ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர்

பிரமாண்டத்தின் மறுபெயர் இயக்குனர் ஷங்கர். ஒரு கலைஞன் தன்னுடைய முழு கற்பனையும் திரையில் காண்பிக்க முடியும் என்பதை சாதித்து காட்டிய தமிழ்நாட்டின் முதல் இயக்குனர் என்றல்ல  இந்தியாவின் முதல் இயக்குனர் என்றே கூறலாம். இதனால் தான் இவரை இந்தியாவின் “ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்” என்று அழைக்கிறார்கள். இவரின் படங்களில் சமூகத்தின் மீதான கோபமும்,ஏக்கமும் வெளிப்படும். ஏறக்குறைய அனைத்து படங்களிலும் சமூக கருத்துகள் சொல்லாமல் ஓயமாட்டார். 

பிறப்பு,இளமைகாலம்:-
               தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணத்தில் ஆகஸ்ட் 17,1963 இல் பிறந்தவர். இவரின் அம்மா – முத்துலட்சுமி, 
அப்பா – சண்முகம். இவரின் அம்மாவுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்த்துகொண்டிருக்கும் போது தான்  பிரசவ வலி ஏற்பட்டது, அந்த படத்தில் நடிகர் திலகத்தின் பெயர் ஷங்கர் ,அதனால் தான் இவருக்கு ஷங்கர் என்ற பெயர்  சூட்டப்பட்டது. சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திர பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். படித்து முடித்த பின்னர் குவாலிட்டி கண்ட்ரோல் சூப்பர்வைசராக பணியாற்றினார். கிரேசி மோகனின் நாடகத்தை பார்த்த பின்னர் நடிக்க வேண்டும் என்ற ஆசை பற்றிக்கொள்ள சினிமாவில் நுழைய ஆயுத்தமானது இந்த மாபெரும் சகாப்தம்.

       தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான ‘தளபதி விஜய்’யை  ஈன்ற இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தான் இயக்குனர் ஷங்கர் என்னும் பிரமாண்டத்தை தமிழ் சினிமாவுக்கு  செதுக்கிக்கொடுத்தார். முதன் முதலில் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் நடிக்கும் ஆசையில் தான் உதவி இயக்குனராய் சேர்ந்தார். எஸ்.ஏ .சந்திரசேகர் இயக்கிய இந்தி படமான ‘ஜெய் ஷிவ் “ஷங்கர்” ’  மூலம் ஷங்கர் இந்தி பட உலகுக்கு உதவி இயக்குனராய் அறிமுகமானார். ஆரம்பக்காலத்தில் இயக்குனர் பவித்ரனிடமும் உதவி இயக்குனராய் பணிபுரிந்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகருடைய பெரும்பாலான படங்கள் சமூகத்தில் நடக்கும் அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாய் இருக்கும். இதனால் தான் தன்னுடைய படங்களும் சமூக அக்கறை கொண்ட படமாக அமைகிறது என்பார் ஷங்கர்.

இயக்குனர் படலம்:- 

1990-2000
                தமிழ் சினிமாவில் ஒரு இணை இயக்குனராய் ஆகிவிட்டோம் இது போதும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு நின்ற போது , “உன்னுடைய திறன் இதுவல்ல நீ இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் நீ இயக்குனராய் ஆக வேண்டும்” என்று ஊக்கபடுத்தியவர் ஷங்கரின் நெருங்கிய நண்பர். நண்பரின் வற்புறுத்தலின் பெயரில்தான் உதவி இயக்குனராய், இணை இயக்குனராய்  இருந்ததுபோதுமென    இயக்குனர் ஆக தயாரிப்பாளரை தேடி அலைய ஆரம்பித்தார்.

