Banner 1
எழுத்தாளர்

சவி ஷர்மா

சூரத்தைச் சேர்ந்த இந்த இளம் பெண் எழுத்தாளரின் வயது 23. எழுத்தாளராகும் கனவில் சி.ஏ படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பேனா பிடித்தவர். தன் முதல் புதினத்தை (Everyone Has A Story) தானே வெளியிட்டார். வெளியான முதல் வாரத்திலேயே அமேசான் வலைதளத்தில் 5,000 புத்தகங்கள் விற்று சாதனை படைத்தன.

பிரபலமில்லாத ஒருவர் எழுதி ,தானாகவே வெளியிட்ட  புத்தகம் 100 நாட்களில்,1,00,000 பிரிதகள் விற்றதென்றால் , வியப்பாக இருக்கிறதா.அதுவும் அதை எழுதியவர்,23வயதான  பெண் எழுத்தாளர்  என்றால்...ஆம் இதை சாத்தியபடுத்தியவர் சூரத்தைச் சேர்ந்த சவி ஷர்மா.  சென்ற ஆண்டு வரை ,சவி ஷர்மா என்ற பெயரை இந்திய எழுத்துலகம்  கேள்விபட்டதில்லை ,ஆனால் இன்று ,மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர் இவர்.

பிறப்பு:
சவி, ஹரியானா மாநிலத்தின்  பேகல்(Behl)   என்னும் கிராமத்தில் 1991ஆம்ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.

குடும்பம் 
சவியின் தந்தை  textile துறையில் பணிப் புரிந்தார். தாய் இல்லத்தரசி ,சவிக்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருக்கிறார்கள்.

இளமைப் பருவம் 
சவி தன் பள்ளிப்படிப்பை சூரத்தில் மேற்கொண்டார் ,தன் முதல் கவிதையை மூன்றாம் வகுப்பில் எழுதியதாக கூறுகிறார் சவி.தன் 5ஆம்  
வகுப்பு வரை தன் தாத்தா பாட்டி வளர்ப்பில் இருந்தவர் தன் பன்னிரண்டாம்,வயதில் பெற்றோருடன்  சேர்ந்தார் .

கல்வி :
தன் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஆசிரியரின் விருப்பமான மாணவியாக திகழ்ந்திருக்கிறார் சவி ,தன் பன்னிரண்டாம் வகுப்பில் வணிகம் படித்தவர் ,கல்லூரியில் C.A துறையை தேர்ந்தெடுத்தார். C.A படித்துக் கொண்டிருக்கும்போது  தன் முதல் புத்தகத்தை எழுதத் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை :
தன் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய C.A படிப்பை பாதியிலேயே  துறந்து,முழு நேர எழுத்தாளராகத், தன்னை வடிவமைத்துக் கொண்டார் சவி.அவர் புதினங்களில்  வரும் கதாபாத்திரங்கள் ,அவருடைய குணங்களின் வடிவம் என குறிப்பிட்டிருக்கிறார் சவி. அவருக்கு 100 குறிக்கோள்கள் இருப்பதாகவும் ,அதை பின்    தொடர்வதாகவும் கூறுகிறார் சவி.

புத்தகம்:
சவி  எழுதிய முதல் புத்தகம் "silent love" ,வெளியிடப்படவில்லை அதனால் தன் முதல் புத்தகமாக அவர் கருதுவது( Everyone has a story )'எல்லோரிடமும் ஒரு கதை உண்டு ',இப்புத்தகம் அமேசானில் 4.5 /5மதிப்பெண் பெற்று ,அதிகம்   விற்கும் புத்தகங்கள் வரிசையில் முதல் இடத்திலிருந்தது. இப்புத்தகம் மீரா ,விவான்,கபீர் நிஷா என்ற நான்கு  கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சித்தரித்தது.  இப்புத்தகம் நண்பர்கள் தினத்தன்று வெளியிடப்பட்டது நான்கு (ஹிந்தி, தெலுங்கு  குஜராத்தி ,பெங்காளி)  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 
(This is not your story)'இது உங்களுடைய கதை அல்ல '  ,இந்தப் புத்தகம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது, Shaurya,Miraya,Anubhav என்னும் மூவரின் கதையைச் சித்தரித்தது. தன் புத்தகங்களைப் சுய முயற்சியின் மூலம் பதிப்பித்தார் சவி ,இவருடைய முதல் புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு 'westland books 'பதிப்பகம் இவருடைய புத்தகங்களுக்கு பதிப்புரிமையைப் பெற்றது.

துறைகள்:
people and life என்ற blog மூலம் ஆன்மீகம் ,நம்பிக்கை ,யோகா பயணம் குறித்து எழுதுகிறார். சவியை   facebook இல் 70,5,175 பேர் பின் தொடர்கிறார்கள். சவியை 'publication phenomenon' என்று ஆங்கில பத்திரிகைகள் புகழ்கின்றன.

சாதனைகள்:
Amazon,goodreads  போன்ற நிறுவனங்கள் இவர் புத்தகத்திற்கு 4.5/5 மதிப்பெண்கள் வழங்கின.இது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை பின்னுக்கு தள்ளியது.NIELSEN முதல் 10 புத்தகங்கள் வரிசையில், இவர் புத்தகம் முதல் இடத்தை பெற்றது.WBR crop இன்       2017 கான யூத் ஜகான்  விருதை  வென்றார் .

விருப்பங்கள் :
தனது விருப்பமான எழுத்தாளராக  Match Alborn,Paulo Coelho,Robin sharma,Devdut Pattanaik போன்ற எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார் .Paulo Coelhoவின் ' The Alchemist'புத்தகம் ,இவருக்கு மிகவும் நெருக்கமான புத்தகம்

எதிர்கால திட்டம்:
தன் புத்தகங்களைப் பாலிவுட் படமாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.

அவர் மொழி:
"என் எழுத்துக்கள் மனிதர்களின்,ஆன்மாவைத் தொட வேண்டும்.

தொகுப்பு : தி.ஆதிரை