சேலம்

சேலம்

சேலம்

”மாங்கனி நகரம்” என்று மட்டுமே பலரால் அறியப்படும் சேலத்திற்கு அதைத்தாண்டி உள்ள சிறப்புகள் ஏராளம்.கொங்கு தமிழ் முதல் காவேரி வரை சொல்லிக்கொண்டே போகலாம். “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் ஏற்காடைக் கொண்டிருக்கும் சேலம் மாவட்டத்தை பற்றியும், சேலம் செல்லும் போது தவறாமல் காண வேண்டிய இடங்களை பற்றியும் ஒரு சிறிய பார்வை. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம், ஓமலூர்,ஆத்தூர்,மேட்டூர்,சங்ககிரி,எடப்பாடி,வாழப்பாடி,கெங்கவள்ளி,ஏற்காடு, மற்றும் சேலம் என 9 வட்டங்களைக் கொண்டுள்ளது.

தனிச்சிறப்புகள்:
கொங்கு மண்டலத்தில் ஒன்றான சேலத்தில் பேசப்படும் தமிழ் கூட ஒரு அழகு தான்.கர்நாடகாவிலிருந்து வரும் காவேரியை வரவேற்று அடைக்கலம் தரும் மேட்டூர் அணை,சேலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் அதிக ஆற்றல் கொண்டுள்ளது.இவ்வாறு இயற்கை அழகைக் கொண்டிருக்கும் சேலம்,கோயில்களின் வரிசையிலும் குறைந்து விடவில்லை.கோட்டை மாரியம்மன் கோயில்,சித்தர் கோயில்,கைலாசநாதர் கோயில் என கோயில்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

தொழில்கள்:
காவேரித் தாயின் கருணையால் சேலத்தில் விவசாயம் செழிக்கிறது. காவேரி பாயும் பகுதிகள் பச்சை நிற போர்வையுடன் காட்சியளிக்கின்றன.அந்த அழகைப் பார்த்து யாராலும் உடனே திரும்பிவிட  முடியாது,ரசிக்க சில நிமிடங்கள் தேவைப்படும். நெல்,பருத்தி,பருப்பு வகைகள்,கரும்பு,ரோஜா,மல்லிகை போன்றவை இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.சேலத்தின் முக்கிய பெருமையாக கருதப்படும் மாம்பழம் மே மாதத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.சேலம்,பட்டுசேலை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதனால் நெசவு இங்கு முக்கிய தொழிலாய் அமைந்துள்ளது. இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் நெசவுத் தொழிலுக்கு பெயர் போன இடங்களாக அமைந்துள்ளன.வெள்ளி கொலுசும் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள்:
சேலத்தில் உள்ள மத்திய அரசின் இரும்பு உருக்காலை இம்மாவட்ட்த்தின் மிக பெரிய தொழிற்சாலையாக உள்ளது. பிற மாநில இரும்பு தேவையையும் பூர்த்தி செய்யும் இடமாக “இரும்பாலை” உள்ளது. மேட்டூரில் உள்ள தமிழக அரசின் அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் மின் தேவையை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.1440 மெகா வாட் மின்சாரம் இங்கு தயாரிக்கப்படுகிறது.ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பாலைகள் காணப்படுகின்றன.”கெம்ப்ளாஸ்ட்” எனப்படும் ரசாயன தொழிற்சாலையும் மேட்டூரில் அமைந்துள்ளது.

கல்வி:
அண்டை மாவட்டமான ஈரோட்டில் பிறந்த தந்தை.பெரியாரின் பெருமையை கூறும் விதமாக தமிழக அரசின் ”பெரியார் பல்கழைக்கழகம்” இயங்கி வருகிறது.அரசு மருத்துவ கல்லூரியும், அரசு பொறியியல் கல்லூரியும் அமைந்துள்ளன. இவைத் தவிர “விநாயகா மிசன்” என்ற தனியார் பல்கலைக்கழகமும்,பல தனியார் கல்லூரிகளும் கல்விப்பணியாற்றி வருகின்றன.

சினிமா:
இன்று சினிமா துறையில் கோடம்பாக்கம் கொடி கட்டி பறந்தாலும்,1935-ம் ஆண்டில்,அப்போது தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய ஷ்டுடியோவான ”மாடர்ன் தியேட்டர்ஸ்” ஆரம்பிக்கப்பட்டது என்னவோ சேலத்தில் தான்.ஏற்காடு மலையின் அடிவாரத்தில் மிக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.கருப்பு-வெள்ளையாக இருந்த தமிழ் சினிமா துறைக்கு வண்ணம் தீட்டி முதன்முதலில் வண்ணப்படத்தை வெளியிட்டதும் மாடர்ன் தியேட்டர்ஸ் தான்.1982 ல் தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டது.

