita | Mommy Shots | BTS
வெ.அன்பரசி

`இந்த Industry-யே ரொம்ப Male Dominated; அதனாலதான்..!' - Baby Photographer Amrita | Mommy Shots | BTS

``ஓய்வு பெற்றுவிடலாம் என்று பலமுறை நினைத்ததுண்டு"- மனம் திறக்கும் ரவி அஷ்வின்
Mouriesh SK

``ஓய்வு பெற்றுவிடலாம் என்று பலமுறை நினைத்ததுண்டு"- மனம் திறக்கும் ரவி அஷ்வின்

தரவுகள் சொல்லும் தவிர்க்க முடியாத வரலாறு... அஷ்வின் எனும் போற்றப்படாத போர்வீரனின் சாதனைகள்!
அய்யப்பன்

தரவுகள் சொல்லும் தவிர்க்க முடியாத வரலாறு... அஷ்வின் எனும் போற்றப்படாத போர்வீரனின் சாதனைகள்!

உள்ளே கோலி, வெளியே யார்? மழை அச்சுறுத்தலுக்கு நடுவே தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்! #INDvNZ
Mouriesh SK

உள்ளே கோலி, வெளியே யார்? மழை அச்சுறுத்தலுக்கு நடுவே தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்! #INDvNZ

IND vs NZ | நூலிழையில் வெற்றியைப் பறித்த சூரிய ஒளி...  கடைசி செஷனில் நடந்தது என்ன?!
Mouriesh SK

IND vs NZ | நூலிழையில் வெற்றியைப் பறித்த சூரிய ஒளி... கடைசி செஷனில் நடந்தது என்ன?!

IND v AFG: டாஸ் வெல்லவில்லைதான், ஆனால் ஆட்டத்தை வென்ற கோலியின் படை! அரையிறுதி கைகூடுமா?
கார்த்தி

IND v AFG: டாஸ் வெல்லவில்லைதான், ஆனால் ஆட்டத்தை வென்ற கோலியின் படை! அரையிறுதி கைகூடுமா?

பவர் ப்ளே - 7 | அதிகார தோரணையும், அஷ்வினின் மிரட்டலும்… இயான் மார்கனை பகைத்துக் கொள்ளலாமா?
தினேஷ் அகிரா

பவர் ப்ளே - 7 | அதிகார தோரணையும், அஷ்வினின் மிரட்டலும்… இயான் மார்கனை பகைத்துக் கொள்ளலாமா?

வாசகர் மேடை: இதுக்காகவா காத்திருந்தோம்!
விகடன் டீம்

வாசகர் மேடை: இதுக்காகவா காத்திருந்தோம்!

DC v RR: ஒற்றை ஆளாக வெள்ளையடித்த கோவாலு சஞ்சு சாம்சன்... பிளேஆப் குஷியில் டெல்லி! | IPL 2021
நித்திஷ்

DC v RR: ஒற்றை ஆளாக வெள்ளையடித்த கோவாலு சஞ்சு சாம்சன்... பிளேஆப் குஷியில் டெல்லி! | IPL 2021

ரவிச்சந்திரன் அஷ்வின் - நவீன கிரிக்கெட்டுக்கு இந்த தனி ஒருவன் ஏன் முக்கியம்?! #HappyBirthdayAshwin
Pradeep Krishna M

ரவிச்சந்திரன் அஷ்வின் - நவீன கிரிக்கெட்டுக்கு இந்த தனி ஒருவன் ஏன் முக்கியம்?! #HappyBirthdayAshwin

ENG Vs IND : 78 ரன்களில் இந்தியா ஆல் அவுட்... இங்கிலாந்து ஆதிக்கம்! LIVE UPDATES
விகடன் டீம்

ENG Vs IND : 78 ரன்களில் இந்தியா ஆல் அவுட்... இங்கிலாந்து ஆதிக்கம்! LIVE UPDATES

பவர் ப்ளே-2 : அஷ்வினை ஏன் விலக்குகிறார் விராட் கோலி... தலைசிறந்த ஸ்பின்னருக்கு நிரந்தர இடம் இல்லையா?
தினேஷ் அகிரா

பவர் ப்ளே-2 : அஷ்வினை ஏன் விலக்குகிறார் விராட் கோலி... தலைசிறந்த ஸ்பின்னருக்கு நிரந்தர இடம் இல்லையா?