சுஜா வருணி

சுஜா வருணி

சுஜா வருணி

படி .....படி(buddy) என்ற வார்த்தை கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வரூபவர் சுஜா வருணீ தான்.பல படங்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரிய திருப்பு முனையாக இருக்கும்.கமல் ஹாசன் அவர்களே உன் அப்பாவாக உன் வீட்டில் வந்து நான் சாப்பிடுகிறேன் என்று பிக் பாஸ்ஸில் சொன்னது.சுஜாவிருக்கு கிடைத்த பிக் பாஸ் போனஸ் என்றே சொல்லலாம்.

பிறப்பு :
இவர் சென்னைசியிலேயே பிறந்து வாழ்ந்தவர்.1985 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் பிறந்தார்.

சிறுவயதில் திரையுலகம் :
இவரின் இயற்பெயர் சுஜா நாயுடு என்பதை திரையுலக பயணத்தின் போது சுஜா வருணீ என மாற்றி அமைத்து கொண்டார் .15 வயத்திலேயேத் திரையுலகில் கால் பதித்தார் .பிளஸ் 2 என்பதே சுஜாவின் முதல் படம்.சிறு வயத்திலேயேத் இவர் நடிப்பதால் சுஜாவின் தாய்க்கு பட வாய்ப்பு கிட்டிய சந்தோஷத்தை விட தயக்கமே அதிகமாக இருந்தது.

முதல் படம் :
பிளஸ் 2 திரை படமானது 2002 ஆம் ஆண்டு வெளி வந்தது.சினிமா பின்னணி ஏதும்மில்லாமல் சினிமா அனுபவமும் இல்லாமல் இருந்த போதும் பிளஸ் 2 படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.  சுஜா நடித்த பிளஸ் 2 படம்  வெளிவருவது குறித்து பல பிரச்சனைகள் இருந்ததால்  படம் வெளியிடாமலே போனது.இதுவே சுஜா சினிமா துறையிலிருந்து சிறிது காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் தள்ளி இருக்க காரணமயிருந்தது.

ரீ என்ட்ரி :
அதன் பின் புது உத்வேகம் பெற்று வந்த சுஜா 2004 ஆம் ஆண்டு சிறி காந்த் நடித்து வெளியான வர்ணஜாலம் படத்தில் மத மத என்ற ஒரு பாட்டிற்கு மட்டும் ஸ்ரீதர் மாஸ்டருடன் இணைந்து நடமாடினர். இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய திரையுலகில் ஒரு சில பாட்டிற்கு மட்டும் நடனமாடுவதை வழக்கமாய் கொண்டிருந்தார்.இவருக்கும் இம்மாதிரியான வாய்ப்புகளே பெரும்பாலும் கிடைத்தன.

டான்ஸர் சுஜா :
2000 களில் கவர்ச்சி மிகுந்த பாடல்களுக்கு நடனமாடி வந்தார்.இது சுஜாவை கவர்ச்சி நடிகையாக அடையாளம் காட்டியது திரையுலகிற்கு. ஆரம்ப காலகட்டத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் சுஜாவிருக்கு திரையுலகம் தன்னை பற்றி நினைப்பதை புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. இது குறித்து ஒரு இன்டெர்வியூவில் கேட்ட போது அவர் கூறிய பதில் " என்னை பொறுத்தவரை கவர்ச்சிகரமான நடனம் ஆடுவது என்பது கடினமே.அதில் தவறேதும் இல்லை சில்க் ஸ்மிதா ,டிஸ்கோ சாந்தி மற்றும் ரம்யா கிருஷ்ணன் முதலானோர் கவர்ச்சி மிகுந்த பாடலுக்கு நடனமாடுவது மேலும் நடிப்பது ஆகிய இரண்டையுமே சிறந்த விதத்தில் கையாண்டுள்ளனர்.தேவயானி கூட கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி உள்ளார்.பிறகு அவர் நல்ல நடிகையாக உயர்ந்துள்ளார்.இவர்களை போலவே நானும் ஹீரோயினாக நடிப்பதற்க்கே சினிமாவிற்கு வந்தேன்."என்றார்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தது :
2008 ஆம் ஆண்டு வெளிவந்த குசேலனுக்கு பிறகு சுஜா என்பவள் கவர்ச்சி பாடலுக்கு மட்டும் நடனமாடுபவள் என்ற முகத்திரையை கிழித்தெரிந்து குறிபிப்பிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க விரும்பினார்.குசேலன் படத்தை இயக்கிய பி.வாசு அவர்கள் சுஜாவிருக்கு பெரும் உதவி புரிந்தார்.அதற்கடுத்து 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான அப்தரக்ஸ மற்றும் அதன் தெலுங்கு ரீ மெக்கான அதே ஆண்டு வெளிவந்த நாகவல்லி இரண்டு படங்களிலும் சுஜாவிருக்கு வாய்ப்பு அளித்தார்.இவ்விரு படங்களுக்கு பிறகு தெலுங்கு கன்னட மொழிகளில் பல வாய்ப்புகள் சுஜாவை தேடி வந்தன. குண்டெல்லா கோடரி , அலிபாபா ,ஓக்கடே டோங்கா முதலிய படங்களில் பலராலும் பரட்டப்படும் வகையில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.தெலுங்கு படங்களில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல் அவ்வப்பொழுது தமிழ் படங்களிலும் நடித்து வந்தார்.

