சீமான்

சீமான்

சீமான்

தமிழ் திரைப்பட இயக்குனராக அனைவருக்கும் அறிமுகமானவர்,பின் நடிகராக பரீட்சயப்பட்டவர்,இன்று முழு நேர அரசியல்வாதி ஆக வலம் வருபவர், திரு.சீமான். இயக்குனராக, நடிகராக இருந்த இவர் இப்போது “நாம் தமிழர் கட்சி”யின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,மேடை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

இளமைப் பருவம் மற்றும் சினிமா பயணம்:
இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரனையூரில் பிறந்தார், இயக்குனர் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன்-இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர்,1996-ஆம் ஆண்டு பிரபு,மதுபாலா நடிப்பில் “பாஞ்சாலங்குறிச்சி”எனும் திரைப்படத்தை எழுதி இயக்கினார். இதுவே இவரது முதல் திரைப்படம்,பின்,”இனியவளே” எனும் திரைப்படத்தை இயக்கினார்,இடையில் சில படங்கள் படப்பிடிபிலேயே நின்று போக,சில வருடங்கள் இடைவேளை எடுத்து 2006-ஆம் ஆண்டு மாதவன் நடித்த “தம்பி”திரைபடத்தை எழுதி இயக்கினார்,சமூக அக்கறையுள்ள படமாக அமைந்த இத்திரைப்படம் மக்களால் வெகுவாக ஏற்கப்பட்டது.தொடர்ந்து அதே வருடம் மாதவன் மற்றும் பாவனா நடிப்பில் “வாழ்த்துக்கள்” திரைப்படத்தை இயக்கினார். இதற்கு பின் படம் இயக்குவதை தவிர்த்த சீமான், நடிப்பில் கவனம் செலுத்தினார். எவனோ ஒருவன்,மாயாண்டி குடும்பத்தார்,பொறி,நாகராஜ சோழன் எம்.எல்.ஏ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

அரசியல் பயணம்:
இலங்கையின் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தொண்டர். தமிழுக்காகவும் தமிழ் மக்களிற்காகவும் இறுதி வரை உண்மையாக போராடிய தலைவன் அண்ணன் பிரபாகரன் என தான் ஏறும் அனைத்து மேடைகளிலும் கூறும் சீமான், 2009-ஆம் ஆண்டு தமிழ்ப் போராளிகளோடு இணைந்து மே மாதம் 18-ஆம் தேதி நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார். இன்று தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது “நாம் தமிழர் கட்சி”.

தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து வரும் திராவிட கட்சிகளின் ஆளுமையையும்,சாதி மதமற்ற அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் வரவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கொள்கை எனக் கூறும் சீமான்,கூடங்குளத்தில் நடைப்பெற்ற அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தது.தமிழ் மீனவர் படுகொலை தொடங்கி ஹைட்ரோ கார்பன் ப்ராஜக்ட்,கதிராமங்கலம் என்ணெய் குழாய்கள் பிரச்சனை வரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்களுக்கு ஆதரவாக சீமான் கூட்டங்களிலும் மேடைகளிலும் பேசுபவர்.

2016-ஆன் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் எந்த கட்டி உடனும் சேராமல் தனித்து போட்டி இட்டனர்,தங்கள் கட்சியின் சின்னமாக இரண்டு எரியும் மெழுகு வர்த்திகளை பதிவு செய்தனர்,கடலூர் தொகுதியில் தன் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளராக தேர்தலில் போட்டி இட்டார் சீமான்,போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியது நாம் தமிழர் கட்சி.

ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போரட்ட களத்திலும் தங்கள் கட்சியின் சார்பாக களம் இறங்கினார் சீமான்,ஜல்லிக்கட்டை பற்றியும் நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வை சற்று முன்னரே மக்களுக்கு ஏற்படுத்திய காரணத்தினால் இளைஞர்கள் இவர் ஒரு கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் போராட்ட களத்தில் கலந்து கொள்ள அனுமதித்தனர்,இல்லையெனில் எந்த கட்சி பிரமுகர்களும் இந்த போராட்ட களத்திற்குள் இளைஞர்களால் அனுமதிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு மாற்றம் தேவை,தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்,புரட்சி எம்பது ஆள் மாற்றமோ கட்சி மாற்ரமோ அல்ல அரசியல் மாற்றம் என்று விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சீமான்.

இவர் 2013-ஆம் ஆண்டு அதிமுக-வின் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த திரு.மாரிமுத்து-வின் மகள் கயல்விழியை திருமணம் செய்தார்.        

தி.மு.க-வுக்கு எதிரான பிம்பம்... சீமானை முன்வைத்து `கணக்கு'ப் போடும் பா.ஜ.க!
விகடன் டீம்

தி.மு.க-வுக்கு எதிரான பிம்பம்... சீமானை முன்வைத்து `கணக்கு'ப் போடும் பா.ஜ.க!

47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி! #TNElection2021
இரா.செந்தில் கரிகாலன்

47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி! #TNElection2021

வாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி!
விகடன் டீம்

வாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி!

நாங்களும் விவசாயிதான்!
அரஸ்

நாங்களும் விவசாயிதான்!

மைக் ப்ளீஸ்
பிரேம் குமார் எஸ்.கே.

மைக் ப்ளீஸ்

`அன்புமணி ஏன் எடுபடவில்லை... சீமானின் இலக்கு'-`முதல்வர் வேட்பாளர்' சொல்லும் லாஜிக் #TNElection2021
ஆ.விஜயானந்த்

`அன்புமணி ஏன் எடுபடவில்லை... சீமானின் இலக்கு'-`முதல்வர் வேட்பாளர்' சொல்லும் லாஜிக் #TNElection2021

``எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு நுழைவுத் தேர்வு!''- சீமான்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
விகடன் டீம்

``எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு நுழைவுத் தேர்வு!''- சீமான்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

எல்லாமே தனிப்பட்ட குற்றச்சாட்டுகள்... என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
விகடன் டீம்

எல்லாமே தனிப்பட்ட குற்றச்சாட்டுகள்... என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

சீமானிசம் Vs பிரபாகரனிசம்...  'நாம் தமிழர்' தகராறு!
சுகுணா திவாகர்

சீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு!

நாம் தமிழர் கட்சிக்குள் என்னதான் நடக்கிறது? | The Imperfect Show 09/09/2020
Nivetha R

நாம் தமிழர் கட்சிக்குள் என்னதான் நடக்கிறது? | The Imperfect Show 09/09/2020

கழுகார் பதில்கள்
கழுகார்

கழுகார் பதில்கள்

“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்!”
இரா.செந்தில் கரிகாலன்

“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்!”