செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

இளமைக் காலம்:
       தற்போதைய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் இளமைக்காலம் பல துன்பங்களையும் துயரங்களையுமே அவருக்கு அளித்துள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்மாப்பட்டி என்னுமிடத்தில் தன் தாயுடன் வசித்து வந்தார்.வறுமை காரணமாக கிராமத்தில் இருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தார்.இவரின் தாயார் சிம்மக்கலில் பழ வியாபாரம் செய்து வந்தார்.இதன் மூலம் அதிமுக மாவட்டச் செயலாளர் பழக்கடை பாண்டியின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.ஆரம்பத்தில் பழக்கடை பாண்டியின் கடையில் லோடுமேனாக வேலை பார்த்தார்.அப்படியே தனது கல்லூரி படிப்பையும் தொடர்ந்தார்.பழக்கடை பாண்டியின் மூலமாகவே அதிமுக கட்சியில் இணைந்தார்.

அரசியல் பயணம்:
           அடுத்த மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஜக்கையனின் ஆதரவால் செல்லூர் 14வது வார்டு இளைஞரணி செயலாளர் ஆனார்.பின் 1996 ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் ஆனார்.2001 ம் ஆண்டு நடந்த மாநகராட்சி மேயர் தேர்தலில் தோல்வியடைந்தார்.பிறகு 2007 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார்.தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிட்டதால் கட்சியில் ராசியில்லாதவர் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.அதன் பின் சில சித்து வேலைகளைச் செய்து கட்சி தலைமையுடன் நெருக்கமானவராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.2011 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியைப் போட்டியிடக் கேட்டார்.கட்சி மேலிடம் தர மறுத்து விட்டதால் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.கூட்டுறவுத்தறை அமைச்சர் ஆனார்.பிறகு 2016 ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

இல்லற வாழ்க்கை:
     செல்லூர் ராஜூ கேரளாவைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ரம்யா,சௌமியா என்ற இரு மகள்களும் உள்ளனர்.தமிழ்மணி என்ற மகனும் இருந்தார்.2012 ம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் மகனை இழந்தார்.மகனை இழந்த அனுதாபமும் இவருக்கு ஓட்டு வங்கியாக மாறியது.சமீபகாலமாக கட்சி வேலைகளை இவரது மூத்த மகளும் மருமகனுமே கவனித்து வருகின்றனர்.மகளை அரசியலுக்குள் புகுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெர்மாக்கோல் புகழ் ராஜூ:
       கடந்த சில தினங்களுக்கு முன் வரலாற்று புகழ் பெற்ற திட்டம் ஒன்றைத் துவக்கினார்.கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக கடல்நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாக்கோல் கொண்டு கடலை மூடுவதே இத்திட்டம்.முதற்கட்டமாக வைகை அணையில் பத்து இலட்சம் ரூபாய் செலவில் 200 சதுரஅடி நீர்பரப்பின் மீது போடப்பட்டது.தொழில்நுட்ப உதவி இல்லாமல் அரங்கேறிய இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.தெர்மாக்கோல்கள் அனைத்தும் சில நிமிடங்களிலே கரை ஒதுங்கியது.இதை லாவகமாக பயன்படுத்திக் கொண்ட நெட்டிசன்கள் இவரை சமூக வலைத்தளங்களில் கலாய்த்துத் தள்ளினர்.பிற கட்சியை சேர்ந்தவர்களும் இவரை கேள்விக் கணைகளால் தாக்கினர்.இது எதையும் பொருட்படுத்தாத அமைச்சர்,சிறிய கருப்பு பந்துகளைக் கொண்டு நீர்நிலைகளை மூடுவதன் மூலம் நீர் ஆவியாவதைத் தடுக்கலாம் என்ற அடுத்த திட்டத்தை அதிரடியாக அறிவித்தார்.சளைக்காமல் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னைக் குறித்த விமர்சனத்திற்கு பதிலும் கூறினார்..

ஐடியா அய்யனாரு!
ஜூனியர் விகடன் டீம்

ஐடியா அய்யனாரு!

`வைகை தெர்மாகோல் திட்டத்துக்கு செலவு எவ்வளவு?' - ஆர்.டி.ஐயில் கிடைத்த பதில்
பி.ஆண்டனிராஜ்

`வைகை தெர்மாகோல் திட்டத்துக்கு செலவு எவ்வளவு?' - ஆர்.டி.ஐயில் கிடைத்த பதில்

வாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு!
விகடன் டீம்

வாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு!

`அடிக்கடி பேட்டி கொடுத்தார்கள்; இப்போ பேச்சு மூச்சு இல்லை!'- அமைச்சர் செல்லூர் ராஜு
செ.சல்மான் பாரிஸ்

`அடிக்கடி பேட்டி கொடுத்தார்கள்; இப்போ பேச்சு மூச்சு இல்லை!'- அமைச்சர் செல்லூர் ராஜு

அதிரவைக்கும் கூட்டுறவுச் சங்க
தேர்தல் முறைகேடுகள்!
வீ கே.ரமேஷ்

அதிரவைக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தல் முறைகேடுகள்!

`இதை வெச்சும் என்னைக் கலாய்ப்பாங்க!'- பிரமாண்ட கேக் தயாரிப்பில் செல்லூர் ராஜு கமென்ட்
செ.சல்மான் பாரிஸ்

`இதை வெச்சும் என்னைக் கலாய்ப்பாங்க!'- பிரமாண்ட கேக் தயாரிப்பில் செல்லூர் ராஜு கமென்ட்

தொடர்ந்து கூச்சல்; கேட்கவே இல்லை! - கருணாஸ் ஆதரவாளர்களால் கொதித்த செல்லூர் ராஜு
இரா.மோகன்

தொடர்ந்து கூச்சல்; கேட்கவே இல்லை! - கருணாஸ் ஆதரவாளர்களால் கொதித்த செல்லூர் ராஜு

விளையாட்டு புள்ளிங்கோ!
நித்திஷ்

விளையாட்டு புள்ளிங்கோ!

வாசகர் மேடை - 
முட்டுச் சந்தில் மூவர் கூடம்!
விகடன் டீம்

வாசகர் மேடை - முட்டுச் சந்தில் மூவர் கூடம்!

`OPS-க்கு புது விளக்கம்; கை தட்டுனா இதயத்துக்கு நல்லது!' - தேனி நிகழ்ச்சியில் கலகலத்த செல்லூர் ராஜு
எம்.கணேஷ்

`OPS-க்கு புது விளக்கம்; கை தட்டுனா இதயத்துக்கு நல்லது!' - தேனி நிகழ்ச்சியில் கலகலத்த செல்லூர் ராஜு

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...

`ப.சிதம்பரத்துக்கு நடந்ததுதான் ஸ்டாலினுக்கும் நடக்கும்!' - அமைச்சர் செல்லூர் ராஜு
செ.சல்மான் பாரிஸ்

`ப.சிதம்பரத்துக்கு நடந்ததுதான் ஸ்டாலினுக்கும் நடக்கும்!' - அமைச்சர் செல்லூர் ராஜு