ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்

பிறப்பு மற்றும் குடும்பம்: 
             ரோஜர் ஃபெடரர் 1981-இல்  ஆகஸ்ட் 8 அன்று ஸ்விட்ஸர்லாண்டில் உள்ள பேசலில் பிறந்தார். இவரது தந்தை ராபர்ட் ஃபெடரர் ஸ்விட்சரர்லண்ட்  நாட்டை சேர்ந்தவர். தாய் லினெட் டு ராண்ட்  தென் ஆப்ரிக்க நாட்டை சேந்தவர். ஆதலால் இரட்டை குடியுரிமை கொண்டவர்.இவரின் மூத்த சகோதிரி பெயர் டயானா. 

இளவயது விளையாட்டு ஆர்வம்:
               சிறுவயதிலே இயற்கையாக விளையாட்டின் மேல் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் . எட்டு வயது முதலே கால்பந்து, டென்னிஸ், பாட்மிண்டன், கிரிக்கெட் என அணைத்து விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.12 வயதில்  தன் வாழ்க்கை டென்னிஸ் தான் என முடிவு செய்து அதில் மட்டும் பெரும் கவனம் செலுத்த தொடங்கினார். பதினான்கு வயதிலே ஒரு வாரத்தில் ஆறு மணி நேரம் வரை பெரும் பயிற்சி எடுக்க தொடங்கினார். 16 வயதில் டென்னிஸிற்காக தன் படிப்பை தியாகம் செய்தார்.

வெற்றிகளின் தொடக்கம்:
                  14 வயதில் ஸ்விட்ஸர்லாண்ட் நாட்டின் தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் வென்று அந்நாட்டின் தேசிய டென்னிஸ் நிலையத்தில் பயிற்சி பெறுவதற்கு தேர்வு செய்ய பட்டார். 1996-இல் சர்வதேச ஜூனியர் டென்னிஸ் கூட்டமைப்பில் சேர்ந்தார். 16 வயதில் முதல் ஸ்பான்ஸர் பெற்றார். 1998-இல் ஒற்றயர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். அதே ஆண்டு ஆரஞ்சு பௌல் பட்டத்தையும் பெற்று ஐ.டி.எஃ-னால் அவ்வாண்டிற்கான உலகில் சிறந்த ஜூனியர் டென்னிஸ் ஆட்டக்காரராக அங்கீகரிக்க பட்டார்.
அவ்வாண்டே ஜூனியர் பிரிவில் இருந்து ஆடவர் பிரிவில் விளையாட தொடங்கினார். தன் முதல் விளையாட்டை  ஸ்டாட்-இல் விளையாடி தன் வெற்றி பாதைக்கான தொடக்க புள்ளியை உருவாக்கினார். விளையாட தொடங்கிய ஒரு ஆண்டிலே தரவரிசையில் முதல் 100 இடத்திற்கு முன்னேறினார்.

சரமாக நீண்டது சாதனையும் வெற்றியும்:

                   2001-ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன்-இல்  நான்காவது சுற்றில் டென்னிஸ் உலகின் நாயகனான பேட் ஸம்ப்ரஸ்-ஐ  வீழ்த்தி உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். 2004-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.  1988-ஆம் ஆண்டில் விளையாடிய விளந்தர்க்குப் பின் ஒரே ஆண்டில் மூன்று பட்டத்தையும் வென்றவர் இவரே ஆவர் . 2005-ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் அமெரிக்க ஓபன்  பட்டத்தையும் வென்று தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவ்வாண்டே  4 எ.டி.பி 1000 புள்ளிகள் தொடர்களையும்.3.எ.டி.பி  500 புள்ளிகள் தொடரையும் வென்றார். அவ்வாண்டு மொத்தமாக 11 ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டங்களை வென்றார் .

