சூர்யா

சூர்யா

சூர்யா

ரசிகர்களிடையே சூர்யா என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் சரவணன். தமிழ் தமிழ் திரையுலகனின் பழமையான மற்றும் குணசித்திர நடிகரானா சிவக்குமாரின் முதல் மகன் சூர்யா.தமிழ் பெண்களின் ஹார்ட் த்ராப்-ஆக எப்போதும் இருக்கும் சூர்யா,தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத முன்னனி நடிகர் ஆவார்.


இளமை பருவம்:சென்னையில் உள்ள செயிண்ட் பீட்ஸ் பள்ளி,மற்றும் பத்ம சேஷாஸ்ரி பவன் இரண்டிலும் பள்ளிப்படிப்பை முடித்த சூர்யா,சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு கார்த்தி என்ற தம்பியும் பிருந்தா என்ற தங்கையும் உள்ளனர்.
 
சினிமா பயணம்:தந்தை ஒரு பிரபலாமான முன்னனி நடிகராக இருந்தாலும்,சூர்யாவிற்கு திரையுலக அறிமுகம் அவ்வளவு எளிதாக அமைந்து விட வில்லை,அவர் திரை பயணத்தில் நடித்த ஆறேழு படங்கள் சற்று தடுமாறித்தான் முன்னேறினார்.


இயக்குனர் வசந்த்-ன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “நேருக்கு நேர்”,இந்த திரைப்படத்தில் திரைக்கு அறிமுகமானார் சூர்யா,அதற்கு பின் 1991-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த “ஃபிரண்ஸ்” திரைப்படத்தில் இளைய தளபதி விஜையுடன் சேர்ந்து நடித்தார்

,
தனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததும்,தனக்கென ஒரு தனி பாணியை நடிப்பில் அமைத்துக்கொள்ளுமாறும் தனக்கு அறிவுரை வழங்கியது நடிகர் திரு.ரகுவரன் என சூர்யா நிறைய பேட்டிகளில் கூறி இருக்கிறார்.தொடர்ந்து இயக்குனர் பாலா வின் நந்தா திரைப்படத்தில் தன் நடிப்பை வெகுவாக மெருகேற்றிக் கொண்டு களத்தில் குதித்தார் சூர்யா,இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றார்.


பின்,கவுதம் வாசுதேவ் மேனனின்,க்ளாசிக் காப் ஸ்டோரியான காக்க காக்க-வில் அதிரடி,ரோமான்டிக் காப்-ஆக வந்து பெண்களின் மனம் கவர்ந்தார்,நீட் ஹேர் கட்,ஃபிட்-ஆன பாடி,முரட்டுத்தனம் அதே சமயம் ரோமான்ஸ் கலந்த பார்வை இன்று வரை சூர்யா ஸ்பெஷல்.மீண்டும் பாலாவின் இயக்கத்தில் சூர்யா,ஆனால் இம்முறை கதைக்கு பலம் சேர்க்கும் திரைக்கதையை தூக்கி நிறுத்தும் மிகவும் அழகான ஆழமான ஹூமர் சென்ஸ் நிறைந்த கேரக்டரில்,பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா நடித்த சக்தி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது,கல கல டையலாக்குகள்,அந்த அழுக்கு சட்டை அழுக்கு லுங்கி-யிலும் கவர்ந்து இழுக்கும் கரிஷ்மா என சூர்ய மிக அழகாக நேர்த்தியாக அந்த கதாபாத்திரத்தை கொண்டு சென்றிருப்பார்,தொடர்ந்து கிராமத்து ஊனமுற்ற இளைஞனாக மற்றும் பாக்ஸ்ராக இரண்டு வேடங்களில் நடித்த பேரழகன்,சமுதாயத்தின் அநீதிகளை அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய களமிறங்கும் மணிரத்னத்தின் மைக்கேல்-ஆக ஆயுத எழுத்திலும்,தன் நடிப்பை வெவ்வேறு கோணங்களில் ஆய்வு படுத்தினார் சூர்யா.


2004-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி திரைப்படம்,தமிழில் சற்றே வித்தியாசமான முயற்சி,இதிலும் தன் நடிப்பிற்கு நிறைய தீனி தேடிக்கொண்ட சூர்யா,சற்று கமர்சியல் படங்களின் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்,இயக்குனர் ஹரி இயக்கத்தில் சென்னை தர லோகல் குப்பத்தை சேர்ந்த இளைஞனாக சென்னை தமிழ் பேசி நடித்திருப்பார்,இதனை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா தயாரிப்பில் ஜோதிகா மற்றும் பூமிகா ஜோடியாக “சில்லுனு ஒரு காதல்”திரைப்பட்த்தில் நடித்தார்.


