ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

பிறப்பு:

நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர்  ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.

திரைப்பயணம்:

ஸ்ரீதேவி  தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்திப்படமான 'துணைவன்' திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில்  அறிமுகமானார் ஸ்ரீதேவி. 'ஜூலி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி. 'நம் நாடு', மற்றும் 'என் அண்ணன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். 'வசந்த மாளிகை' மற்றும் 'பாரத விலாஸ்' திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர். மேலும்'16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ,'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி. 

ஸ்ரீதேவி, 1978-ல்  'சால்வா சாவான்' படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்தத் திரைப்படத்தில் இருந்துதான் ரசிகர்களால் ஸ்ரீதேவி, 'தண்டர் தைஸ்' என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார்.   பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.

1986-ஆம் ஆண்டில், ஸ்ரீதேவி  'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்து வெளியாகிய 'நாகினா' திரைப்படம் அந்த வருடத்தின் இரண்டாவது பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் 'மெயின் தேரி துஷ்மான்'  பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும். 1987-ல் ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான 'மிஸ்டர் இந்தியா' திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.

இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான 'ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா' திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, 'இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்' எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

1996-ல் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு இல்லறத்தில் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கலையுலக வாழ்வைவிட்டு தற்காலிகமாக விலகினார். 

மீண்டும் திரைப்பயணம்:

1997-ல் இருந்து பதினைந்து வருடங்கள் பெரியதிரையில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூலை ஜப்பானில் குவித்தது இந்தத் திரைப்படம். 

நடிகர் விஜய் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். 'புலி' திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு அத்தையாக நடித்தார் ஸ்ரீதேவி. 1986-ஆம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' திரைப்படத்திற்குப் பிறகு, 'புலி' திரைப்படத்தில் தமிழில் டப்பிங் பேசினார் ஸ்ரீதேவி. 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் அஜித்துடனும் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 

தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும். அவர் அறிமுகமான 'துணைவன்' திரைப்படம் வெளியான ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன ஶ்ரீதேவியின் 'மாம்' திரைப்படமும் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது.

தலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி பிப்ரவரி 24, 2018 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இருந்தாலும் காலங்கள் கடந்தும் அவரது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஸ்ரீதேவி. 

 

"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!" - கலங்கும்  பாரதிராஜா #Sridevi
கே.ஜி.மணிகண்டன்

"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!" - கலங்கும் பாரதிராஜா #Sridevi

"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ..." - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்! #Sridevi
ப.தினேஷ்குமார்

"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ..." - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்! #Sridevi

ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்! #Sridevi
எம்.ஆர்.ஷோபனா

ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்! #Sridevi

Sridevi Death Mystery: What was Sridevi’s life like? | Ram Gopal Varma
விகடன் விமர்சனக்குழு

Sridevi Death Mystery: What was Sridevi’s life like? | Ram Gopal Varma

How did Sridevi's Corpse reached home ? | Who is Asharaf ?
விகடன் விமர்சனக்குழு

How did Sridevi's Corpse reached home ? | Who is Asharaf ?

ஸ்ரீ தேவி: குழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை ! | Sridevi Death
விகடன் விமர்சனக்குழு

ஸ்ரீ தேவி: குழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை ! | Sridevi Death

Is Kamal Haasan going for Sridevi's funeral ?
விகடன் விமர்சனக்குழு

Is Kamal Haasan going for Sridevi's funeral ?

Sridevi death mystery: What is Sridevi cause of Death?
விகடன் விமர்சனக்குழு

Sridevi death mystery: What is Sridevi cause of Death?