டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

 தமிழக அரசின் பரபரப்பான  அரசியலின் முக்கியமான புள்ளியாக இருப்பவர் டி.டி.வி.தினகரன். இன்றய அனைத்து செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலும் தொடர்ந்து வலம் வருபவர். டி.டி.வி.தினகரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அம்மா பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் ஆவார். தற்போது வருமானவரித் துறையின் அதிரடி சோதனையில் சிக்கி இருக்கும் வி.கே. சசிகலாவின் குடும்ப உறுப்பினர் மற்றும் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

தனிப்பட்ட வாழ்க்கை:
         டி.டி.வி.தினகரன் திருத்துறைப் பூண்டியில் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ல் பிறந்தார். இவர் தாய் வனிதாமணி மற்றும் தந்தை விவேகானந்தன். இவர் தாய் வனிதா அதிமுக கட்சியின் பொதுச் செயலாலரான வி.கே.சசிகலாவின் மூத்த சகோதரி என்பது குறிப்படத்தக்கது. இவர் பொறியியல் பட்டதாரி. தினகரன் தான் குடும்பத்தில் மூத்தவர். இவருக்கு பாஸ்கரன் மற்றும் சுதாகரன் என இரு சகோதரர்கள். இவரது தம்பி சுதாகரன் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன். சுதாகரன் சசிகலாவின் செல்ல பிள்ளையாக இருந்ததும் இதற்கு ஒர் காரணம்.தினகரன் தனது மாமன் மகள் அணுராதாவை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உண்டு. தனது தந்தையின் பெயரயும் , தான் பிறந்த ஊரையும் தன் பேருடன் சேர்த்து டி.டி.வி.தினகரன் என மாற்றினார். இவர் பொதுவாக டி.டி.வி என்றே அழைக்கப்படுவார். முதலில் ஜெ.ஜெயலலிதாவின் காவல்காக சசிகலாவின் பரிந்துரையின் பேரில் கார்டனில் நுழைந்தார் தினகரன்.

அரசியல் வாழ்க்கை:
            அரசியல் நாட்டமுள்ள தினகரன் தனது சித்தியின் உதவியால் அதிமுக  கட்சியில் அறிமுகமானார். அறிமுகமான சில நாட்களிலே இந்தியப் பொது தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1999 ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் தான் அன்னியச் செலவானி மோசடி வழக்கில் சிக்கி தன்னை சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என அறிவித்து சர்ச்சையில் சிக்கினார். 2004 ல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரில் இருந்து விலக ,இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2010 வரையிலான தினகரனின் அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.இவர் தான் தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சார் ஜெ.ஜெயலலிதாவிடம் ஓ.பி.ஸ் யை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அறிமுகம் தான் ஓ.பி.ஸ் ஐ முதல்வர் பதவிக்கும் கொண்டு சென்றது. மேலும் வேலுமணி, தங்கமணி போன்றவர்களும் கட்சியில் வளர இவர்தான் காரணம் என கூறப்படுகிறது. பல அரசியல் காரணங்களால் சசிகாலாவின் குடும்பத்தை சேர்ந்த 12 பேரை  கட்சியை விட்டு நீக்கானார் அம்மா. இதில் தினகரனும் அடங்குவார். பின் சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்க அவரை மட்டும் கட்சியில் அனுமதித்தார் அம்மா. ஆக கட்சியை விட்டு நீக்கியதிலிருந்து  அம்மாவின் இறப்பிற்கு முன்பு வரை தினகரனுக்கு எந்த இடமும் வழங்கபடவில்லை. டிசம்பர் 5 அம்மா இறந்தபின் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அதிமுக கட்சியின் நிலையை புரட்டிப்போட்டது.  செல்வி.ஜெயலலிதாவிற்கு பின் கட்சியின் பொது செயலாலராக மாறினார் வி.கே.சசிகாலா. சசிகலாவின் வருகைக்கு பின் தினகரன் அரசியல் காட்டில் மழை தான். அம்மா இருக்கும் போது அதிகாரத்தை வெளிகாட்டாத தினகரன், இன்று கட்சியே எங்களோடது என்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டார். பொது செயலாளராக சசிகலா மாற துணை பொது செயலாளராக மாறினார் தினகரன். தற்போதய முதல்வர் எடப்பாடி ஆட்சி நடக்க தினகரனே பெறும் பங்கு காரணம். சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.ஸ் மாற அதிமுக கட்சி இரு அணிகளாக பிரிகிறது. இதில் தினகரன் அதிமுக (அம்மா) கட்சிக்கு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் தான் எழுந்தது ஆர்.கே.நகர் ( இராதா கிருஷ்ணன்) தொகுதி இடைத்தேர்தல். இதில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக தொப்பி சின்னத்தில்  போட்டியிட்டார். அந்நேரத்தில் அத்தொகுதி பணம் பட்டுவாடா சர்ச்சையில் சிக்கியதால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்தியது. காலமாற்றம் போல் இதன் பிறகு நடந்த அரசியல் மாற்றம் ஓ.பி.ஸ் மற்றும் ஈ.பி.ஸ் அவர்களை ஒன்று சேர்த்து புது திருப்பத்தை ஏற்படுத்தியது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்குப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுக்க முயன்றார் என டெல்கி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பிறகு முறையான ஆதாரம் இன்றி விடுவிக்கப்பட்டார். 2017 நவம்பர் 11 ல் அ.இ.அதிமுக கட்சி மற்றும் கட்சியின் சின்னம் இரட்டை இலையும் தினகரனிடமிருந்து பரிக்கப்பட்டது. அதில் இருந்து இது வரை சின்னம் சின்னம் இல்லாத கட்சியின் தலைவராக செயல்படுகிறார். 

