சினேகன்

சினேகன்
தமிழ் திரையுலகின் சிறந்த பாடல்களை எழுதி பரீட்சயப்பட்டவர்,எழுத்தாளார், கவிஞன்,பாடலாசிரியர் சினேகன். தஞ்சாவூரில் உள்ள “புது காரியபட்டி” என்னும் கிராமத்தில் 1978-ஆம் வருடம் ஜூன் மாதம் 23-ஆம் தேதி பிறந்தார்.
விவசாய குடும்பத்தில் எட்டு அண்ணன் தம்பிகளோடு பிறந்த இவர், பள்ளி பருவத்திலேயே எழுத்தில் மிக ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார்,இவரது 11-ஆம் வயதில் தன்னுடைய கவிதைக்காக அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்-இடம் மாநில அளவில் முதல் பரிசை பெற்றுள்ளார்.
எழுத்திலும் சினிமாவிலும் ஆர்வம் கொண்ட இவர்,சென்னைக்கு வந்தபின் கவிஞர் வைரமுத்து-வின் அசிஸ்டண்ட் ஆக ஐந்து வருடங்கள் பணிபுரிந்து உள்ளார்,இவரின் கவிதை நடையையும்,எழுத்து திரனையும் கண்டு டைரக்டர் திரு.கே.பாலசந்தர் அவர்களின் திரைப்படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் “புத்தம் புது பூவே” எனும் திரைப்படத்திற்கு பாடல்களை எழுதினார்.தொடர்ந்து இன்று வரை 500 படங்களுக்கு சுமார் 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
அவரவர் வாழ்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்,தோழா தோழா,பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை,ஞாபகம் வருதே,கிழக்கே பார்த்தேன்,மன்மதனே,ஆராரிராரோ,நிழலினை நிஜமும்,ஐயையோ, அறியாத வயசு,யாத்தே யாத்தே, ஐயையோ நெஞ்சு அலையிதடி,மீண்டும் பள்ளிக்கு போகலாம்,ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் போன்ற பல ஹிட் பாடல்களை எழுதி உள்ளார். மேலும் முதல் அத்யாயம்,இப்படிய்ம் இருக்கலாம் உள்ளிட்ட ஐந்து புத்தகங்களை எழுதி உள்ளார்.தமிழ்நாடு மாநில விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர்,கவிச்சிற்பி, சின்ன பாரதி, எழுச்சி கவிஞர் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இயக்குனர் அமீர் நடித்து வெளியான “யோகி” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சினேகன்,அதே படத்தில் ஒரு பாடலையும் பாடி உள்ளார். மேலும் “உயர்திரு 420” என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்,தற்போது, “ராஜ ராஜ சோழனின் போர்வாள் மற்றும் பூமிவீரன் என்னும் திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.

பாரதி கண்ணம்மா: பல்வேறு நட்சத்திரங்களின் கேமியோவுடன் முடிவடையும் தொடர் - சீசன் 2-வில் என்ன நடக்கும்?

ஒரு முறை பார்த்தோம்... பாத்ததே இல்லை.. மோதும் சிநேகன் - ஜெயலட்சுமி; மோசடிப் புகாரில் நடப்பதென்ன?
``பொய்ப் புகார்... சினேகன்மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்!" - நடிகை ஜெயலட்சுமி

பாஜக பேரில் பண வசூலில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகை? - பாடலாசிரியர் சினேகன் போலீஸில் புகார்

ஒன் பை டூ

``ஏன் நடிக்கப் போனாய் என நாக்கின் மேல் பல்லைப்போட்டு இனி கேட்காதீர்கள்" - மநீம கூட்டத்தில் கமல்

பிரைம் டைம் பெருமாளு: சிநேகனின் ஏமாற்றம்; விளக்கம் கேட்டு இமெயில், விரக்தியில் ஆண்டாள் பிரியதர்ஷினி!

BB Ultimate - 42: ஜூலி மற்றும் அனிதாவிடம் எகிறிய பிக் பாஸ்... வனிதா இருந்தபோது அடக்கி வாசித்தது ஏன்?

BB Ultimate 15: "என்னங்க கேம் இது... முடியல தலைவரே!" சொல்ல வேண்டியது சிநேகன் மட்டுமல்ல, நாமும்தான்!

கவிஞர் ஸ்நேகன் - நடிகை கன்னிகா - லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

``10 வருஷமா Daily இதை Miss பண்ணாம சாப்பிடுறேன்!"- Kannika's Diet For Hair & Weight loss | Say Swag
