சந்தானம்

சந்தானம்

சந்தானம்

இன்றைய இளைஞர்களின் ஆல் டைம் பேவரைட் காமெடியன் மற்றும் தமிழ் சினிமாவின் ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என்றால் அது சந்தானம் தான். திரைத்துறையில் முதலில் காமெடியனாக வலம் வந்த இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக அவதாரம் எடுக்கத் துவங்கியுள்ளார். எடுத்தவுடன் பஞ்ச் டயலாக்குகள், ஆக்ஷன் காட்சிகள் என இறங்காமல் காமெடி பாதி கதாநாயகன் மீதி என சாதுவான கேரக்டர்களிலேயே நடிப்பதால் இவருடைய படங்கள் தொடர்ந்து ஹிட் லிஸ்டில் இணைகின்றன.

பிறப்பு:
         இவர் 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை பொழிச்சளூரில் பிறந்தார். இவருடைய தந்தை நீலமேகன். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை பல்லாவரத்திலும், கல்லூரியில் டிப்ளோமா மின்னனு மற்றும் தொடர்பியல் துறையும் பயின்றார். தனது காமெடி பயணத்தை ‘நுங்கம்பாக்கம் பாய்ஸ் கொண்டாட்டம்’ என்ற சிறிய நாடக அணியில் இருந்து துவக்கினார். இவருக்கு உஷா என்ற மனைவியும் ஒரே ஒரு மகனும் உள்ளனர்.

சின்னத்திரை பயணம்:
          இவர் 2000ஆம் ஆண்டு ‘வின் டி.வி’யில் ‘டீ கடை பெஞ்ச்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் 2001ஆம் ஆண்டு இவருக்கு விஜய் டி.வி.யில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தான் மக்கள் மத்தியில் சிறிது பிரபலம் ஆனார். பின்னர் 2003ஆம் ஆண்டு சன் டி.வி.யில் ‘அண்ணாமலை’ தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போதே விஜய் டி.வி.யிலும் சகலை  vs ரகளை என்ற நிகழ்ச்சியிலும் கலக்கிக் கொண்டிருந்தார்.

சினிமா பிரவேசம்:
        தொடர்ந்து சின்னத்துறையிலேயே நடித்து வந்த இவருக்கு சிலம்பரசன் நடித்த மன்மதன்(2004) படத்தில் துணை நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பெரிதாக பேசப்படவில்லை எனினும், அதன் பிறகு அவர் நடித்த சச்சின்(2005), பொல்லாதவன்(2007) ஆகிய படங்கள் அவரைப் பற்றி பேச வைத்தது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான அறை எண் 305ல் கடவுள் படத்தின் மூலம் மெயின் ரோலில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு இவர் காமெடியனாக நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. சிவா மனசுல சக்தி(2009), பாஸ் என்கிற பாஸ்கரன்(2010) மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி(2012) ஆகிய படங்கள் இவருடயை சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல் கற்களாக அமைந்தன. இவை சந்தானத்தை தமிழ்நாட்டின் கடைக் கோடி ரசிகன் வரை கொண்டு சேர்த்தது.

சந்தானம் ஸ்பெஷல்:
      விவேக், வடிவேலு போன்று படத்தில் தனியாக இவருடைய காமெடி பகுதிகள் இடம் பெறாது. மாறாக கதையின் நகர்வுடனே தன்னுடைய காமெடியும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். இதன் மூலம் கதையில் ஒரு இன்றியமையாத கதாபாத்திரமாக வலம் வருவார். 2012ல் இவர் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கி, அதில் முதல் படமாக  தன்னுடைய ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தையே தயாரித்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் அப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதனால் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார். 2015ஆம் ஆண்டு போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 செலிபிரிட்டி லிஸ்டில் 52வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கிலோனா - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

டிக்கிலோனா - சினிமா விமர்சனம்

டிக்கிலோனா: `எங்களுக்கு மானமும் அறிவும் கிடையாதா சந்தானம்?' - கேட்கும் மாற்றுத்திறனாளிகள்
எம்.புண்ணியமூர்த்தி

டிக்கிலோனா: `எங்களுக்கு மானமும் அறிவும் கிடையாதா சந்தானம்?' - கேட்கும் மாற்றுத்திறனாளிகள்

சந்தானம் என்றாலே 'அந்த' காமெடி தானா? 'டிக்கிலோனா' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
விகடன் டீம்

சந்தானம் என்றாலே 'அந்த' காமெடி தானா? 'டிக்கிலோனா' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”
உ. சுதர்சன் காந்தி

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

தியேட்டர்கள் திறந்தாலும் தொடரும் ஓடிடி ரிலீஸ்... `டாக்டர்', `துக்ளக் தர்பார்' ரிலீஸ் எப்போ?!
மை.பாரதிராஜா

தியேட்டர்கள் திறந்தாலும் தொடரும் ஓடிடி ரிலீஸ்... `டாக்டர்', `துக்ளக் தர்பார்' ரிலீஸ் எப்போ?!

"ஃபேமிலி சென்டிமென்ட்னாலும் பேய் கேட்கறாங்க. பேய்னா மினிமம் கேரண்டி!"- `தில்லுக்கு துட்டு' ராம்பாலா
மை.பாரதிராஜா

"ஃபேமிலி சென்டிமென்ட்னாலும் பேய் கேட்கறாங்க. பேய்னா மினிமம் கேரண்டி!"- `தில்லுக்கு துட்டு' ராம்பாலா

சச்சின் #VikatanReview
விகடன் விமர்சனக்குழு

சச்சின் #VikatanReview

அமெரிக்காவிலிருந்து பிளான்; திருவாரூரில் விபத்து! -சந்தானத்தின் உறவுக்காரப் பெண் மரணத்தில் அதிர்ச்சி
கு. ராமகிருஷ்ணன்

அமெரிக்காவிலிருந்து பிளான்; திருவாரூரில் விபத்து! -சந்தானத்தின் உறவுக்காரப் பெண் மரணத்தில் அதிர்ச்சி

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

"பா.ஜ.க-ல சேரச் சொன்னார் முருகன்ஜி... ஆனா, நான் No Thanks-னு சொல்லிட்டேன்!" - பவர்ஸ்டார் சீனிவாசன்
சனா

"பா.ஜ.க-ல சேரச் சொன்னார் முருகன்ஜி... ஆனா, நான் No Thanks-னு சொல்லிட்டேன்!" - பவர்ஸ்டார் சீனிவாசன்

பாரிஸ் ஜெயராஜ் - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

பாரிஸ் ஜெயராஜ் - சினிமா விமர்சனம்

புளி மாங்க புளிப்பே... சந்தானத்தின் சிரிப்பே... `பாரிஸ் ஜெயராஜ்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
விகடன் டீம்

புளி மாங்க புளிப்பே... சந்தானத்தின் சிரிப்பே... `பாரிஸ் ஜெயராஜ்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!