ரிது வர்மா | Latest tamil news about Ritu Varma | VikatanPedia
Banner 1
நடிகை

ரிது வர்மா

தெலுங்கில் ஹிட் அடித்த “பெல்லி சுப்புலு” படத்தில் நடித்தவர். தமிழில் விக்ரமுடன் " துருவ நட்சத்திரம்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் தாய் மொழி இந்தி. ஹைதராபாத்தில் பி.டெக் முடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் தனக்கான இடத்தை பதித்துவிட்டு தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இளம்புயல் .. ரிது வர்மா.

இளமைக்காலம்:
        இவர் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் தெலுங்கானாவில் ஹைத்ராபாத்தில் பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு. மல்லா ரெட்டி பொறியியல் கல்லூரியில் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

காலேஜ் டூ சினிமா:
     படித்து முடித்தவுடன் ‘அனுகோகுண்டா’ என்ற குறும்படத்தில் நடித்தார். ‘48HR FIL PROJECT COMPETITION’ல் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற அக்குறும்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது.பின்னர் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இந்த குறும்படம் திரையிடப்பட்டது.

   இந்த குறுப்படத்திற்கு பின்னர் தான் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் ரிது.முதல் படமாக ‘பிரேம இஷ்க் காதல்’ படம் அமைந்தது. பின்னர் ‘எவடே சுப்ரமணியன்’, ‘நா ரகுமருடு’ ஆகிய படங்களில் நடித்தார்.

புகழ்:
    தொடர்ந்து சின்ன சின்ன கதாபத்திரங்களிலேயே நடித்து வந்த இவருக்கு ‘பெல்லி சுப்புலு’ படத்தில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பின் மூலம் நடிகையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் ரிது. இந்த படத்திற்காக 2016ன் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

கோலிவுட் என்ட்ரி:
     ‘பெல்லி சப்புலு’வில் இவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் கவுதம் மேனன்,தமிழில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இவரை களமிறக்க உள்ளார்.
 

தொகுப்பு : மு.பிரசன்ன வெங்கடேஷ்