சசிகலா

சசிகலா

சசிகலா

பிறப்பு 

1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.

இளமைப் பருவம், கல்வி 

திருத்துறைப்பூண்டியில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இடையில் பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டார்.

குடும்பம் 

1973-ல் அரசு துணை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 

தனிப்பட்ட வாழ்க்கை 

ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானது 1984-ம் ஆண்டு. அப்போது ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர். ஒவ்வொரு ஊராக பொதுக்கூட்டத்துக்கு செல்லும் ஜெயலலிதா, தனது நிகழ்வுகளை வீடியோக்களாக பதிவு செய்ய விரும்புகிறார். அப்போது வீடியோ கவரேஜ் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் சசிகலா. கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் ம.நடராஜன் மூலம் கலெக்டர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா தரத்துவங்க... இருவருக்கு நட்பு உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.

1987-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சிலை திறப்பு விழா முடிந்ததற்கு மறுநாள், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிக மோசமானது. காலையிலேயே அவர் அதை உணரத் தொடங்கி இருந்தார்; ஆனால், வெளியில் சொல்லவில்லை; சமாளித்துக் கொண்டு இருந்தார்; ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை; மாலை 4 மணிக்கு அவருக்கு வாந்தி ஏற்பட்டது; டாக்டர்கள் வந்து பரிசோதித்துவிட்டு, ஒய்வெடுக்கச் சொன்னார்கள்; ஆனால், இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது, அதில் இருந்து எம்.ஜி.ஆர் மீளவில்லை; 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது; 40 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில், 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் அரங்கில், என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரையும், எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை ஏதோ ஒருவிதத்தில் சலனப்படுத்தி இருந்தது. அதனால், மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. 24-ம் தேதி அதிகாலை இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. உடனே, கறுப்புச் சேலை அணிந்துகொண்டு தனது காரில், ராமவரம் கிளம்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவோடு இன்னொரு பெண்ணும் அந்தக் காரில் அமர்ந்திருந்தார். அவர்தான் சசிகலா..

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கே வந்து தங்க ஆரம்பித்தார்.

அரசியல் 

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நிழலாக இருந்து அ.தி.மு.க-வில் சசிகலா ஆதிக்கம் செலுத்தி வந்தார். 1991-க்குப் பிறகு அ.தி.மு.க  சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். 

ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர்  சென்னையில் 2016 டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார். 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நடந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிந்தனர். அதேபோல், முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற 9-ம் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, ’ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வர் ஆகும்படி வற்புறுத்தினார். மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும். ஜெயலலிதாவின் கொள்கைகள் கட்டி காக்கப்படும்’, என்று உறுதியளித்துள்ளார்.  ஆனால், முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், "சசிகலா தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் "என்று பேட்டி கொடுத்தார். இதையடுத்து சசிகலா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், சசிகலா முதல்வராக பதவி ஏற்க முடியவில்லை.   

விமர்சனம் 

ஜெயலலிதாவுடனான நட்பில் சசிகலாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது சுதாகரன் திருமணம். சசிகலாவின் அக்கா மகன்தான் சுதாகரன். சசிகலா உடனான நட்பின் விளைவாகவே அவரது அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். 1995-ம் ஆண்டு செப்டம்பர் 7-ல் நடந்த சுதாகரனின் திருமணத்தை ஜெயலலிதா, சசிகலா இருவரும் முன்னின்று நடத்தி வைத்தனர். இந்தியாவில் நடைபெற்ற ஆடம்பரமான திருமணவிழாக்களில் ஒன்றாக அந்த விழா பேசப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்குக்குக் காரணமாக அமைந்ததும் இந்த திருமணம்தான்.

2011-ம் ஆண்டு டிசம்பரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்கள் அ.தி.மு.க.,விலிருந்தும் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில் சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து இந்த  கடிதத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில் சசிகலா 02/04/2012 அன்று மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவருடன் உறவினர்  இளவரசியும் உடன் வந்‌தார். 

ஜெயலலிதா உடல் நலக்குறைவால், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சசிகலா மட்டும்தான் ஜெயலலிதா உடன் இருந்தார்

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அரசியலில் ஈடுபட்ட சசிகலா, ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த சசிகலா, எந்த நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு துணையாக சசிகலா இருப்பார். ஒவ்வொரு தலைவருக்கும் சில அடையாளங்கள் இருக்கும். அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான உடை, தெளிவான குரல் உள்ளிட்ட சில அடையாளங்களாக மக்கள் மத்தியில் உள்ளன. இன்று ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சசிகலா சேர்க்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான சசிகலா கண்ணீர் மல்க பதில் அளித்தார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

இந்த விசாரணையின்போது, ஜெயா பப்ளிகேஷன் குறித்து கேள்விகள் கேட்டபோது, கண்ணீர் விட்டு அழுத சசிகலா, பிறகு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு பொறுமையாக பதிலளித்ததாக, நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. 

சசிகலா தனது பதில், "ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா செயல்படாத பங்குதாரராக இருந்தார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்கள் பற்றி ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது. வங்கிக் கணக்கு விவகாரங்களை நான் மட்டுமே கவனித்து வந்தேன். 

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாற்றுக்கும் நான் தான் பொறுப்பு. ஜெயலலிதா குற்றமற்றவர்," என்று சசிகலா கூயிருக்கிறார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சுமார் 40 கேள்விகளுக்கு பதிலளித்தார். 

பெங்களுரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ல்  தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015-ம் ஆண்டு மே 11-ம் தேதி தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.  

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா  உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி குன்ஹா, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை  விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா மாலை 2017 பிப்ரவரி 15-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், "சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும்  ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி,உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்," எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார். 

அவரும், விகடனும்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், சிறை சென்றார். சிறை செல்வதற்கு முன்பு ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டி அளித்தார். 

வெளி இணைப்புகள்

சசிகலா - விக்கிபீடியா

தொகுப்பு : கே.பாலசுப்பிரமணி

Sasikala ADMK-ல இல்ல - OPS | வெறுப்பு ஏத்தாத ப்ளிப்ஸு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌
Vikatan Correspondent

Sasikala ADMK-ல இல்ல - OPS | வெறுப்பு ஏத்தாத ப்ளிப்ஸு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

Sasikala's political future ? | JV Breaks
Vikatan Correspondent

Sasikala's political future ? | JV Breaks

What happened to the Jayalalithaa's statue designed by Sasikala ?
Vikatan Correspondent

What happened to the Jayalalithaa's statue designed by Sasikala ?

Sasikala handovers a PENDRIVE to Jayalalithaa death inquiry commission !
Vikatan Correspondent

Sasikala handovers a PENDRIVE to Jayalalithaa death inquiry commission !

Sasikala 365 Days: Rewind - Feb'17-Feb'18 !
Vikatan Correspondent

Sasikala 365 Days: Rewind - Feb'17-Feb'18 !

மௌன விரதம்... சீக்ரெட் சந்திப்புகள்... சிறப்புச் சலுகைகள்... - சசிகலாவின் ஓராண்டு சிறைவாசம் #Sasikala
எம்.வடிவேல்

மௌன விரதம்... சீக்ரெட் சந்திப்புகள்... சிறப்புச் சலுகைகள்... - சசிகலாவின் ஓராண்டு சிறைவாசம் #Sasikala

Sasikala is no more associated with AIADMK ! - D. Jayakumar
Vikatan Correspondent

Sasikala is no more associated with AIADMK ! - D. Jayakumar

Will Sasikala stop her 'vow of silence' by Feb 24 ?
Vikatan Correspondent

Will Sasikala stop her 'vow of silence' by Feb 24 ?