தமன்னா

தமன்னா

தமன்னா

ந்திய திரையுலகில் தற்போது பெயர் சொல்லும் முன்னனி நடிகைகளில் ஒருவர் தன்னா.  நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் ஒருவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் தனது முத்தரையை பதித்தவர். கதாபாத்தரத்தை முழுமையாக ஏற்று நடுப்பதுலும் , ஒரே படத்தில் பல குணங்களை வெளிக்காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர்.இவரது திரைபயணம் 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமன்னா. இதுவரை மூன்று மொழிகளிலும்  சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள தமன்னா, முதன் முதலில் சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான பகுதியில் சேர்ட்டன் விருதுக்கு நாமினேட் ஆன நடிகை என்னும் புகழையை ப் பெற்றார். இவருக்கு தென் கொரியாவில் உள்ள KEISIE international university இந்திய சினிமாவில் இவரது பங்களிப்பிற்காக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும் இவர் மிக உயரிய விருதான தயவதி  மோடி பெற்ற பெருமைக்கு 
உரியவர்.

ஆரம்பகால வாழ்க்கை

  தமன்னா 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ல் சந்தோஷ் ராஜனி பாட்டியா தம்பதியருக்கு மகளாகவும், ஆனந்திற்க்கு தங்கையாகவும் பிறந்தார். இவரது தந்தை டைமண்ட் வியாபாரி. இவர்கள் சிந்து சமவெளி நாகரீக வம்சாவழியினர். தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள மனிக்ஜி கூப்பர் எட்ஜூகேட்ஸன் ட்ரஸ்ட் பள்ளியில் படிப்பை முடித்தார். தனது 13வது வயதில் பள்ளி ஆண்டு விழாவில் நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த போது தான் அவரது திறமை கண்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இவர் புகழ்பெற்ற ப்ரீத்தி தேட்டரில் தனது பங்களிப்பை சில ஆண்டிகள் கொடுத்தார். இவர் 2005 ல் தனது 15 ஆவது வயதில் சந்சா ரோசன் செக்ரா என்ற பாலிவுட் படத்தில் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால் இப்படம் தோல்வியை தழுவியது. மேலும் அதே வருடத்தில் அபிஜித் சாவண்ட் என்ற ஆல்பம் பாட்டிலும் நடித்தார். 
    பின்பு 2006 மற்றும் 2005களில் தமிழ் மற்றும் தெலுங்கில் கேடி ம்ற்றும் ஸ்ரீ படங்களிலும் நடத்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெற தமன்னாவின் நடிப்பிற்கு அங்கீகாரமும் கிடைத்தது. இவரது நடிப்பு மன்னவன் பட விஜயசாந்திமற்றும் படையப்பா பட ரம்யா கிருஷ்ணன் நடிப்பிற்கு இணையாக இவரது நடிப்பு பேசப்பட்டது. பின் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வியாபாரி படத்தில் நடித்தார். படம் எதிர்மறை விமர்சனம் ,பாக்ஸ் ஆப்பிஸ் தோல்வியே என்றாலும் தமன்னாவின் நடிப்பு அதில்  பேசும் படியே அமைந்தது. அதே போல் 2007 லும் தெலுங்கில் ஹாப்பி நியூயரும், தமிழில் கல்லூரி என்ற இரு கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைக்கு கதாநாயகியானார். இரு படங்களும் வெற்றிப் பெற்றனர். இவ்விரு படங்களின் வெற்றி 56 வது filmfare award ல் சிறந்த கதாநாயகி அவார்ட்க்கு நாமினேட் செய்யப்பட்டார். 2008 ல் தெலுங்கில் ரவச்சந்திரன் ரெட்டி இயக்கத்தில்  காளிதாசு படத்தில் இடம் பெற்றார். இதற்கு நல்ல  விமர்சனம் கிடைத்தாலும் இதில் தமன்னாவிற்கு குறைவான இடமே. ஆனால் தனக்கு கொடுத்த இடத்திலும் காதல் மற்றும் தனது அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். 2009 ல் சூரெஜ் இயக்கத்தில் படிக்காதவன் படத்தில் நடித்தார். அது நல்லது, கெட்டது  கலந்த விமர்சனம் பெற்றாலும், அப்படம் கமர்சியல் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு பின் தெலுங்கில்  கிஷோர் குமார் பரதசனி இயக்கிய கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடித்தார் இப்படம் நல்ல மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சம அளவில் பெற்றிருந்தது. 
காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் நாவல் சார்ந்த கதையான ஆனந்த தாண்டவம் படத்தில் ஒரு குறும்பு பெண்ணாகவும்,சுயநல மிக்கவராகவும் நடித்திருந்தார். தமன்னாவின் நடிப்புக்கு நேர்மறைக் கருத்துக்கள் வந்தாலும், படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதை தொடந்து k.v.ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தில் இடம் பெற்றார். இப்படம் தமன்னாவிற்கு பெறும் வெற்றியை ஈட்டி தந்தது. பின் தமிழில் R.கன்னன் இயக்கிய ஜப் வி மீட் படத்தின் ரீமேக் படமான கண்டேன் காதலை படத்தில் நடத்த தமன்னா தனது வெகுளிதனமன நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் . இவர் 57 ஆவது filmfare award லும் சிறந்த நடிக்கைகான பிரிவில் தமிழ் மற்றும்  தெலுங்கில்  நாமினேட் ஆனார். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் நாமினேட் ஆன நடிகை பெருமையை தமன்னா   பெற்றார்.  மேலும் south scope award க்கும் சொந்தகாரர் ஆனார். இதற்கு பின்  சாலை பயண படமான பையா படத்தில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்தார். இது கமர்சியல் ரீதியாக வெற்றியை பெற்றது.  இதன் பின் இவர் 5வது விஜய் அவார்ட் மற்றும் 58 ஆவது film fare award லும் சிறந்த நடிகை பிரிவில் நாமினேட் செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு விஜயின் 50 ஆவது படமான s.p.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான சுறா படத்தில் நடத்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதுபோலவே M.ராஜா இயக்கத்தில் வெளியான சுரேந்திர ரெட்டிஸ் கிக்ஸ் படத்தின் ரீமேக் படமான தில்லாலங்கடியும் தோல்வியையே தழுவியது.

