சித் ஸ்ரீராம்

சித்  ஸ்ரீராம்

சித் ஸ்ரீராம்

பிறப்பு:
சென்னை மையிலாப்பூரில் 1990 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் பிறந்தார்.

குடும்பம்:
தந்தை சுயதொழில் வியாபாரி; தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரன்சிஸ்கோ நகரில் கர்நாடக இசை ஆசிரியர். இவரது சகோதரி பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய கலைஞர். இவருடைய தாத்தாவும் கர்நாடக இசை கலைஞர்.

இளமைப் பருவம்:
சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். அதே நேரத்தில் R&B எனப்படும் soul song இசை முறையையும் கற்றார். 2008ஆம் ஆண்டு பாஸ்டன் நகரின் பெருமைக்குரிய பெர்க்லீ இசை கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.

சினிமா பயணம்:
2011ஆம் ஆண்டு எ.ர். ரஹ்மானின் இசையில் பாட அழைப்பு வந்தது. அன்று தான் "அடியே அடியே" என்னும் "கடல்" படத்தின் பாடல் மூலமாக அவரது சினிமா பயணம் தொடங்கியது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் இதுவரை சுமார் 20 பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் படங்கள்:
1. 2012- அடியே அடியே- கடல்- எ.ர்.ரஹ்மான்
2. 2014- என்னோடு நீ இருந்தால்- ஐ- எ.ர்.ரஹ்மான்
3. 2015- என்னை மாற்றும் காதலே- நானும் ரவுடி தான்- அனிருத் ரவிச்சந்தர்
4. 2016- தள்ளி போகாதே- அச்சம் என்பது மடமையடா- எ.ர்.ரஹ்மான்
5. 2016- நீ தொலைந்தாயோ- கவலை வேண்டாம்- லியோன் ஜேம்ஸ்
6. 2016- அல்லாதே சிறகியே- ரம்- அனிருத் ரவிச்சந்தர்
7. 2016- மெய் நிகரா- 24- எ.ர்.ரஹ்மான்
8. 2017- ஹே பெண்ணே- கட்டப்பாவ காணோம்- சந்தோஷ் தயாநிதி
9. 2017- மறுவார்த்தை பேசாதே- எனை நோக்கி பாயும் தோட்டா- Mr.X
10. 2017- ஆகாயம் தாயாக- யாதுமாகி நின்றாய்- அஸ்வின் விநாயகமூர்த்தி
11. 2017- வெரட்டமா வெரட்டுறியே- வீரா- லியோன் ஜேம்ஸ்
12. 2017-  கண்ணால் மோததே- சர்வர் சுந்தரம்- சந்தோஷ் நாராயணன்
13. 2017- சச்சின் சச்சின்- சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ்- எ.ர்.ரஹ்மான்
14. 2017- கலாம் சலாம்- கலாம் சலாம்- ஜிப்ரான்
15. 2017- மாச்சோ- மெர்சல்- எ.ர்.ரஹ்மான்

தமிழ் சிங்கள் ஆல்பம்:
2017- போ போ என்- எ.ஹெச். காஷிப்

தெலுங்கு: 
1. 2012- யடிக்கே யடிக்கே- கடலி- எ.ர்.ரஹ்மான்
2. 2014- நுவுண்டே நா ஜதகா- ஐ- எ.ர்.ரஹ்மான்
3. 2016- வெள்ளிப்போமக்கே- சாஹசம் ஸ்வாசக சாகிப்போ- எ.ர்.ரஹ்மான்
4. 2016- மனசுக்கே- 24- எ.ர்.ரஹ்மான்
5. 2017- அடிகா அடிகா- நின்னு கோரி- கோபி சுந்தர்

தனிப்பட்ட இசை பயணம்:
சித்ஸ்ரீராம், பல பிளாட்டினம் மற்றும் கிராமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் டீ.ஜே. க்ஹாலில் என்பவருடன் இணைந்து "இன்சோம்னியாக் சீசன்" என்னும் முழு நீள பாடல் ஆல்பத்தை இசையமைத்து, வெளியிட்டு வருகிறார்.
இவரின் பிற இசை ஆல்பங்கள்- மொமெண்ட்ஸ் ஆப் வீக்னெஸ், டேஞ்சர் டிசைன், பிரதர்.
மேலும் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார்.

விருதுகள்: 
◆2015ஆம் ஆண்டு பிலிம்ப்ஹேர் விருந்துகளில், ஐ படத்தின் "என்னோடு நீ இருந்தால்" பாடலுக்கான சிறந்த பிண்ணனி பாடகர் விருதை வென்றார்.
◆2012ஆம் ஆண்டு விஜய் விருதுகளில், சிறந்த பிண்ணனி பாடகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

ஹிட் பாடல்கள்:
இவரின் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன. ஆயினும் "அடியே" பாடலின் மூலம் மனதை தொட்டு, "என்னோடு நீ இருந்தால்" பாடலின் மூலம் விருது வென்று, "தள்ளி போகாதே" பாடலின் மூலமாக பட்டித்தொட்டி எங்கும் உள்ள நெஞ்சங்களை வென்றார். சென்ற வருட முடிவில் பல தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் நடந்த கணக்கெடுப்பில் ஹிட் பாடல், நேயர்கள் விருப்பம் என மிகுதியான பெருமையை சேர்த்த பாடல் "தள்ளி போகாதே". கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இவரது "மறுவார்தை பேசாதே" பாடல் நெஞ்சை வறுடும் ராகம்; இளைஞர்களின் லைக்ஸை அள்ளிய பாடல்; இப்போதைய ட்ரெண்டில் எங்கும் ஒலிக்கும் ரிங்க்டோன் இப்பாடல் தான்.

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்!”
சந்தோஷ் மாதேவன்

“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்!”

``விஜய்க்கு பாட்டு எழுத முடியல... அவருக்காக சிலர் குரூப்பா இயங்குறாங்க!'' - கவிஞர் கபிலன்
சனா

``விஜய்க்கு பாட்டு எழுத முடியல... அவருக்காக சிலர் குரூப்பா இயங்குறாங்க!'' - கவிஞர் கபிலன்

மீண்டும் மீண்டும் சிக்கல் - என்னதான் ஆச்சு `எனை நோக்கி பாயும் தோட்டா'வுக்கு?!
சந்தோஷ் மாதேவன்

மீண்டும் மீண்டும் சிக்கல் - என்னதான் ஆச்சு `எனை நோக்கி பாயும் தோட்டா'வுக்கு?!

``திரும்ப பாடணும்னு ஆசையா இருக்கு!" - `சிக்குபுக்கு ரயிலே’, `பேட்டாராப்’ புகழ் சுரேஷ் பீட்டர்ஸ்
தாட்சாயணி

``திரும்ப பாடணும்னு ஆசையா இருக்கு!" - `சிக்குபுக்கு ரயிலே’, `பேட்டாராப்’ புகழ் சுரேஷ் பீட்டர்ஸ்

விஜய்க்கு வில்லன் அர்ஜுன்... தனுஷ் படத்தில் அல் பசீனோ... #CinemaVikatan2020
சந்தோஷ் மாதேவன்

விஜய்க்கு வில்லன் அர்ஜுன்... தனுஷ் படத்தில் அல் பசீனோ... #CinemaVikatan2020