சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் வளர்ந்துவரும் கதாநாயகர். பிறந்தது சிவகங்கை மாவட்டத்தில், படித்தது திருச்சி மாவட்டத்தில். ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற `கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வென்று அந்த தொலைக்காட்சியிலேயே தொகுப்பாளாராக கால் பதித்தவர். போக போக நட்சத்திர தொகுப்பாளராக மாறி அப்போதே மக்கள் மனதில் இடம்பிடித்தவர். பிறகு, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய `மெரினா` படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு, இவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர, தற்போது தமிழ் திரை உலகில் நல்ல இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவரின் எத்ர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இவர் இமான் இசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் தன் முதல் பாடலை பாடினார். மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். இவர் 2012ல் இருந்து தமிழ் திரையுலகில் இருக்கிறார். இவருக்கு கல்யாணாம் ஆகி ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். ரெமோ படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. மேலும், விஜய் விருதுகள், விகடன் விருதுகள், பிஹைன்ட் வுட்ஸ் விருதுகள், தென்னிந்திய நடிகர் சங்க கூட்டமைப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்றவர்.
- உ.சுதர்சன் காந்தி

``அஷ்வின்கூட ஜோடியா சமைச்சா என்ன தப்புங்கறேன்?" - `குக் வித் கோமாளி' ஷிவாங்கி லாஜிக்

சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்! #VikatanExclusive

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

``விஜய், அஜித் பேட்டிக்கு வெயிட்டிங்... கால்வலி பெட்டர்... அடுத்த வருஷம் கம்பேக்!" - டிடி

கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

இரண்டாவது படம் வெளியாகும் முன்பே விஜய் படம்... யார் இந்த இயக்குநர் நெல்சன்?! #VIjay65

"அப்பா மீண்டு வந்துவிடுவார்!" - தவசியின் வருகைக்காகக் காத்திருக்கும் குடும்பம்

ஜனவரியில் `மாஸ்டர்', `ஜகமே தந்திரம்', `டாக்டர்'... தியேட்டர்கள் திறப்பது எப்போது?!

Sivakarthikeyan-னை வளைக்கும் பா.ஜ.க? கல்லூரியை வளைக்கும் 'ஷாக்' அமைச்சர்! | Elangovan Explains

மிஸ்டர் கழுகு: சிவகார்த்திகேயனை வளைக்கும் பா.ஜ.க!

Lockdown Life: தனுஷ், சிவகார்த்திகேயன் `உள்ளே'... விஜய்சேதுபதி `வெளியே'!