தமிழில் பங்கு:
இவ்வளவு பெருமைகளைக் கொண்ட சேலம்,தமிழ் இலக்கிய பங்களிப்பில் மட்டும் குறைந்து போகவில்லை. கரந்தை தமிழ் சங்கத்தின் உயரிய விருதாக கருதப்படும் “தங்கத்தோடா” விருது பெற்ற அ.வரதநஞ்சையப் பிள்ளை பிறந்த மாவட்டம் சேலம் தான்.இவர் தமிழரசி குறவஞ்சி,கருணீக புராணம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


முக்கிய இடங்கள்:
ஏற்காடு:
ஒரு முறை சென்று பார்த்தால்தான் தெரியும்,ஏற்காட்டின் அழகு.சொல்ல சொல்ல சொல்லிக்கொண்டே போகலாம்.ஏற்காடு,சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது.மே மாதம் தமிழ்நாடு முழுவதிற்கும் கோடையாக இருந்தாலும் ஏற்காட்டிற்கு மட்டும் விதிவிலக்கே.ஏரியில் தொடங்கி அருவி வரை எங்கு பார்தாலும் குளிர்ச்சியான இடங்கள்தான்.ஏற்காடு செல்லும்போது ஏரியில் படகுசவாரியை மட்டும் மறந்து விடக்கூடாது.”லேடிசீட்” பகுதியிலிருந்து தொலைநோக்கியில் சேலத்தை காணும் போது அவ்வளவு அழகாக தெரியுமாம்.பகோடா பாயிண்ட்,கிள்ளியூர் அருவி,கரடிக்குகை என காணவேண்டிய இடங்கள் ஏராளம்.ஆண்டுதோறும் நட்த்தப்படும் “மலர் கண்காட்சி” சுற்றுலா பயணிகளின் மனதைக் கொள்ளை அடிக்கின்றன.


மேட்டூர் அணை:
மேட்டூர் அணை,இரண்டு மலைகளுக்கு இடையே காவேரியை மறித்து கட்டப்பட்ட வித்தியாசமான அணையாகும். இந்த அணையை “ஸ்டாலின் அணை” என்றும் அணையை கட்டிய பொறியியாளர் பெயரால் அழைப்பர்.120 அடி உயரம் கொண்ட இந்த அணை 1934ம் ஆண்டே கட்டப்பட்டது என்பது பிரமிக்க வைக்கும் உண்மையே.ஈரோடு,திருச்சி,தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாகவும் சேலம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இவ்வணை திகழ்கிறது.மேட்டூரின் இன்னொரு சிறப்பாக அணையை ஒட்டி அழகான பூங்கா ஒன்று அமைந்துள்ளது.சுற்றுலா பயணிகள் தவறாமல் இப்பூங்காவிற்கு சென்று வர வேண்டும்.


கைலாசநாதர் கோயில்:
சேலம்,தாரமங்கலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சேலத்தின் சிற்பக்கலையை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.இக்கோயிலின் தொடக்கம் பத்தாம் நூற்றாண்டிலே தொடங்கப்பட்டதாகவும்,பதினேழாம் நூற்றாண்டில் விரிவுப்படுத்தி கட்டப்பட்டதாகவும் பெரிய வரலாறே உள்ளது.மாசி மாதம் 9,10,11 ஆகிய தினங்களில் சூரியனின் கதிர்கள் நந்தியின் கொம்பு வழியாக சென்று லிங்கத்தின் மேல் பிறைப்போல் தோன்றும் நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர்.இக்கோயிலில் பாதள லிங்கம் ஒன்று அமைந்துள்ளது.

கஞ்சமலை:
சேர்வராயன் மலைத் தொடரின் இன்னொரு சிறப்பாக கஞ்சமலை அமைந்துள்ளது.இந்த மலையில் அதிகமான சித்தர்கள் வாழ்ந்த்தாக மக்கள் நம்புகின்றனர்.அங்குள்ள சில சான்றுகளும் இதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.அதனால் இந்த மலையின் அடிவாரத்தின் அமைந்துள்ள கோயிலை “சித்தர் கோயில்” என்றும் அழைப்பர்.அமாவாசை,பௌர்ணமி நாட்களில் இக்கோயிலில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திரள்வர்.இம்மலையில் அதிக அளவில் அரிதான மூலிகைகள் காணப்படுகின்றன.

