ரித்திகா சிங்

ரித்திகா சிங்

ரித்திகா சிங்

ஒரு குத்துச் சண்டை வீராங்கனையின் திரை பிரவேசம் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் , தமிழ் சினிமா அவரை தேசிய விருது வரை கூட்டி சென்றது கொஞ்சம் எதிர்பாராத ஒன்று தான். ரித்திகா சிங் வளர்ந்து வரும் இளம் நடிககைகளில் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய நடிகை.

பிறப்பு :
1994 ஆம் ஆண்டு டிசம்பர் 16ல் தான் குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் பிறந்தார். ரித்திகா சிங் படித்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான்.

கல்வியும் , இளமையும் :
தானே நகரத்தில் பிறந்த ரித்திகா சிங், கல்யாண் நகரத்தில் உள்ள K.C.காந்தி ஆங்கிலேய பள்ளியில் படித்தவர். ரித்திகா சிங்கின் தந்தை மோகன்  குத்துச்சண்டையை கற்றுகொண்டதோடு மட்டுமல்லாமல் , இவர் ஒரு பயிற்சியாளரும் கூட. அப்படிப்பட்ட ஒருவர் தன் மகளுக்கும் குத்துச்சண்டை , கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுகொடுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு தேசிய அளவிலான ஆசிய உள்ளரங்கு போட்டியில் 52 கிலோவிற்கான பிரிவில் கலந்துகொண்டார் ரித்திகா சிங் இதைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் , ஈரான் , வியட்நாம் போன்ற பல நாடுகளில் குத்துச்சண்டையில் கலக்கிக் கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் சினிமாக் காற்று மெல்ல வீசத் தொடங்கியது.

சினிமா பிரவேசம் :
Super fight league challengers (SFL CHALLENGERS) என்னும் நேரலை நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திக் கொண்டிருக்க, அதில் ஒரு பங்கேற்பாளராக தான் ரித்திகா சிங் சினிமாக்குள் நுழைந்தார்.

இறுதிச்சுற்று பட வாய்ப்பு :
இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கே பிரசாத், தன் கதைக்கான சிறந்த கதாநாயகியைத் தேடி 150க்கும் மேற்பட்டவர்களை நேர்காணல் செய்தும் திருப்தி இல்லாமல் இருக்கும் நிலையில் தான் ரித்திகா சிங் படக்குழுவினரால் இறுதிச்சுற்று நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். தமிழ் படத்தில் கதாநாயகி என்றவுடன் எல்லோருக்கும் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும் , ஆனால் ரித்திகா சிங் அது எதுவுமே இல்லாமல் தன்னுடைய துடிப்பான பேச்சாலும் , இயல்பான நடிப்பாலும் எல்லோரையும் தன் முதல் படத்திலே வசப்படுத்திவிட்டார். இதைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை என்னும் படத்தில் இயல்பான ஒரு பத்திரிக்கையாளராகவும், சிவலிங்கா ( படத்தில் பேயாகவும் நடித்திருந்தார். தற்போது இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஒரு வலம் வர ஆரம்பித்திருக்கிறார் ரித்திகா சிங்.

சிறப்புகள் :
·         ரித்திகா கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியவர்.

·         2011ல் ஈரானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வாங்கியவர்.

·         இவர் ஒரு சர்வதேச கராத்தே வீராங்கனை.

·         இவர் குத்துச்சண்டை வீராங்கனையும் கூட.          

·         இறுதி சுற்று படத்திற்காக 2016ல் இவருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.  

SIIMA 2022: விருது விழாவிற்கு கலர் கலர் காஸ்ட்யூமில் வந்த நடிகைகள்|Photo album
நந்தினி.ரா

SIIMA 2022: விருது விழாவிற்கு கலர் கலர் காஸ்ட்யூமில் வந்த நடிகைகள்|Photo album

“ஒரே படத்தில் 40 ப்ளாஷ்பேக்!”
உ. சுதர்சன் காந்தி

“ஒரே படத்தில் 40 ப்ளாஷ்பேக்!”

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

‘சூது கவ்வும்’ 2 வருமா?
உ. சுதர்சன் காந்தி

‘சூது கவ்வும்’ 2 வருமா?

அட்வைஸ் செய்த சிம்பு: ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பகிர்ந்த த்ரிஷா! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்
ச. ஆனந்தப்பிரியா

அட்வைஸ் செய்த சிம்பு: ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பகிர்ந்த த்ரிஷா! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

“நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது கஷ்டம்!”
உ. சுதர்சன் காந்தி

“நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது கஷ்டம்!”

ரித்திகாவுக்கு புரபோஸ் பண்ணது யாரு?
உ. சுதர்சன் காந்தி

ரித்திகாவுக்கு புரபோஸ் பண்ணது யாரு?

சினிமா விமர்சனம்: OH MY கடவுளே
விகடன் விமர்சனக்குழு

சினிமா விமர்சனம்: OH MY கடவுளே

``விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார்?" - `ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து
உ. சுதர்சன் காந்தி

``விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார்?" - `ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து