                அவருடைய முதல் கதை ஜென்டில்மேன் அல்ல. மனித உணர்வுகளுக்கு நெருக்கமாக ஒரு காதல் கதை “அழகிய குயிலே” இந்த படத்தின்  கதையை வைத்துகொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார்,யாரும் வாய்ப்புகொடுக்கவில்லை .ஆனால் அப்போது ஆக்சன் படம் தான் ட்ரெண்ட் என்பதால் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், அர்ஜுன் நடிப்பில்  “ஜென்டில்மேன்” படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார் ,இது 1993 இல் வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக ,ஷங்கரின் பாதை உருவானது. அடுத்ததாக பிரபுதேவாவுடன்  “காதலன்” என்ற படத்தை இயக்கினார் .அந்த படமும் அதிரடி வெடி வெடிக்க... அடுத்த படமே உலக நாயகனுடன் கைகோர்த்தார், லஞ்சத்தை லெஃப்ட் & ரைட் வாங்கினார் “இந்தியன்” ஷங்கர். முதல் இரண்டு படங்களுக்கும் சிறந்த இயக்குனர் என்று பிலிம்பேர் விருது வாங்கிய இவர்,இந்தியன் படத்தின் மூலம் மக்களின் மனதில் சமூக கருத்தை விதைக்கும் இயக்குனராய் வளம் வர ஆரம்பித்தார்.இப்படம் 1996இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

              1998 இல் வெளிவந்த ஜீன்ஸ் ஒரு காதல் திரைப்படம்,நாசர் ,பிரசாந்த் என இருவரும்  இரட்டை பிறவிகளாக  நடிக்க , பிரசாந்தை மணக்க ஐஸ்வரியா ராய் இரட்டை பிறவியாக வேடம் போட என காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சென்டிமென்ட் கலந்து அமர்க்கலமான ஒரு படத்தைக் கொடுத்தார். இந்த படமும் மாபெரும் ஹிட் அடிக்க, அடுத்ததாக சொந்த தயாரிப்பில் அழகிய குயிலே எடுக்கலாம் என முடிவு எடுத்தார். ஆனால் எழுத்தாளர் சுஜாதாவின் அறிவுரையின் பெயரில் அழகிய குயிலை கை விட, சூப்பர்ஸ்டாரை வைத்து முதல்வன் என்ற படத்தை இயக்கலாம் என முடிவு செய்து களம் இறங்கினார் . ஆனால் அந்த சமயம் ரஜினியின் அரசியல் பிரவேசம் செய்ய போகிறார் என்ற பேச்சுக்கள் வளம் வர, இந்த படம் அதற்கு வலுசேர்த்துவிடுமோ என்ற ஐயத்தில் ,அப்பறம் எடுக்கலாம் என ரஜினி கூற, அடுத்து தளபதி விஜய்யிடம் இந்த கதையைக் கூறினார்.அவரும் கால்ஷீட் பிரச்சனையால் படத்தை தவிர்க்க, தன் முதல் ஹீரோவான அர்ஜுனை வைத்து முதல்வன் கனவை நிறைவேற்றினார்.1999இல் வெளிவந்த முதல்வன், இந்திய அரங்கையே  திரும்பி பார்க்க வைத்ததன் விளைவு அந்த படத்தை அவரே நாயக் என்ற பெயரில் ஹிந்தியில் எடுத்து, ஹிந்தி பட உலகுக்கு இயக்குனராய் அறிமுகமானார் ஷங்கர். நாயக் , இங்கு முதல்வன் ஏற்படுத்திய தாக்கத்தை அங்கு ஏற்படுத்தவில்லை. இவர் படங்களில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறாத ஒரே படம் இது தான். 

2000 முதல் 
     பெரிய ஹீரோக்களை வைத்து மட்டும் தான் ஷங்கரால் ஹிட் கொடுக்க முடியும் என்று பேசியோரின் வாயை மூட ,சித்தார்த்,பரத்,நகுல்,மணிகண்டன்,தமன் என்ற ஒரு “பாய்ஸ்” பட்டாளத்தையே அறிமுகம் செய்து ஹிட் கொடுத்தார். அந்த படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் அடிக்க, அப்படம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் காதலிலும் வாழ்க்கையிலும் எப்படி ஜெயித்துக்காட்டுகிறான் என்பதே படத்தின்  ஒன்லைனர். பெரியவர்களிடம் இந்த படம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், படம்  கலெக்சன் அள்ளியது. பிறகு 2005இல் விக்ரமுடன் இணைந்த அந்நியன் படமும் பிளாக்பஸ்டராக உருவெடுத்தது. அந்நியன் படம் பார்த்துவிட்டு நிறைய பேர் இனி ட்ராபிக் ரூல்ஸ் பின்பற்ற போகிறேன் எனவும்,ரோட்டில் எச்சில் துப்ப மாட்டேன் எனவும் கூறியதாக கூறினார்.