2010  க்கு பிறகு தமன்னாவின் பயணம்

    2011 ஆண்டு  சிவா இயக்கத்தில் விக்ரமர்குடா படத்தின் ரீமேக்கான சிறுத்தை படத்தின் கதாநாயகியானார். படம் வெற்றி பெற்றாலும் தமன்னாவின் நடிப்பு எதிர்மறையான கருத்துக்கு உள்ளானது. இதை தொடர்ந்து சுமார் இரண்டு வருடம் கழித்து தெலுங்கு திரையுலகுக்கு திரும்பிய தமன்னா சுகுமார் இயக்கத்தில் 100% லவ் படத்தில் இடம் பெற்றார். இப்படம் ரசிகர்கள் இடையே பெறும் வரவேற்ப்பை பெற்று வெற்றிப் பெற்றது. 59ஆவது filmfare award மற்றும் முதன் முதலில் south indian international award க்கும் தெலுங்கின் சிறந்த நடிகைக்கான பிரிவில் நாமினேடெ ஆனார். மேலும் சிறந்த நடிகை பிரிவில் CineMAA award மற்றும் Hyderabad Times Film award ம் பெற்றார். பின் 2011 ஆம் ஆண்டே v.v.வினாயக் இயக்கத்தில் பத்ரிநாத் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்மறை கருத்துக்களை பெற்றிருந்த போதும் பாக்ஸ் ஆப்பிஸ் கிட் அடித்தது. இதற்காக CineMAA award க்கு நாமினேட் செய்யப்பட்டார். பின் தமிழில் ஹரி  இயக்கத்தில் வேங்கை படத்தில், அப்பாவியுமாய், பழிவுணர்வும் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் நேர் மற்றும் எதிர்மறை கலந்த விமர்சனத்தைப் பெற்றது. இதன் பிறகு சுரேந்திர ரெட்டி  இயக்கத்தில்  நடித்த ஒசரவள்ளி தோல்வியை அடைந்தது. பின் இவர் தெலுங்கில்  நான்கு படங்கள் தொடர்ந்து நடித்தார். சம்பந் நேந்தி இயக்கத்தில் ராட்சா நடித்தார் இது கமர்சியல் வெற்றியை பெற்றது. திரையில் 50 நாட்கள் ஓடி அதிக வசூலைக் குவித்தது. இவர் 60 வது filmfare award லும் CineMAA Award லும் நாமினேட் செய்யப்பட்டார். அதற்கு அடுத்து A.கருணாகரன் இயக்கத்தில் எடுகன்டே பிரேம்மன்டோ படத்தில் தன் நடிப்பில் பாராட்டையையும், படத்தின் தோல்வியையும் அடைந்தார். அதன் பின் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ரெபேல் படத்தில் ஹிப் ஹாப் டாஸ் டீச்சராக நடித்தார்.இப்படமும் தோல்வியையே சந்தித்தது. தொடர் தோல்வி படங்களுக்கு பிறகு தமன்னாவிற்கு ஹிட் கொடுத்தப் படம் பூரிஜகனாத் இயக்கத்தில் வெளிவந்த கேமரமான் கங்கத்தோ ராம்பாபு. இப்படம் கமர்சியல் வெற்றிப் பெற்றது.