தொடரும் பட்டங்கள்:

பட்டம் வென்ற ஆண்டுகள் :
ஆஸ்திரேலிய ஓபன்: 2004,2006,2007,2010,2017
விம்பிள்டன் : 2003,2004,2005,2006,2007,2009,2012,2017
பிரெஞ்சு ஓபன்:2009
அமெரிக்க ஓபன்: 2004,2005,2006,2007,2008
துபாய் சாம்பியன்ஷிப் :2003,2004,2005,2007,2012,2014,2015
2008 பெய்ஜ்ய்ங் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார் 
2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார்.
2014 ஆம் ஆண்டு தன் தாய் நாட்டிற்காக டேவிஸ் கோப்பையை வென்று தந்தார்.

சாதனைகளாக மாறிய வெற்றிகள்:
   2009-அம்  ஆண்டு விம்பிள்டன் வெற்றி அவரது 15-ஆவது கிராண்ட்ஸ்லாம் வெற்றி. இதன் மூலம் அவர் ஸம்ப்ரஸின் சாதனையை முறியடித்தார்.

   2009-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் வெற்றியின் மூலம் அணைத்து கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்ற ஆறாவது வீரர் ஆனார் ஃபெடெரெர்

    2012- ஆம் ஆண்டு ஏழாவது  விம்பிள்டன் பட்டத்தை வென்று மீண்டும் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் 302 வாரங்கள் முதல் இடத்தில இருந்த முதல் வீரர் என்னும் பெருமையை பெற்றார். 2004-2008 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட பெருமையும் இவரையே சேரும்.

    2007-ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் வெற்றியின் மூலம் ஒரு செட்டை கூட இழக்காமல் வெற்றி பெற்ற முதல் வீரர் ஆனார். 2004,2006,2007 என மூன்று ஆண்டுகளும் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் வீரர் இவர் 

    ஜோர்ன் போர்கிற்கு பின் ஐந்து முறை தொடர்ச்சியாக விம்பிள்டன் பட்டத்தை வென்றவரும் இவரே. 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் வெற்றி அவரை அதிக வயதில் இப்பட்டத்தை வென்ற இரண்டாவது மனிதர் என்ற பெருமையை இவருக்கு தந்தது

    2017-ஆம் ஆண்டு விம்பிள்டன் மூலம் அதிக வயதில் இப்பட்டதை வென்றவர் பெடெரெர் தொடர்ந்து 23 கிராண்ட் ஸ்லாம்களின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரரும் இவர் ஆவர்.

    2015-இல் 1000 வெற்றிகளை பெற்ற மூன்றாவது வீரர் ஆனார். பதினைந்து வருடங்களாக தொடர்ந்து  ஒரு பட்டதையேனும் வென்ற முதல் வீரர் இவர்.

    ஏஸ் மன்னன் என அறியப்படும் இவர் 9734 ஏஸ்களை அடித்துள்ளார். இதன் மூலம் 9000 ஏஸ்களை கடந்த நான்காவது வீரர் ஆகிறார். தொடர்ச்சியாக நான்கு ஏஸ்களை 47 நொடிகளில் அடித்தவர்  

     தோல்விடைந்தவரின்  புள்ளிகள் வெற்றியாளரை விட அதிகமாக இருக்கும் தருணத்தை சிம்ப்சன் பாரடாக்ஸ் என்று அழைப்பர். அதில் மோசமான எண்ணிக்கையை கொண்டுள்ளார் இவர் 
    

ஃபெடெரெரை  உலுக்கிய வழிகாட்டியின் மரணம்:
         விளையாட்டரங்கில் நன்னடத்தைக்கு பெயர் போன ஃபெடெரெர் தன் பால்ய வயதில் அரங்கில் முரட்டு தனமாக நடந்து கொண்ட தருணங்கள் பல உண்டு. அரங்கில் அமைதியாக இருக்க எப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் இவரது முதல் பயிற்சியாளர் பால் கார்ட்டர் ஒரு சாலை விபத்தில் இறக்க நேரிட அது அவருக்கு மிக பெரிய தாக்கதை ஏற்படுத்தியது. அன்று முதல் அவர் விளையாட்டு அரங்கில் என்றும் நிதானம் இழந்தததில்லை. சிறந்த வீரராக மட்டும் அல்லாமல் சிறந்த மனிதராகவும் அறியப்படும்  இவரைப் பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் மிக குறைவே.