கதாநாயகியாக முதல் படம் :
மிளகா  படத்திற்கு கிராமத்து தொனியில் ஒரு பெண்ணை தேடி கொண்டிருந்தார் இயக்குனர் ரவி மரியா அதற்காக நடை பெற்ற நேர்முக தேர்வில் சுஜாவும் கலந்து கொண்டிருக்கிறார்.சில நாட்களுக்கு பிறகு இயக்குனர் ரவியிடம் இருந்து சுஜாவிருக்கு அழைப்பு வந்தது.நேரடியாக மதுரையில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் வந்து கலந்து கொள்ளுங்கள் என்கிற தகவல் மட்டுமே இவருக்கு கொடுக்கப்பட்டது.அதன் பின் தான் சுஜாவிருக்கு தெரிய வந்தது நான் நடிக்க போவது   முன்னணி பாத்திரம் என்று.

திரையுலகம் அள்ளி தந்த வாய்ப்புகள் :
அதை தொடர்ந்து அறிவியல் கருத்துக்கள் நிறைந்த அப்பச்சி கிராமம் படத்தில் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தினார். கிடரி படத்தில் பழமைத்துவம் வாய்ந்த பெண்ணாக உருவெடுத்து சசிக்குமாருடன் சேர்ந்து அசத்தினார்.

2017 ஆம் ஆண்டு இரவுக்கு ஆயிரம் கண்கள் தமிரனுடைய ஆன் தேவதை ,அருண் விஜயின்  குற்றம் 23 மற்றும் சத்ரு இந்த படங்களை எல்லாம் நிறைவு செய்துவிட்டு தான் பிக் பாஸ்ஸில் நுழைந்திருக்கிறார்.

படங்கள் தவிர :
படங்கள் தவிர அரசன் சோப்,சரவணா ஸ்டோர்ஸ் எலிடே, சன் கோல்ட் கவரிங்,நிஜாம் பாக்கு மற்றும் கவெர்ட்மெண்ட் டிவசி முதலிய விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

என்னடா இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ண வச்சிடீங்க🤪 Suja & Shiva Ultimate Fun Interview🤣 #bbjodigal
வெ.அன்பரசி

என்னடா இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ண வச்சிடீங்க🤪 Suja & Shiva Ultimate Fun Interview🤣 #bbjodigal

Pregnancy தாண்டி சொல்ல முடியாத நிறைய வலிகளை மறைச்சுதான் ஆடினேன்- Suja & Shiva Interview | BB Jodigal
வெ.அன்பரசி

Pregnancy தாண்டி சொல்ல முடியாத நிறைய வலிகளை மறைச்சுதான் ஆடினேன்- Suja & Shiva Interview | BB Jodigal

விகடன் TV - ரிமோட் பட்டன்
அய்யனார் ராஜன்

விகடன் TV - ரிமோட் பட்டன்

BB Ultimate 15: "என்னங்க கேம் இது... முடியல தலைவரே!" சொல்ல வேண்டியது சிநேகன் மட்டுமல்ல, நாமும்தான்!
சுரேஷ் கண்ணன்

BB Ultimate 15: "என்னங்க கேம் இது... முடியல தலைவரே!" சொல்ல வேண்டியது சிநேகன் மட்டுமல்ல, நாமும்தான்!

BB Ultimate எவிக்‌ஷன்: சுஜா வருணி, பாலா, அபிநய், ஜூலி - இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
அய்யனார் ராஜன்

BB Ultimate எவிக்‌ஷன்: சுஜா வருணி, பாலா, அபிநய், ஜூலி - இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

BB Ultimate - 5: 'காஃபித்தூளும் கம்யூனிஸமும்' கண்கலங்கிய வனிதா என்ன தான் பாஸ் நடந்துச்சு..!
சுரேஷ் கண்ணன்

BB Ultimate - 5: 'காஃபித்தூளும் கம்யூனிஸமும்' கண்கலங்கிய வனிதா என்ன தான் பாஸ் நடந்துச்சு..!

தர்மசங்கடம் பாஸ்!
நா.கதிர்வேலன்

தர்மசங்கடம் பாஸ்!

சுஜா வருணி பங்கேற்கும் `அம்மாவாகிய நான்!' - அவள் விகடனின் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி #WowMom
சு.சூர்யா கோமதி

சுஜா வருணி பங்கேற்கும் `அம்மாவாகிய நான்!' - அவள் விகடனின் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி #WowMom

எங்கள் இன்ஸ்டாவில் எல்லா நாளும் கார்த்திகை!
ஆ.சாந்தி கணேஷ்

எங்கள் இன்ஸ்டாவில் எல்லா நாளும் கார்த்திகை!

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்
ச. ஆனந்தப்பிரியா

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

ஹெல்த் ஸ்பெஷல்: நலம் வாழ...
ந.பொன்குமரகுருபரன்

ஹெல்த் ஸ்பெஷல்: நலம் வாழ...

மனோகர் - திவ்யா, கார்த்திக் - ஷக்தி... தமிழ் சினிமா எப்போதும் மறக்காத காதல் ஜோடிகள்!
ச. ஆனந்தப்பிரியா

மனோகர் - திவ்யா, கார்த்திக் - ஷக்தி... தமிழ் சினிமா எப்போதும் மறக்காத காதல் ஜோடிகள்!