2013-2014 பாலிவுட் ,தெலுங்கு மற்றும் தமிழ்

      2013 ஆம் ஆண்டு மீண்டும் பாலிவுட் காலடி எடுத்து வைத்த தமன்னா சாஜித்கானோட் ஹிமத்வாலா படத்தில் நடித்தார். இது 1983 ல் வெளிவந்த அஜேதேஸ்கன் ரீமேக். அதில் ஸ்ரீதேவியின் நடிப்பு தமன்னாவிடம் இல்லை என விமர்சனம் பெற்று படம் தோல்வியை தழுவியது. பின் 2013 ல் தெலுங்கில் வேட்டை பட ரீமேக்கான டடாகா படத்தில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெறவே 3rd south indian international awards க்கு சிறந்த நடிகை பிரஅவஅல் நாமினேட் செய்யப்பட்டார். பின் சில ஆண்டுகள் கழித்து தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான  வீரம் படத்தில் முகம் காட்டினார்.இப்படம் நேர்மறை விமர்சனம் பெற்று பெறும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து கதநாயாகி கதாபாத்திரத்தை மையமாக கொண்ட சஜித்கான் இயக்கத்தில் வெளிவந்த ஹம்சக்கல்ஸ் மிக குறைவான விமர்சனம் பெற்று பாக்ஸ் ஆப்பிஸ் இழந்தது. இத்தோல்விக்கு பின் ஹிந்தியில் என்டர்டைன் மென்டில் நடித்தார். இப்படம் பாதி ஹிட் கொடுக்க 7th golden kela awards ல் வொர்ஸ்ட் நடிகை பரிவில் நாமினேட் செய்யப்பட்டார். இதற்கு அடுத்து ஸ்ரீனு விட்லா எடுத்த அகடு படத்தில் நடத்தார்.இப்படமும் தோல்வியையே தழுவியது.

பாகுபலிக்கு பின் தமன்னாவின் பயணம்

    2015 ல் ராஜமௌலி இயக்கத்தில் பல மொழிகளில் வெளியான பிரம்மாண்டமான பாகுபலி பார்ட்  1 ல் கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கென 5 முதல் 6 வரை தனது உடல் எடையை குறைத்து, முழு மூச்சாக நடித்தார். இப்படத்தின் வெற்றி தமன்னாவை இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆக்கியது. பின் தமிழில் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் இடம் பெற்றார்.இப்படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. இதன் பின் தெலுங்கில்  2015 ல் சம்பத் நேந்தியின் பென்கால் டைகர் படத்தில் நடித்தார். இப்படம் பெறும் வெற்றி பெற, தெலுங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது. தொடர்சியாக வம்சி இயக்கத்தில் வெளிவந்த ஊப்ரி படத்தின் ரீமேக்கான தோழா நல்ல விமர்சனங்களையே பெற்றது. பிறகு அவர நடித்த தர்மதுறை படம் மக்களிடையே பெறும் வரவேற்ப்பை பெற்றது. பெரிய படம் மட்டுமன்றி தமன்னா பாலிவுட்டில் குறும்படம் ஒன்றையும் நடித்துள்ளார். இதன் பின் தான் இதுவரை நடித்திடாத திரில்லர் படமான தேவியில் நடித்தார். அப்படத்தில் இவர் இரு கதாப்பாத்திரங்களில்  நடித்திருந்தார்.இப்படம் பெறும் வெற்றி பெற்று அவரின் நடிப்பிற்கு மற்றொரு சான்றாகவும் அமைந்தது. மேலும் 2016 ஆண்டு இவர் நடித்த  கத்திச் சண்டை படம் தோல்வியை தழுவியது. 2017 ல் பாகுபலி தி கன்குலூஷன்  வெளியாகி பெறும் வெற்றி பெற்றது. இதை அடுத்து அதே ஆண்டு அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இடம் பெற்றார். இப்படமும் தோல்வியையே தழுவியது. பின் 2018 ல் விஜ்ய் சந்தர் இயக்கத்தில் வெளியான ஸ்கெட்ச் வெற்றிகரமாக ஓடியது.