பதட்டம் முதல் குறுகுறுப்புடன் சேர்ந்த அழகான காலேஜ் காதலிற்கும்,திருமணமான மனைவியுடன் காட்டும் மொத்த உரிமை காதலுக்கும் அழகாக தெளிவாக வித்தியாசம் காட்டி இருப்பார் சூர்யா,இன்று வரை இந்த திரைப்படம் அனைவரின் ஃபேவரை லிஸ்டில் இருக்க இதுவும்,ஏ.ஆர்.ரகுமானின் மயக்கும் இசையே காரணம்.பல வருடங்களாக கிட்டத்தட்ட ஏழு படங்கள் சேர்ந்து நடித்த ஜோதிகாவுடனான காதல் 2006-இல் திருமணத்தில் முடிந்தது,ஜோதிகாவை திருமணம் செய்ய பெற்றோர்களின் சம்மதத்திற்காக  வெகு நாட்கள் காத்திருந்தது இந்த ஸ்டார் ஜோடி.ஒரு வழியாக அனைவரின் சம்மத்த்தோடும் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது,சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பும்,ஆராவாரங்களும் இன்று வரை எந்த ஜோடிக்கும் நடக்கவில்லை.இன்று 10 வயதில் தியா என்ற மகளும் 7 வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர்.


திருமணம் முடிந்து சூர்யா கம்-பேக் கொடுத்தது கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான “வாரணம் ஆயிரம்”தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவின் ஆழத்தையும் அதன் அழுத்தத்தையும்,அழகையும் மிக நேர்த்தியாக பார்க்கும் அனைவரின் வாழ்வோடு ஒட்டும் விதமாக திரைக்கு கொண்டு வந்திருப்பார்கள் இந்த கூட்டணி.சூர்யா மிகவும் மெச்சூர்ட் ஆக்டிங்-ஐ வெளிக்கொண்டு வந்தது  இந்த திரைப்படத்தில்,ஒவ்வொருவரின் பர்சணல் ஃபேவரைட்டில் இடம் பிடித்த்து வாரணம் ஆயிரம்.இந்த திரைபட்த்திற்காக தமிழ் நாடு மாநில விருது,ஃபிலிம் ஃபேர் விருது,என தன் நடிப்பிற்காண அங்கீகாரங்களை பெற்றார் சூர்யா.


2009-ஆம் ஆண்டு மீண்டும் கமர்ஷியல் நேரம்,ஒளிப்பதிவாளர்,இயக்குனர் கே.வி.ஆனந்த இயக்கத்தில் “அயன்” திரைப்பட்த்தில் நடித்தார்,வட சென்னையின் கடத்தல் தொழிலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்-ஆனது அயன். தொடர்ந்து ஆதவன்,ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரத்த சரித்திரம் போன்ற திரைபடங்களில் நடித்தார்.ஹிந்தியில் “ரத்த சரித்திரம்”மூலம் அறிமுகமானார் சூர்யா.


மீண்டும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தொலைந்து போன மறந்து போன  ஒரு தமிழரின்-போதிதர்மரின்  பெருமைகளையும் அண்டை நாடுகளின் க்ரோத்த்தையும்,கோபத்தையும் வெளிப்படுத்தும் “உயிர் போர்” பயோ வார்-இன் கான்சப்டையும் நமக்கு தெரிவித்த திரைப்படம் ஏழாம் அறிவு,இதே போல் கே.வி ஆனந்த்துடன் அடுத்த கூட்டணியாக ஒட்டிப் பிறந்த ரெட்டையர்களின் வாழ்வையும் உணவு பொருட்களின் மீது நட்த்தப்படும் அரசியலையும் பேசும் திரைப்படமாக “மாற்றான்” கதை வலுவாக இருந்தும் திரைக்கதை சற்றே வலுவாக இல்லாத் காரணத்தினால் படம் சரியாக போகவில்லை.இடையில் ஹரி இயக்கத்தில் சிங்கம் திரைப்பட்த்தில் மிரட்டும் துரை சிங்கமாக உருவெடுத்த சூர்யா,காலம் காலமாக போற்றப்படும் போலீஸ் கேரக்டர்களான அலெக்ஸ் பாண்டியன்,சத்ரியன்,ஆறுச்சாமி லிஸ்டில் சேர்ந்தார் துரை சிங்கம்.


2012-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சுர்யா,அதே ஆண்டு மெகா ஹிட்-ஆன சிங்கம் திரைபடத்தின் தொடர்ச்சியாக சிங்கம்-2 வெளியானது,இதிலும் துரை சிங்கத்தை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுக்கவில்லை.கமர்ஷியல் படங்களுக்கு அதிக கவணம் செலுத்திய சூர்யா இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் மும்மை தாதாக்களின் படமாக “அஞ்சான்”திரைபடத்தை இயக்கினார்.தன்னுடைய தோற்றத்தில் “டான்” மெர்சல் காட்டிய சூர்யா கதையை கேட்கும் போது தவறியது ஏன் என்று தெரியவில்லை,2014-ஆம் ஆண்டு அதிகமாக மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்யப்பட்ட திரைப்படம் அஞ்சான்.பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாஸ்” இதுவும் அதிகமான எதிர்பார்ப்பை கொடுத்து காட்டு மொக்கை செய்த திரைப்படம்.


