சாவித்ரி

சாவித்ரி

சாவித்ரி

சாவித்ரி வாழ்க்கை வரலாறு

தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள். பிரபல ஜெமினி நிறுவனம் தங்களின் அடுத்த படத்திற்கு கலைஞர்கள் தேர்வு நடத்துவதாக கேள்விப்பட்டு சென்றவருக்கு ஏமாற்றம். அவரது பேச்சும் நடிப்பும் அங்கிருந்த நிர்வாகிக்கு திருப்தியை தராததால், 'ஏன்மா நீயெல்லாம் நடிக்க வந்த' என நக்கலாக கேட்கிறார்.  எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறிய சாவித்திரிக்கு தெரியாது, நடிப்பு வரவில்லை என தன்னை வெளியேற்றிய அந்த நிர்வாகிதான் பின்னாளில் தனக்கு கணவராக வரப்போகிறவர் என்று.  

எல்.வி பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது. முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் முட்டிக்கொள்ள, படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். 

திரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல கதாநாயகர்களே, 'இணையாக நடிக்க சாவித்திரியை ஒப்பந்தம் செய்யுங்கள்' என  வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் கொடி பறந்துகொண்டிருந்தது.  'நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே' என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன. 

6 New Films "BASED ON TRUE STORY" | Shakila | Savithri | P.T.Usha | Biopic Movies
Vikatan Correspondent

6 New Films "BASED ON TRUE STORY" | Shakila | Savithri | P.T.Usha | Biopic Movies

``கார் பிரியர்... கிரிக்கெட் ரசிகர்!" - பழம்பெரும் இயக்குநர் ஶ்ரீதர் குறித்த சுவாரஸ்யத் தகவல்
கு.ஆனந்தராஜ்

``கார் பிரியர்... கிரிக்கெட் ரசிகர்!" - பழம்பெரும் இயக்குநர் ஶ்ரீதர் குறித்த சுவாரஸ்யத் தகவல்

``மகா நடிகை... ஆனா..?’’ `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ புத்தக குறிப்புகள்
ஆ.சாந்தி கணேஷ்

``மகா நடிகை... ஆனா..?’’ `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ புத்தக குறிப்புகள்

விஜய்யின் எஸ்.எம்.எஸ்; 300 மிஸ்டு கால்; ஷவுட்-அவுட்! - தேசிய விருதுக்கு கீர்த்தி சுரேஷின் ரியாக்‌ஷன்
கு.ஆனந்தராஜ்

விஜய்யின் எஸ்.எம்.எஸ்; 300 மிஸ்டு கால்; ஷவுட்-அவுட்! - தேசிய விருதுக்கு கீர்த்தி சுரேஷின் ரியாக்‌ஷன்

"விவசாயத்தை பெண்கள் கையில் எடுக்க வேண்டுமென்பார் நம்மாழ்வார்!" அழகேஸ்வரி #NammalvarMemories
வி.எஸ்.சரவணன்

"விவசாயத்தை பெண்கள் கையில் எடுக்க வேண்டுமென்பார் நம்மாழ்வார்!" அழகேஸ்வரி #NammalvarMemories

``ஃபாஸ்ட்டா சமைப்பா, அதைவிட ஃபாஸ்டா வீடியோ அனுப்புவா கீர்த்தி!" மேனகா சுரேஷ் #HBDKeerthiSuresh
கு.ஆனந்தராஜ்

``ஃபாஸ்ட்டா சமைப்பா, அதைவிட ஃபாஸ்டா வீடியோ அனுப்புவா கீர்த்தி!" மேனகா சுரேஷ் #HBDKeerthiSuresh

``விஜய் அட்வைஸ், `சுப்ரமணியபுரம் 2', சயின்ஸ் பிக்ஷன் கதை, மம்மூட்டிக்குத் தம்பி!" - ஜெய் ஷேரிங்ஸ்
சந்தோஷ் மாதேவன்

``விஜய் அட்வைஸ், `சுப்ரமணியபுரம் 2', சயின்ஸ் பிக்ஷன் கதை, மம்மூட்டிக்குத் தம்பி!" - ஜெய் ஷேரிங்ஸ்

``அம்மாவும் நானும் சுவர் ஏறி மருதாணி பறிப்போம்!'' - சாமூண்டீஸ்வரி #HBDSavithri
ஆ.சாந்தி கணேஷ்

``அம்மாவும் நானும் சுவர் ஏறி மருதாணி பறிப்போம்!'' - சாமூண்டீஸ்வரி #HBDSavithri