வருங்கால வெளியீடுகள் 

    தமன்னா தெலுங்கில் குகல்கோலி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும் ABC, தெலுங்கில் கல்யாண் ராமின் பெயர் வைக்காத படம் மற்றும் நீலங்கண்ட ரெட்டி இயக்கத்தில் கயின் ஒன்ஸ் அகையின் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் சீனுராமசாயி இயக்கத்தில் கண்ணே கலைமானே நடிக்கவிருக்கிறார்.

இவர் மாடல் மற்றும் டான்சர்

     இவர் படங்களில் மட்டுமன்றி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சந்திரிக்கா, பேன்டா, சில்கான் மொபைல்ஸ்க்கு மாடலாகவும் எவிஆர் நகைக்கடை மற்றும் கஸானா நகைக் கடையின் பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்தார். இவர் திரையுலகிற்கு வருமுன்னரே சக்தி மசாலா, பவர் சோப் மற்றும் சன் டேரக்ட்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு பீட்டாவிற்காகவும் விளம்பரம் செய்துள்ளார். மார்ச் 2015 ல் ஜீ தெலுங்குவிற்கு பிராண்ட் அம்பாஸ்டராக திகழ்ந்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.மேலும் இவர் சொந்தமாக பெங்களூரிலும், மும்பையிலும் நகைக் கடை வைத்துள்ளார். 
                       
 

மும்பை தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா நடிகை தமன்னா?!
மு.ஐயம்பெருமாள்

மும்பை தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா நடிகை தமன்னா?!

Babli Bouncer விமர்சனம்: வித்தியாசமான களம், உல்டா ஃபார்முலா - லேடி பவுன்சராக ஜெயித்தாரா தமன்னா?
வினி சர்பனா

Babli Bouncer விமர்சனம்: வித்தியாசமான களம், உல்டா ஃபார்முலா - லேடி பவுன்சராக ஜெயித்தாரா தமன்னா?

மாடர்ன் டிரஸ் முதல் புடவை வரை - தமன்னா லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!
மு.பூபாலன்

மாடர்ன் டிரஸ் முதல் புடவை வரை - தமன்னா லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Tamannaah: தன் முதல் மலையாளப் படத்தின் பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள்|Photo Album
மு.பூபாலன்

Tamannaah: தன் முதல் மலையாளப் படத்தின் பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள்|Photo Album

திலீப் ஜோடியாக தமன்னா மலையாளத்தில் அறிமுகம்; கொட்டாரக்கரா கோயிலில் நடந்த பட பூஜை!
சிந்து ஆர்

திலீப் ஜோடியாக தமன்னா மலையாளத்தில் அறிமுகம்; கொட்டாரக்கரா கோயிலில் நடந்த பட பூஜை!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

``நடிகையாக நான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்" -மனம் திறந்த நடிகை தமன்னா
மு.பூபாலன்

``நடிகையாக நான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்" -மனம் திறந்த நடிகை தமன்னா

பாலகிருஷ்ணாவுக்கு மகளாக மாறிய முன்னணி கதாநாயகி!
உ. சுதர்சன் காந்தி

பாலகிருஷ்ணாவுக்கு மகளாக மாறிய முன்னணி கதாநாயகி!

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

Cannes: கலர்புல்லாக களமிறங்கிய தீபிகா, பூஜா ஹெக்டே; கூலான கமல், ரஹ்மான், பா.ரஞ்சித்| Photo Story
பிரபாகரன் சண்முகநாதன்

Cannes: கலர்புல்லாக களமிறங்கிய தீபிகா, பூஜா ஹெக்டே; கூலான கமல், ரஹ்மான், பா.ரஞ்சித்| Photo Story

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்