 

இன்று சில துளிகள்…

  • தற்போதைய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட தொகுதி எம்.எல்.ஏ என்பது குறிப்பிட்த்தக்கது.
  • பாராலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்த மாரியப்பன் சேலத்தை சேர்ந்தவராவார்.
  • ப்ரோ கபடியில் ஜெய்ப்பூர் அணிக்காக விளையாடும் செல்வமணி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்த்தவர்.
  • அதேபோல் தமிழ்நாட்டுக்காக விளையாடும் பிரபஞ்சனும் சேலத்தைச் சார்ந்தவரே.
  • ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் மூன்று கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள நடராஜனும் சேலத்தின் முக்கிய நட்சத்திரமே.
சேலம்: 3 கார்களில் வந்த மர்ம நபர்கள்... பிரபல ரெளடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற கும்பல்- போலீஸ் விசாரணை!
ஜெ. ஜான் கென்னடி

சேலம்: 3 கார்களில் வந்த மர்ம நபர்கள்... பிரபல ரெளடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற கும்பல்- போலீஸ் விசாரணை!

"யாரைக் கேட்டு கோயிலுக்குள்ள போனே?" - பட்டியலின இளைஞரை ஆபாசமாகத் திட்டிய திமுக பிரமுகர் கைது
ஜெ. ஜான் கென்னடி

"யாரைக் கேட்டு கோயிலுக்குள்ள போனே?" - பட்டியலின இளைஞரை ஆபாசமாகத் திட்டிய திமுக பிரமுகர் கைது

அமைச்சர் உதயநிதி கான்வாய்க்குக் குறுக்கே புகுந்த சரக்கு வாகனம்! - சேலத்தில் பரபரப்பு
ஜெ. ஜான் கென்னடி

அமைச்சர் உதயநிதி கான்வாய்க்குக் குறுக்கே புகுந்த சரக்கு வாகனம்! - சேலத்தில் பரபரப்பு

``இவ்வளவு தூரம் வந்துவிட்டு எடப்பாடியாரைப் பற்றிப் பேசவில்லையென்றால் எப்படி?” - எடப்பாடியில் உதயநிதி
ஜெ. ஜான் கென்னடி

``இவ்வளவு தூரம் வந்துவிட்டு எடப்பாடியாரைப் பற்றிப் பேசவில்லையென்றால் எப்படி?” - எடப்பாடியில் உதயநிதி

``சிலர் பயந்துபோய் ஆவணப்படத்தைத் தடை செய்திருக்கிறார்கள்'' - அமைச்சர் உதயநிதி
ஜெ. ஜான் கென்னடி

``சிலர் பயந்துபோய் ஆவணப்படத்தைத் தடை செய்திருக்கிறார்கள்'' - அமைச்சர் உதயநிதி

``எடப்பாடி - பன்னீர்போல் இல்லாமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்” - திருமண விழாவில் உதயநிதி
ஜெ. ஜான் கென்னடி

``எடப்பாடி - பன்னீர்போல் இல்லாமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்” - திருமண விழாவில் உதயநிதி

``சுடுகாட்டைக் காணோம்..!" - சேலம் கிராமசபைக் கூட்டத்துக்குப் பாடைகட்டி வந்த பாஜக பிரமுகர்
ஜெ. ஜான் கென்னடி

``சுடுகாட்டைக் காணோம்..!" - சேலம் கிராமசபைக் கூட்டத்துக்குப் பாடைகட்டி வந்த பாஜக பிரமுகர்

ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன்  ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இலவச இல்லம்; எங்கு தெரியுமா?!
ஜெ. ஜான் கென்னடி

ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இலவச இல்லம்; எங்கு தெரியுமா?!

தாய்-சேய் நல விடுதி இடிப்பு... எடப்பாடி பழனிசாமி காரணமா? - சேலம் சர்ச்சை!
ஜெ. ஜான் கென்னடி

தாய்-சேய் நல விடுதி இடிப்பு... எடப்பாடி பழனிசாமி காரணமா? - சேலம் சர்ச்சை!

சேலம்: புறம்போக்கு இடம்... `இங்க கட்சி அலுவலகம் வருது’ - மூதாட்டியைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்
ஜெ. ஜான் கென்னடி

சேலம்: புறம்போக்கு இடம்... `இங்க கட்சி அலுவலகம் வருது’ - மூதாட்டியைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்

சேலம்: `புதையல் எடுக்கணும்னா ஆவிக்கு ஒரு லட்ச ரூபா கொடுக்கணும்' - பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதி
ஜெ. ஜான் கென்னடி

சேலம்: `புதையல் எடுக்கணும்னா ஆவிக்கு ஒரு லட்ச ரூபா கொடுக்கணும்' - பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதி

கனவு - 53 - சேலம் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்

கனவு - 53 - சேலம் - வளமும் வாய்ப்பும்