டென்னிசை தாண்டி:
           ரோஜர் ஃபெடெரெர் பியானோ மற்றும் குழல் வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். தன் ஓய்வு நேரத்தில் பியானோ வாசித்து ரசிப்பார். லுகிறீன் விழாவில் குழல் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர்.கால்பந்திலும் நீச்சலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  அவர் சொந்த ஊர் அணியான எப்.சி.பசேலின் ரசிகர் ஆவர் .இவர் ஸ்விஸ் ஜெர்மன், ஜெர்மன்,ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை சரளமாக பேசுவார்.14 வயது வரை சைவ உணவு மட்டுமே உண்டார். நடால், டைகர் வூட்ஸ், குவென் ஸ்டிபன்  ஆகியவர்களுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர். 2003 ஆம் ஆண்டு  ஃபெடெரெர் ஃ பௌண்டஷன் என ஒரு இயக்கத்தை தொடங்கி ஆப்பிரிக்காவிலும் ஸ்விட்ஸ்ர்லாந்திலும் இருக்கும் மக்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டிற்க்கான உதவிகளைச் செய்து வருகிறார். UNICEF-இன் தூதுவராகவும் உள்ளார். மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு சமமான பரிசு தொகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

        மொத்த சொத்து மதிப்பீடு 320 மில்லியன் டாலர் என கணக்கிடபட்டுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் இவர். போர்ப்ஸ் பத்திரிகை உலகின் இரண்டாவது பணக்கார வீரராக இவரைக் கூறியுள்ளது.

      ஜில்லெட்,ரோலெக்ஸ், நிக்,லிண்ட்,வில்சன் என பல நிறுவனங்களுக்கு பிராண்ட் தூதராக உள்ளார். 2010 இல் பென்ஸ் சீனா உடன் இவரது நிறுவனம் பங்குதாராக இணைந்தது.

     புற்று நோய் பாதிக்கப்பட்டவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடன் ஒரு நாள் நேரம் செலவழித்தார். அவரைப் பிற வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு கண் கலங்கினார் ஃபெடெரெர்  

        2007-ஆம் ஆண்டு  இவர் பெயரில் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது சுவிஸ் நாட்டு தபால் துறை. வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தனி நபரின் பெயரில் அந்நாட்டில் தபால் தலை வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.

             ஜெர்மனியில் நடக்கும் புகழ் பெற்ற கெர்ரி வெபர் ஓபனை எட்டு முறை வென்றதை கவுரவப்படுத்த 2012-ஆம் ஆண்டு அந்நகரத்தில் வெஸ்டராஸீ என்று அழைக்கப்படும் சாலையை ரோஜர் ஃ பெடெரெர் அல்லீ என மாற்றி அமைத்தனர்.

பெற்ற விருதுகள்:

    2004,2006,2007 ஆண்டுகளுக்கான பிபிசி-யின் வெளிநாட்டு விளையாட்டு  பிரபலம் விருதினை பெற்றார் 
    லாரேஸ் உலக விளையாட்டு வீரர் பட்டத்தை 2005 முதல் 2008 வரை தக்க வைத்து கொண்டிருந்தார்.
    நெல்சன் மண்டேலாவிற்கு அடுத்து உலகின் அதிகம் மதிக்கப்படும் மனிதர் என கண்டறியப்பட்டார் .

