சக்தி வாசுதேவன் | Latest tamil news about Shakthi Vasudevan | VikatanPedia
Banner 1
நடிகர்

சக்தி வாசுதேவன்

திரைப்பட இயக்குனர் பி.வாசு-வின் மகன் சக்தி என்கிற ப்ரஷாந்த் வாசுதேவன் ,1983-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி பிறந்தார்,சின்னத்தம்பி, நடிகன்,ரிக்‌ஷா மாமா,செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் பி.வாசு-வின் மகன் சக்தி என்கிற சக்தி வேல்,1983-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 23-ஆம் தேதி பிறந்தார்,சின்னத்தம்பி, நடிகன்,ரிக்‌ஷா மாமா,செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


2007-ஆம் ஆண்டு தன் தந்தையின் இயக்கத்தில் “தொட்டால் பூ மலரும்” என்’ற திரைப்பட்த்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “மகேஷ் சரண்யா மற்றும் பலர்”என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தார்,இதன் பிறகு தனக்கென  பெண்கள் ஃபேன் ஃபாலோயிங்-ஐ உருவாக்கின சக்தி அதனை மெயின்டேயின் செய்ய தவறி விட்டார்.

 

2010-ஆம் ஆண்டு “ஆட்ட நாயகன்” என்ற திரைப்படம்,வஞ்சிக்கோட்டை வாலிபன், என்னமோ செய்தாய் என்னை, போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும்,கதை ரீதியாகவும் மிகவும் மோசமான ரிவ்யூக்களை பெற்றது.

 

2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவலிங்கா திரைப்பட்த்தில் நடித்தார், இதன் தமிழ் ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.

தொகுப்பு : GOMATHI S M