செந்தில் | Latest tamil news about Senthil | VikatanPedia
Banner 1
Actor

செந்தில்

இந்தியா சுதந்திரம் பெற்ற நான்கு வருடங்கள் கழித்து ராமமூர்த்தி, திருக்கம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர்தான் இந்த காமெடி கிங் செந்தில். தனது பன்னிரண்டாவது வயதிலேயே அப்பாவின் திட்டைச் சமாளிக்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டார். சினிமாவின் மீதிருக்கும் ஈர்ப்பு அதிகரிக்க சென்னைக்கு வந்தவர், 1979-ல் 'பசி' என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

காமெடி ஜாம்பவான்கள் லிஸ்டில் இவருக்கும் பெரும் பங்குண்டு. கவுண்டமணி என்று சொன்ன மறுநொடியே நம் மைண்டில் வந்து நிற்பது செந்தில்தான். இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இருவரையும் தனித்தனியாக ஸ்க்ரீனில் பார்ப்பது ரொம்ப அபூர்வம்.  

தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி 'பேக் டு பேக்' பல வெற்றிப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். அதில் கவுண்டமணிக்கும் பெரும் பங்குள்ளது. இருவரின் காம்போவையும் பார்த்து தமிழ் சினிமாவின் 'லாரல் அண்ட் ஹார்டி' என்று செல்லமாக அழைத்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் பட வாய்ப்பினைத் தேடி போனதையடுத்து இவர்களைத் தேடி வாய்ப்புகள் வரத் தொடங்கின. 

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகர்களுக்கு செந்தில்தான் ஃபேவரைட் காமெடியன். மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கும் இவர்தான் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி நடிகராம். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். செந்திலுக்கும் ஶ்ரீதேவியை ரொம்பப் பிடிக்குமாம். 

தொகுப்பு : விகடன் டீம்