வருமான வரிதுறை பற்றி தினகரனின் கருத்து:
       மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி இன் அதிரடி கருப்பு பணம் தேடுதல் வேட்டையில் சிக்கியது சசிகலா குடும்பம். அதிக இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் டி.டி.வி.தினகரன் முக்கிய புள்ளியாக அமைந்தார். வருமான வரித்துறையின் ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும், மேலும் தினகரன் வீட்டில் பாதாள அறை இருப்பதாகவும் சோதனையின் போது தெரிகிறது. இது பற்றி நமது விகடன் டிவிக்கு தினகரன் அளித்தப் பேட்டியில் " எங்களுக்கு வரும்  வருமானவரிச் சோதனை எல்லாம் திட்டமிட்ட கூட்டு சதி இதற்கு மத்திய அரசு துணைபோகிறது. நாங்கள் படித்த குடும்பம் பிளாட்பாரத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்களிடம் இருந்து கட்சியை முற்றிலும் கைபற்றும் நோக்கத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள். மேலும் திமுக விற்க்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் குறுப்பிட்டுள்ளார்.
 

பன்னீர் ஸ்கெட்சை முறியடிக்க எடப்பாடி போடும் மெகா திட்டம்! - அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னென்ன?!
அன்னம் அரசு

பன்னீர் ஸ்கெட்சை முறியடிக்க எடப்பாடி போடும் மெகா திட்டம்! - அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னென்ன?!

சீரியஸ் ஸ்டாலின்... மீண்டும் ரஜினி - மோதும் தோட்டாக்கள்! | Elangovan Explains
சே.த இளங்கோவன்

சீரியஸ் ஸ்டாலின்... மீண்டும் ரஜினி - மோதும் தோட்டாக்கள்! | Elangovan Explains

டிடிவி-யின் டெல்லி டீல்; முட்டிக் கொள்ளும் பன்னீர் டீம்; எடப்பாடி ட்விஸ்ட்! | Elangovan Explains
சே.த இளங்கோவன்

டிடிவி-யின் டெல்லி டீல்; முட்டிக் கொள்ளும் பன்னீர் டீம்; எடப்பாடி ட்விஸ்ட்! | Elangovan Explains

பாஜக கொடுத்த நெருக்கடி... டிடிவி தவிப்பா?... தருணம் பார்க்கிறாரா? | Elangovan Explains
சே.த இளங்கோவன்

பாஜக கொடுத்த நெருக்கடி... டிடிவி தவிப்பா?... தருணம் பார்க்கிறாரா? | Elangovan Explains

SASIKALA-க்கு ஜோதிடர் கொடுத்த வார்னிங்; BJP-க்கு DMK புது ஸ்கெட்ச்! | Elangovan Explains
சே.த இளங்கோவன்

SASIKALA-க்கு ஜோதிடர் கொடுத்த வார்னிங்; BJP-க்கு DMK புது ஸ்கெட்ச்! | Elangovan Explains

``அதிமுக தொண்டர்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிச்சயம் நிறைவேறும்" - சசிகலா
சி. அர்ச்சுணன்

``அதிமுக தொண்டர்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிச்சயம் நிறைவேறும்" - சசிகலா

எடப்பாடிக்கு சசிகலாவின் புது குடைச்சல்! |Elangovan Explains
சே.த இளங்கோவன்

எடப்பாடிக்கு சசிகலாவின் புது குடைச்சல்! |Elangovan Explains

கொடநாடு விவகாரம்: எடப்பாடிக்கு சாதகமான திடீர் திருப்பம் |  Elangovan Explains
சே.த இளங்கோவன்

கொடநாடு விவகாரம்: எடப்பாடிக்கு சாதகமான திடீர் திருப்பம் | Elangovan Explains

“எடப்பாடி, பன்னீர்... துரோக நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!” - சுளீர் தினகரன்
BALAKRISHNAN R

“எடப்பாடி, பன்னீர்... துரோக நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!” - சுளீர் தினகரன்

`சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின்  எண்ணம்; அது நிறைவேறிவிட்டது’ -  திவாகரன் காட்டம்
கே.குணசீலன்

`சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம்; அது நிறைவேறிவிட்டது’ - திவாகரன் காட்டம்

எடப்பாடி மீதான வருத்தம்; சசிகலாவின் தூது - யூகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த வைத்திலிங்கம்!
கு. ராமகிருஷ்ணன்

எடப்பாடி மீதான வருத்தம்; சசிகலாவின் தூது - யூகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த வைத்திலிங்கம்!

மிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி! - ரகசியமாய் சந்தித்த 
10 அமைச்சர்கள்...
கழுகார்

மிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி! - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...