               ரொம்ப நாளாக தமிழ் சினிமா எதிர்பார்த்துகொண்டிருந்த பிரமாண்டமான ரஜினி – ஷங்கர்  கூட்டணி சிவாஜி- தி பாஸ் மூலம் 2007 இல் சாத்தியமானது. நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் சூப்பர் ஹிரோயிச கதை.இதன் பின்பு தான் பெரும்பாலான பொது மக்களுக்கு கருப்பு பணம் என்றால் என்ன என்பதே தெரிய வந்தது.

          2000த்தின் ஆரம்பத்தில் ரோபோட் என்ற சயின்ஸ் பிக்ஷன் படம் எடுப்பதாக இருந்தார், ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அப்பொழுது கைவிடப்பட்ட அந்தப்படம், சன் பிக்சரின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரஜினிகாந்தை “எந்திரன்”ஆக உருவாக்கினார். நூறு கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவான இந்த படம். உலக அரங்கை மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்க வைத்தது.இந்த படத்திற்காக ஷங்கர்  அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார் என அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ கூறியுள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷங்கர் சார் சொல்ல சொல்ல அட்லீ தான் எழுதுவாராம்.அதனால் தான் வசனம் எழுதும் தன்மை தனக்கு வந்ததாக அட்லீ கூறுவார்.

              இதன் பின்னர் 2012இல் இளையதளபதி விஜய்யை கதாநாயகனாகக் கொண்டு ,ஹிந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை இங்கு ரீமேக் செய்தார். இதில் ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன்,எஸ்.ஜே.சூர்யா என நட்சத்திர பட்டளாமே நடிக்க ஒரிஜினல் வெர்ஷனை விட மிகவும் அட்டகாசமாக அமைந்தது. இதில் இதுவரை காணாத தளபதியை ஷங்கர் மிகவும் அற்புதமாய் காட்டியிருப்பார்.

              இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் மீண்டும் இணைந்த ஷங்கர் ,மிக வித்தியாசமான திரைக்கதையுடன் மேக்னம் ஆப்பஸ் படமான “ஐ” படத்தைகொடுத்தார். தன்னுடைய உடலை மிகவும் வறுத்திக்கொண்டு உழைத்தார் விக்ரம்.இப்படம் பொங்கல் விருந்தாக ஆம் ஆண்டு வெளிவந்தது.அந்த ஆண்டின் அதிக கலெக்சன் செய்த படமாக உருவெடுத்தது.

       தற்போது மூன்றாவது முறையாக ரஜினியுடன் இணைந்த ஷங்கர் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2.௦ வை இயக்கி வருகிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம்.கிட்டத்தட்ட இதன் பட்ஜெட் 350 கோடியாம்.இது 2018 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் முடிந்த பின்னர் கமலுடன் மீண்டும் இணைந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vikatan
SHANKAR NARAYANAN S

அவள் 16

Monster Public Opinion | Review | SJ Suryah | Priya Bhavani Shankar
விகடன் டீம்

Monster Public Opinion | Review | SJ Suryah | Priya Bhavani Shankar

I was Worried to act with SJ Suryah - Priya Bhavani Shankar Reveals | Monster
விகடன் விமர்சனக்குழு

I was Worried to act with SJ Suryah - Priya Bhavani Shankar Reveals | Monster

Rajini's Periya Manushan | Shankar | A R Rahman | Flashback
விகடன் விமர்சனக்குழு

Rajini's Periya Manushan | Shankar | A R Rahman | Flashback

Simbu's Character Revealed for INDIAN 2 | Shankar | Kamal Haasan
விகடன் விமர்சனக்குழு

Simbu's Character Revealed for INDIAN 2 | Shankar | Kamal Haasan

Kaathalae Kaathalae Soulful Violin Cover by Padma Shankar
விகடன் விமர்சனக்குழு

Kaathalae Kaathalae Soulful Violin Cover by Padma Shankar

Shankar Shares Huge Secret on Mahendran | 2.0  | RIP Mahendran
விகடன் விமர்சனக்குழு

Shankar Shares Huge Secret on Mahendran | 2.0 | RIP Mahendran

Maari 2 ஷூட்டிங் ஸ்பாட் ரகளைகள் | Krishna Kulasekaran | Robo Shankar
விகடன் விமர்சனக்குழு

Maari 2 ஷூட்டிங் ஸ்பாட் ரகளைகள் | Krishna Kulasekaran | Robo Shankar