சாய் தன்ஷிகா | Latest tamil news about Sai Dhanshika | VikatanPedia
Banner 1
நடிகை

சாய் தன்ஷிகா

சாய் தன்ஷிகா ! தஞ்சையை சேர்ந்த இவர், “பேராண்மை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அரவான், பரதேசி, கபாலி போன்ற படங்களில் தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் மீது ஆர்வம் கொண்டு மாடலிங் வேலையைக் கவனித்து வந்தார்.

தோற்றம்:
              சாய்- தன்ஷிகா, தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 20-ம் தேதி 1989-ம் ஆண்டு பிறந்தார்.


குடும்பம்:
             இவர் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்தவர்.இந்து சமயத்தைச் சேர்ந்தவர்.சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும்.


தனிப்பட்ட வாழ்க்கை:
        இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் மீது ஆர்வம் கொண்டு மாடலிங் வேலையைக் கவனித்து வந்தார்.பின் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.இவரின் செல்லப் பெயர் சாய்- தன்ஷிகா. இவரின் உண்மையான பெயர்  தன்ஷிகா என்பதேயாகும்.


சினிமா பயணம்:
         மாடலிங்கைத் தொடர்ந்து சினிமா வாய்ப்பு வந்தது.இவர் 2006-ம் ஆண்டு வெளியான “திருடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.பின் அப்படியே சினிமா பங்களிப்பு தொடர்ந்தது.


நடித்த படங்களின் நிலை:
         2006-ம் ஆண்டு  வெளிவந்த “திருடி” படத்தைத் தொடர்ந்து, “மனதோடு மழைக்காலம்” என்ற படத்தில் அதே ஆண்டில் நடித்தார். அருண் விஜய் ஜோடியாக மாஞ்சா வேலு படத்தில் A.வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்தார். இப்படம் 21.05.2010-ம் ஆண்டு வெளிவந்தது. பின் அதே ஆண்டில் V.செல்வகணேஷ் இயக்கத்தில் “நில் கவனி செல்லாதே” படத்தில் நடித்தார்.இப்படம் 17.12.20௧௦-ல் வெளியானது.2013-ல் மிர்ச்சி சிவா ஜோடியாக “யா யா” படத்தில் நடித்தார்.2015-ல் “திறந்திடு சீசேன்” என்னும் படத்தில் நடித்தார்.பின் 2017-ல் “உரு” மற்றும் “எங்க அம்மா ராணி” என்னும் படங்களில் நடித்தார்.


குறிப்பிடத்தக்க படங்கள்:
     2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படத்தில் லீடிங் ரோலில் நடித்தார்.  இப்படம் இவருக்கு ஒரு தக்க இடத்தைப் பிடித்துத் தந்தது. இயக்குனர் “வசந்தபாலன்” இயக்கத்தில் நடிகர் ஆதியுடன் இணைந்து 2012-ம் ஆண்டு “அரவான்” படத்தில் நடித்தார்.இப்படம் 02.03.2012-ல் வெளியானது.பின் 2012-ல் மிகப்பெரிய இயக்குனராக உள்ள பாலா இயக்கத்தில் “பரதேசி” படத்தில் சிறந்த துணை நடிகையாக நடித்தார்.இப்படம் 15.03.2013-ல் வெளியானது.பின் சூப்பர் ஸ்டார்ருடன் 2016-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் துணை நடிகையாக “கபாலி” படத்தில் நடித்தார்.இப்படம் 22.07.2016-ல் வெளிவந்தது.


