ஸ்ரீ | Latest tamil news about Sri | VikatanPedia
Banner 1
நடிகர்

ஸ்ரீ

இயற்பெயர் ஶ்ரீராம் என்றாலும் ரசிகர்களிடம் பரீட்சயப்பட்டது, ஶ்ரீ எனும் பெயரில் தான். விஜய் தொலைக்காட்சியில் வெளியான “கனா காணும் காலங்கள்’ இரண்டாவது சீசனில் லீட் ரோலில் அறிமுகமானர் ஶ்ரீ. சிறு சிறு இடைவேளைகளிற்கு விட்டு நடித்தாலும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது ஶ்ரீ ஸ்பெஷல்.

இயற்பெயர்  ஶ்ரீராம் என்றாலும் ரசிகர்களிடம் பரீட்சயப்பட்டது, ஶ்ரீ எனும் பெயரில் தான். விஜய் தொலைக்காட்சியில் வெளியான “கனா காணும் காலங்கள்’ இரண்டாவது சீசனில் லீட் ரோலில் அறிமுகமானர் ஶ்ரீ. கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேஷன் படித்துக் கொண்டு,சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீ, இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்,சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதில் நடிக்க முடியாமல் போக, 2012-ஆம் ஆண்டு மீண்டும் பாலாஜி சக்தி வேலின் இயக்கத்தில் வெளியான “வழக்கு எண் 18/9” திரைப்படத்தில் லீட் ரோலில் ஹீரோவாக அறிமுகமானார்.


இந்த திரைப்படத்தில் இன்னொசண்ட்-ஆன ஒரு ஏழை இளைஞனின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார்,இதற்காக நிறைய பாராட்டுகளை பெற்றார்.இதனை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்பட்த்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்,2016-ஆம் ஆண்டு “வில் அம்பு” என்னும் திரைப்படத்தில் நடித்தார்,சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த “மாநகரம்” திரைப்படத்திலும் சட்டில் ஆன ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார்.

 

சிறு சிறு இடைவேளைகளிற்கு விட்டு நடித்தாலும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது  ஶ்ரீ ஸ்பெஷல்.இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இவர், ஒரு வாரத்தில் உடல் நலம் காரணமாக வெளியேறினார்.  

தொகுப்பு : GOMATHI S M