தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்
தற்போதைய ஆளுங்கட்சியான பாரத ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் . ஆண்களே இந்த பதவிக்கு போட்டாப் போட்டி போடுகையில் 2014 ஆம் ஆண்டு முதல் இவரே இந்தப் பதவியில் நீடித்திருப்பது சாதனையே !!!
பிறப்பு :
இவர் கன்னியாகுமரியின் நாகர்கோயிலில் 1961 ஆம் ஆண்டின் ஜூன் 2 ஆம் நாள் பிறந்தவர் .
குடும்பம் :
இவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்டது . இவரின் அப்பா குமரி ஆனந்தன் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் . இவர் வசந்த் & கோ உரிமையாளரான வசந்தகுமாரின் மருமகள் ஆவார் .இப்படிப்பட்ட அரசியல் பின்புலம் இருப்பினும் பா.ஜ .காவின் கொள்கைகள் மீதான காதலால் பா.ஜா.காவில் இணைந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன் .
கல்வியும் இளமையும் :
தமிழிசை சௌந்தர்ராஜன் உண்மையில் ஒரு மருத்துவர் . மகப்பேறு மருத்துவ நிபுணரான இவர் தனது கல்லூரி படிப்பை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்தவர் . படிக்கும் போதே கல்லூரியின் மாணவத் தலைவராக செயல்பட்ட இவர் இன்று பா.ஜ.காவின் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
அரசியல் வாழ்க்கை :
பெண்கள் அரசியலில் காலூன்றி நிற்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தனது படிப்பிற்கு பிறகு பா .ஜ.காவிற்காக முழுநேரமும் உழைக்கத் தொடங்கினார் .இவர் 2001 ல் தென் சென்னை கிளையின் பா.ஜ.காவின் மருத்துவச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2005 ஆம் ஆண்டே தென்னிந்தியாவின் மருத்துவச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் படும் அளவிற்கு வளர்ந்தார். 2007 ஆம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராகவும் ,2010 ஆம் ஆண்டு மாநிலத் துணைத் தலைவராகவும் தொடர்ந்த இவரது அரசியல் பயணம் அபரிமிதமாக வளர்ந்து 2013 ஆம் ஆண்டு பா.ஜ.காவின் தேசியச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டிலிருந்து தமிழக பா.ஜ.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இன்று மத்திய அரசின் தமிழக பிரதிநிதியாக இருந்து வருகிறார் .

கம்ப்யூட்டரில் பூச்சி பிடித்த பெண்ணும் நிலக்கடலைக்கு மாறிய விவசாயிகளும்!

`எங்க உடம்புல காங்கிரஸ் ரத்தம்... உன் உடம்புல பி.ஜே.பி ரத்தமானு கேட்டாங்க!' - தமிழிசை கணவர் ஷேரிங்ஸ்

கழுகார் பதில்கள்

குமரி: `இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 நாடுகள் காத்திருக்கிறது!’ - ஆளுநர் தமிழிசை பெருமிதம்

புதுச்சேரி: `அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டைகள்!’ - ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி அரசியல்: தமிழிசை வசமுள்ள அந்த 3 வாய்ப்புகள்... பரபரப்பான அடுத்தகட்டம் - என்ன நடக்கும்?!
பெண்களை இழிவுசெய்யும் இதிகாச உதாரணங்கள்... இன்னும் அவை தொடர வேண்டுமா அழகிரி? #VoiceOfAval

புதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி!’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: `பெரும்பான்மையை நிரூபியுங்கள்!’ -முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் உத்தரவு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவி: கிரண் பேடி நீக்கம், தமிழிசைக்குக் கூடுதல் பொறுப்பு

Memes போட்டவர்களுக்கு நான் சொல்வது இதுதான்! - Dr.Tamilisai Soundararajan Exclusive Interview Part 4
