ஸ்ரீதிவ்யா | Latest tamil news about Sri Divya | VikatanPedia
Banner 1
நடிகை

ஸ்ரீதிவ்யா

ஹைதராபாத்தில் பிறந்த ஶ்ரீதிவ்யாவுக்கு, இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால்தான், மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கு டிவி சீரியல்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, 2010-ம் ஆண்டில் வெளியான 'மனசாரா' என்ற தெலுங்குப் படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

2010-ம் ஆண்டில் வெளியான 'மனசாரா' என்ற தெலுங்குப் படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி. அடுத்த படமான 'பஸ் ஸ்டாப்' வெற்றிபெற்று, இவருக்கான இடத்தில் இறக்கிவிட்டது. 

மூன்று தெலுங்குப் படங்களுக்குப் பிறகு, பொன்ராம் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் தமிழில் என்ட்ரி. 'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், பாவாடை தாவணியில் இவர் காட்டிய ஸ்மார்ட் அண்ட் ஸ்வீட் மேனரிசங்களும் ஆசம். நான்கு வரிகளைக் கடக்கும்போதே, 'ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?' என்ற வரிகள் மனசுக்குள் கடந்துபோயிருக்கும்.

ஶ்ரீதிவ்யாவின் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. இருப்பினும் முறைப்பும் விறைப்புமாக முறுக்கிக்கொண்டு நிற்காமல், அன்பான அப்பாவாக, அமைதியான அதிகாரியாக இருப்பாராம்.

தொகுப்பு : விகடன் டீம்