குடும்பம்:
      இவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான மிர்காவை மணந்து கொண்டார். இரண்டு இரட்டையர்களைக் கொண்டு  நான்கு குழந்தைகளுக்கு தந்தை. பெண் குழந்தைகளின் பெயர்கள் மைலா மற்றும் சார்லீன். ஆண் குழந்தைகளின் பெயர்கள் லியோ மற்றும் ஹென்னி 

 `90-ஸ் கிட்ஸ்'  கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா? #Tennis
வருண்.நா

`90-ஸ் கிட்ஸ்' கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா? #Tennis

ஒரே ஷாட்... ஒரே பாயின்ட்... ஆட்டம் மாறியது... மாற்றியது ஜோக்கோவிச் எனும் மாவீரன்! #Australianopen
ராம் கார்த்திகேயன் கி ர

ஒரே ஷாட்... ஒரே பாயின்ட்... ஆட்டம் மாறியது... மாற்றியது ஜோக்கோவிச் எனும் மாவீரன்! #Australianopen

இவன் கடைசி துளி ரத்தமும் வியர்வையாய் விழும்... நடால் எனும் அற்புதன்! #Rafa #USopen
மு.பிரதீப் கிருஷ்ணா

இவன் கடைசி துளி ரத்தமும் வியர்வையாய் விழும்... நடால் எனும் அற்புதன்! #Rafa #USopen

`விராட் கோலியின் உதவிமட்டும் கிடைக்காவிட்டால்..!’ அமெரிக்க ஓப்பனில் கலக்கிய சுமித் நாகல் நெகிழ்ச்சி
தினேஷ் ராமையா

`விராட் கோலியின் உதவிமட்டும் கிடைக்காவிட்டால்..!’ அமெரிக்க ஓப்பனில் கலக்கிய சுமித் நாகல் நெகிழ்ச்சி

`ஃபெடரருக்கு எதிராக நம்பிக்கை தந்த இந்தியர்!’- யார் இந்த `ஜூனியர் விம்பிள்டன்’ சாம்பியன் சுமித்?
பிரேம் குமார் எஸ்.கே.

`ஃபெடரருக்கு எதிராக நம்பிக்கை தந்த இந்தியர்!’- யார் இந்த `ஜூனியர் விம்பிள்டன்’ சாம்பியன் சுமித்?

செரீனா vs ஷரபோவா - முதல் சுற்றிலேயே அமர்க்களமாகத் தொடங்கும் அமெரிக்க ஓப்பன்! #USOpen
மு.பிரதீப் கிருஷ்ணா

செரீனா vs ஷரபோவா - முதல் சுற்றிலேயே அமர்க்களமாகத் தொடங்கும் அமெரிக்க ஓப்பன்! #USOpen

இவங்க இன்னும் டொக் ஆகல!
ராம் கார்த்திகேயன் கி ர

இவங்க இன்னும் டொக் ஆகல!

ஒருபுறம் ஃபெடரர்... மறுபுறம் நியூசிலாந்து..ஃபைனல்ஸ்னா இப்படி இருக்கணும்!
கார்த்திகா ராஜேந்திரன்

ஒருபுறம் ஃபெடரர்... மறுபுறம் நியூசிலாந்து..ஃபைனல்ஸ்னா இப்படி இருக்கணும்!

ஃபோர்ப்ஸ் பொழுதுபோக்கு பிரபலங்கள் பட்டியலில் `அக்ஷய்குமார்'
கானப்ரியா

ஃபோர்ப்ஸ் பொழுதுபோக்கு பிரபலங்கள் பட்டியலில் `அக்ஷய்குமார்'

`சவால் காத்திருக்கிறது' - 17 மாதங்களுக்குப் பிறகு மோதும் ரோஜர் ஃபெடரர் - நடால்!
கார்த்திகா ராஜேந்திரன்

`சவால் காத்திருக்கிறது' - 17 மாதங்களுக்குப் பிறகு மோதும் ரோஜர் ஃபெடரர் - நடால்!

11 நிமிடங்களில் நடாலை வீழ்த்திய `டென்னிஸின் சுவர்’ ஜோகோவிச்..! #AusOpenFinal
மு.பிரதீப் கிருஷ்ணா

11 நிமிடங்களில் நடாலை வீழ்த்திய `டென்னிஸின் சுவர்’ ஜோகோவிச்..! #AusOpenFinal

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நடால் - ஜோகோவிச் கிளாசிக்?! #AusOpen
மு.பிரதீப் கிருஷ்ணா

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நடால் - ஜோகோவிச் கிளாசிக்?! #AusOpen