“வி வாண்ட் மோர் எமோஷன்”சூர்யா என்று கேட்ட ஆடியஸிடம் சூர்யா கொடுத்த கம் பேக்கே விக்ரம் குமார் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான “24” திரைப்படம்.ஹீரோ வில்லை,தந்தை என மூன்று கதாபாத்திரங்களிலும் சூர்யா அசத்தல் பெர்ஃபாமன்ஸ்.டெக்னிகல் ஆக மிகவும் ஸ்ட்ராங்காண திரைப்படம்,நூறு கோடி க்ளப்பில் நுழைந்த  சூர்யாவின்  முதல் திரைப்படம் இதுவே,தொடர்ந்து  சிங்கம்-2-வின் தொடர்ச்சியாக சிங்கம்-3 இல் நடித்த துரை சிங்கத்திற்கு வரவேற்புகள முந்திய இரண்டு பாகங்களின் அளவு இருந்தன.தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “தானா சேர்ந்த கூட்டம்”திரைப்பட்த்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
 
நடிப்பைத்தாண்டி பல அறம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் சூர்யா ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்களின் படிப்பிற்கு வழிவகுக்கும் “அறம்”எனும் அமைப்பின் தலைவராக உள்ளார்,பல ஏழை குழந்தைகள் படிப்பிற்கு உதவும் சூர்யா தன் உடல் உறுப்புகளையும் தானமாக கொடுக்க உறுதி அளித்துள்ளார்.

எஸ்.எம்.கோமதி

"சிம்புவுக்கு மாஸா ஒரு டைட்டில்; கிராமத்துக் கதை ரெடி; `நடுநிசி நாய்கள்' ஏன் புரியலை?!"- கௌதம் மேனன்
மா.பாண்டியராஜன்

"சிம்புவுக்கு மாஸா ஒரு டைட்டில்; கிராமத்துக் கதை ரெடி; `நடுநிசி நாய்கள்' ஏன் புரியலை?!"- கௌதம் மேனன்

"`மின்னலே' கதையை மாதவன் மாத்திட்டார்!" - கௌதம் மேனன்
சனா

"`மின்னலே' கதையை மாதவன் மாத்திட்டார்!" - கௌதம் மேனன்

முதலமைச்சர் சூர்யா, தங்கமகன் துருவ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்தியர்! டாப் 5 செய்திகள்
தேனூஸ்

முதலமைச்சர் சூர்யா, தங்கமகன் துருவ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்தியர்! டாப் 5 செய்திகள்

12,500 அமெரிக்க டாலர்கள்... ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் `சூரரைப் போற்று' இணைந்தது எப்படி?!
கார்த்தி

12,500 அமெரிக்க டாலர்கள்... ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் `சூரரைப் போற்று' இணைந்தது எப்படி?!

"சூர்யாவின் `அருவா' படத்துக்கும் அருண் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை!"- ஹரி படத்தில் என்ன ஸ்பெஷல்?!
சனா

"சூர்யாவின் `அருவா' படத்துக்கும் அருண் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை!"- ஹரி படத்தில் என்ன ஸ்பெஷல்?!

`பொன்னியின் செல்வன்' முதல் `சாணிக் காயிதம்' வரை... 2021-ல் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?!
உ. சுதர்சன் காந்தி

`பொன்னியின் செல்வன்' முதல் `சாணிக் காயிதம்' வரை... 2021-ல் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?!

"சூர்யாகிட்ட ஒரு Beer போடலாமானு கேட்டேன்!" - Karunas | Soorarai Pottru
Gopinath Rajasekar

"சூர்யாகிட்ட ஒரு Beer போடலாமானு கேட்டேன்!" - Karunas | Soorarai Pottru

சினிமா விகடன்: சோசியல் pulse
சுப தமிழினியன்

சினிமா விகடன்: சோசியல் pulse

ஹீரோயின் ஒல்லியாதான் இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்கா? - அபர்ணா பாலமுரளி
ஆர்.வைதேகி

ஹீரோயின் ஒல்லியாதான் இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்கா? - அபர்ணா பாலமுரளி

"I didn't do What Sudha Kongara Wanted!"- Aparna Balamurali (Bommi)| Surya | Soorarai Pottru
Gopinath Rajasekar

"I didn't do What Sudha Kongara Wanted!"- Aparna Balamurali (Bommi)| Surya | Soorarai Pottru

Soorarai Pottru Set Making Video | Jacki Narrates | Sudha Kongara | Suriya
Gopinath Rajasekar

Soorarai Pottru Set Making Video | Jacki Narrates | Sudha Kongara | Suriya

"Suriya சட்டைய கிழிச்சுட்டார்!" - `Che' Krishnakumar Narrates | First Interview after Release
Gopinath Rajasekar

"Suriya சட்டைய கிழிச்சுட்டார்!" - `Che' Krishnakumar Narrates | First Interview after Release