வெளியாகவுள்ள படங்கள்:
  தற்போது பிரசன்னா,கலியரசன் நடித்து வரும் “காலக்கூத்து” படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 06.10.2017-ல் வெளியாக உள்ளது.இயக்குனர் “மீரா கதிரவன்” இயக்கத்தில் “விழித்துரு” படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 20.10.2017-ல் வெளியாக உள்ளது.பின், “விஜய் சேதுபதி” ஜோடியாக “சங்குத்தேவன்” என்ற படத்தில் சுதாகர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படமும் 20.10.2017-ல் வெளியாக உள்ளது.அடுத்ததாக “காத்தாடி” என்ற படம் 23.11.2018-ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சூப்பர் ஸ்டார்ருடன் நடித்த அனுபவம்:
   நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்.ரஜினி சாரைப் பார்க்கப் போகும் முதல் நாள்.அனைவரும் “கபாலி” ஷூட்டிங் செட்டில் சூப்பர் ஸ்டார்க்காக காத்திருந்தனர்.எனக்கு ரொம்ப சந்தோசமாவும்,கொஞ்சம் பயமாகவும் இருந்தது.எப்படி அவரிடம் பேசுவது என்று மனதில், அவருடன் உரையாடப்போகும் வாக்கியங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தேன். மிகப் பெரிய ஹீரோவுக்கான எந்த பந்தாவும்,அதிகாரமும் அவரிடம் இல்லை.மிகவும் சாதாரணமான முறையில் செட்டிற்குள் நடந்து வந்து அனைவரிடமும் பாகுபாடில்லாமல் பேசினார்.என்னிடம் பேசுகையில் எனக்குத் தலைகால் புரியவில்லை.நான் ஹாய் சார்..ஹொவ் ஆர் யூ? எனக் கேட்டேன்.அவர் ஹாய் என்று சொல்லி, பின் நம்ப முன்னாடியே சந்திச்சிருக்கோமே? என்று சொல்ல எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது. நான் சினிமாவிற்குள் நுழைந்த காலத்தில் ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி சார் வந்திருந்தார்.அந்த விழா தொகுப்பாளர் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.அதுதான் எங்கள் முதல் சந்திப்பு.நாட்கள் பல கடந்தன நானும் அதை மறந்துவிட்டேன்.ஆனால் மிகப்பெரும் நடிகரான இவர்,முதல் சந்திப்பை நினைவு கூறியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.ஷூட்டிங் ஸ்பார்ட்டில் வேலைசெய்யும் அனைவரின் பெயரும் அவருக்குத் தெரியும்.அனைவரையுமே ஒரே விதத்தில் அணுகுவார்.முன்பு எனக்கிருந்த ஆசை எப்படியாவது அவருடன் நடிக்க வேண்டும் என்பது.தற்போதுள்ள ஆசை மீண்டும் சூப்பர் ஸ்டார்ருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது.அவருடன் நடிக்கும்போது எந்த ஒரு பதற்றமான நிலையும் யாருக்கும் ஏற்படவில்லை.மிகவும் க்கூல்லாக அனைவரையும் ஹான்ட்டில் செய்தார்.


ஆர்வம்:
        மாடலிங்கில் ஆர்வம் கொண்டுள்ளார்.தற்காப்பு மற்றும் பிட்னசில் அசத்திக்கொண்டிருக்கிறார்.சவாலான கதாப்பாத்திரங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி நடித்து வருகிறார்.


சாதனைகள்:
      பாலா இயக்கத்தில் வெளிவந்த, “பரதேசி” படத்தில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பின் மூலம் சினிமாப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரின் ஆதரவைப் பெற்றார். பின்,உலக அரங்கில் வெற்றி பெற்ற “கபாலி” படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உலக அரங்கில் ரசிகர்களைப் பெற்றது இவரின் மிகப்பெரிய சாதனையாகும்.


விருதுகள்:
        “அரவான்” படத்தில் வெளிப்படுத்திய துணிச்சலான நடிப்பிற்காக 2012-ம் ஆண்டின் “எடிசன் அவார்ஸ்சைப்” பெற்றார்.பின்,2013-ம் ஆண்டு “பரதேசி” படத்தில் வெளிபடுத்திய வீரமான நடிப்பிற்காக சிறந்த துணைநடிகை விருதினை “விஜய் அவார்ட்ஸ்சும்,பில்ம்ப்பேர் அவார்ட்ஸ்சும் வழங்கிச் சிறப்பித்தன.சிறந்த துணைநடிகைக்கான விருது “கபாலி” படத்தில் வெளிபடுத்திய கெத்தான நடிப்பின்மூலம் “பில்ம்ப்பேர் அவார்ட்ஸ்” 2016-ம் ஆண்டு  இவருக்குக் கிடைக்கப்பெற்றது.   

தொகுப்பு : பொ.விஷ்ணுபிரியா