சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

       சமுத்திரக்கனி 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ல் ராஜபாளையம் செய்தூர் கிராமத்தில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சினிமா பார்ப்பது தவறு என்ற தந்தையின் சொல்லை ஆழமாக நம்பியதால் தனது 13வது வயது வரை ஒரு சினிமா கூட பார்த்ததே இல்லை. பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்புகளுக்குப் படிக்கச் சென்றபோது வகுப்பைப் புறக்கணித்து விட்டு நண்பனின் கட்டாயத்தின் பேரில் படம் பார்க்கச் சென்றார். அப்படி அவர் பார்த்த முதல் படம் 'முதல் மரியாதை' ..மனதைப் பிழிந்தெடுத்த அந்தப் படத்திலிருந்து மீள முடியாமல் தினம் படம் பார்க்கச் செல்ல ஆரம்பித்தார். நுழைவுச்சீட்டுக்காக முறுக்கு விற்றார். விஷயம் வீட்டிற்கு தெரிந்து தர்ம அடிவாங்கிக் கொண்டு நேரே அவர் சென்ற இடம் திரையரங்கம் தான்... படங்களின் மீது ஏற்பட்ட தீராக் காதலால் தமது 15வது வயதில் ரூ.130 யுடன் சென்னைக்குப் புறப்பாட்டார்..பாக்யராஜ் மற்றும் டி.ஆர்.ராஜேந்திரன் பரம ரசிகன் . சென்னையில் எங்கு செல்வதென்று கூடத் தெரியாமல் நடத்துனரிடம் குத்து மதிப்பாக ஒரு நிறுத்தத்தைத் சொல்லி இறங்கி சுற்றித் திரிந்தார்.

      மனிதர்களின் மீதான அவரது நம்பிக்கை என்றுமே வியக்கத்தக்கது! அதற்கு வித்திட்டது அண்ணா பாலத்தில் அவருக்கு உதவிய போலீஸ்காரர் ... 'நான் சென்னையில் சந்தித்த முதல் மனிதர் நல்லவர்' என்பார் இன்றும் .அதனாலோ என்னவோ அவர் படத்தில் கண்டிப்பாக ஒரு ஏட்டையா கதாப்பாத்திரம் நிச்சயம் இடம்பெறும். இயக்குனர்களின் அலுவலகம் தேடி அலைந்த போது தான்  சினிமா உலகின் நிதர்சனம் புரிந்தது.. ஊருக்குத் திரும்பினார். ஏழ்மையிலும்  'நமக்குத் தெரியாத ஒன்றைப் பையன் முயற்சி பண்ணனுமுனு நினைக்கிறான் .. ஊக்கப்படுத்த முடியலனாலும் அதுக்குத் தடையா இருக்க வேண்டாம் ' என்று கூறிய தந்தையே இவரிடம் இருக்கும் பாஸிட்டிவ் எனர்ஜியின் பிறப்பிடம்..  தந்தையின் விருப்பத்திற்கேற்ப 10ஆம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு சேர்ந்தார்.. தந்தையின் எதிர்பாராத மரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற மேலும் படிக்க வேண்டிய சூழல்.. பி. எஸ். சி கணிதம் மற்றும் சட்டக் கலை முடித்தார்.  தாயிடம் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு  நடிகராகும் ஆசையுடன்  மீண்டும் சென்னை சென்றார்..  அவரின் தன்னம்பிக்கையை உடைக்கும் நிறைய விமர்சனங்களைக் கடந்து இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரிடம்  பார்த்தாலே பரவசம் படத்தில் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். 

    முதன்முதலில் திரையில் தோன்றியது இயக்குனர் பாண்டியராஜனின் ' படிக்கிற வயசு'.. பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர் சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.. அவர் இயக்கிய நாடோடிகள் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது..  தொடர்ந்து போராளி, நிமிர்த்து நில், அப்பா, தொண்டன் எனப் பல படங்களை இயக்கி நடித்தார்.  தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்கியுள்ளார். குறுகிய காலத்தில் பல வேடங்களில் நடித்த இவருக்கு விசாரணை படம் தேசிய விருது பெற்றுத்தந்தது.

           சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற சாமானியனின் குரல்களையே தன் படங்களில் பதிவு செய்கிறார். 'அப்பா' வில்  குழந்தைகளின் நுண்ணுணர்வுகள் பற்றி பதிவு செய்தார். தொண்டன் மூலம் ஒரு சாமானியனின் உணர்வை, உரிமைப் மறுப்பைப் பற்றிப் பேசினார். சாதி ஒழிப்பைப் பற்றித் தீவிரமாகப் பேசுகிறார். தஞ்சைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து  ' தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் ’ என்னும் புத்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார் . 

’நீயே சிற்பி நீயே சிலை’ என்ற தன் குருநாதரின் வார்த்தைகளே இவருக்கு வேத வாக்கு! 'நான் எடுக்கும் படத்தின் கதையை வெளியில் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் உண்டு.என்னைப்போல் என்னால் மட்டுமே படம் இயக்க முடியும்" என்பார். 'நான் சொல்ல நினைக்கும் 4 விஷயங்களை என் படங்களின் மூலம் சொல்லி விட்டால் நான் இயக்குவதை நிறுத்தி விடுவேன் ’ என்கிறார்.  அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் ’ நல்ல மனிதர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.. மனிதர்களை நம்புங்கள் . என்றும் தோற்கமாட்டீர்கள்!' 

English பேசாத Gautham! சரக்கடித்தால் மட்டுமே பேசும் Samuthirakani ! | Vijay Milton Interview
விகடன் விமர்சனக்குழு

English பேசாத Gautham! சரக்கடித்தால் மட்டுமே பேசும் Samuthirakani ! | Vijay Milton Interview

சமுத்திரக்கனி, மணிகணடன் நடித்த சில்லு கருப்பட்டி படத்தின் ஸ்டில்ஸ்
அலாவுதின் ஹுசைன்

சமுத்திரக்கனி, மணிகணடன் நடித்த சில்லு கருப்பட்டி படத்தின் ஸ்டில்ஸ்

நடிகர் ஈ.ராமதாஸ் மகனின் நிச்சயதார்த்த ஆல்பம்..!
எம்.குணா

நடிகர் ஈ.ராமதாஸ் மகனின் நிச்சயதார்த்த ஆல்பம்..!

தனுஷ் - வெற்றிமாறனின் ’வடசென்னை’ எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்..! #VadaChennaiFirstLook
அலாவுதின் ஹுசைன்

தனுஷ் - வெற்றிமாறனின் ’வடசென்னை’ எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்..! #VadaChennaiFirstLook

நான் லேடி சமுத்திரகனி இல்ல. நான் ஜோதிகா! - `ராட்சசி' மீம் விமர்சனம்
ப.சூரியராஜ்

நான் லேடி சமுத்திரகனி இல்ல. நான் ஜோதிகா! - `ராட்சசி' மீம் விமர்சனம்

’ஸ்டூடண்ட்டுக்கு ரூல்ஸ் போடாதீங்க; ஸ்கூலுக்கு ரூல்ஸ் போடுங்க..!’சமுத்திரக்கனியின் ‘மெர்சல்’ வசனங்கள்! - #HBDSamuthirakani #VikatanPhotoCards
மா.பாண்டியராஜன்

’ஸ்டூடண்ட்டுக்கு ரூல்ஸ் போடாதீங்க; ஸ்கூலுக்கு ரூல்ஸ் போடுங்க..!’சமுத்திரக்கனியின் ‘மெர்சல்’ வசனங்கள்! - #HBDSamuthirakani #VikatanPhotoCards

’சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் நடிக்கும் 'கரிமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா..! - படங்கள்: ப.பிரியங்கா
விகடன் விமர்சனக்குழு

’சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் நடிக்கும் 'கரிமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா..! - படங்கள்: ப.பிரியங்கா

'ஹோம் ஒர்க் மறந்துட்டியா... காலையில சாப்பிட மறந்தியா?!'  - டீச்சர் பரிதாபங்கள் #VikatanPhotoCards
ப.சூரியராஜ்

'ஹோம் ஒர்க் மறந்துட்டியா... காலையில சாப்பிட மறந்தியா?!' - டீச்சர் பரிதாபங்கள் #VikatanPhotoCards