திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி
பிறப்பு, கல்வி:
திருமுருகன் காந்தி பிறந்த ஊர் கோயம்பத்தூர். அப்பா காந்தி, தொழிற்சங்க தலைவர், அம்மா இயற்கை எய்திவிட்டார். தங்களது பெற்றோர்களுக்கு மூத்த மகனான திருமுருகன் இட ஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்று, கல்லூரியின் சிறந்த மாணவனாகவும் வெளிவந்தார். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். "அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் பொது எவருக்காகவும் அச்சப்பட வேண்டாம்" இது அவருடைய வரிகள்.
முதல் போராட்டம்:
திருமுருகன் காந்தி, 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே, தங்களது தேர்வு முறையை மாற்றி அமைக்க போறதாக அரசாங்கம் கூறியது, அதை எதிர்த்து தங்கள் பள்ளியின் உள்ளேயே சகமானவர்களோடு சேர்ந்து பள்ளி சீருடையுடன் போராட்டம் நடத்தியவர். தனது 12 ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலே, அரசை எதிர்த்து குரல் கொடுக்க தயாராக இருந்திருக்கிறார்.
மே 17 இயக்கம் உருவானது:
2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை 150000 லட்சம் பேர் படுகொலை செய்ய பட்டனர். இச்சமபவம் ஈழத்தமிழருக்களுக்கு எதிராக நடந்த சதி, இதற்கு இலங்கை அரசு மட்டும் அல்ல இந்திய அரசும் பங்கும் இருக்கிறது என்று நம் அனைவர்க்கும் உண்மையை கூறியவர் திருமுருகன். மே 17 இயக்கம் பெயர் உருவானதுக்கு காரணமும், இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே 17 ஆம் தேதி நேர்ந்த இனப்படுகொலையினால். நம் மக்களை, உலக நாடுகள் கொடுத்த அதிபயங்கர ஆயுதங்களாலும், ரசாயன குண்டுகளாலும் ஈவு இரக்கமின்றி அழிக்க ஆரம்பித்தனர். இதை எதிர்த்து கேட்க நம் இந்திய அரசுக்கு திராணி இல்லை. இந்திய அரசின் அரசியல் பற்றி, தமிழக மக்களுக்கு தங்களது இயக்கத்தின் மூலம் கூறிவருகிறார், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி.
சமூக செயற்பாட்டாளராக உருவான திருமுருகன்:
திருமுருகன் காந்தியின் தந்தை ஒரு செயற்பாட்டாளர், தொழிற்சங்க தலைவர். அதிகாரவர்கங்கள் செய்யும் தவறை சிறு வயதிலே பார்த்தும் கேட்டும் வளந்தவர். நிறைய வாசிப்பேன், அரசியல் பேச பழகினேன், தவறு என்றால் எதிர்த்து போராடினேன், போராடி கொண்டே இருக்கிறேன் என்று விகடனில் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறினார். 2009 ஆம் ஆண்டு ஒரு நாள் அலுவலுகத்தில் அவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருடைய தோழர் ஒருவர் அவரை போனில் அழைத்தார், அவர் கூறியது "சாஸ்திரி பவன் பக்கத்தில் ஒருவர் உயிரோடு எரிந்து கொண்டிருக்கிறார்" வாருங்கள் இங்கு என்று. திருமுருகன் சென்று பார்க்கையில் தான் தெரிந்தது, அவர் முத்துக்குமார் என்று. அவருடைய கடிதத்தை படித்த பின்பு தான் தெரிந்தது அவர் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல, அவர் உயிர் தியாகம் செய்தது ஈழத்தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்காக என்று.
அதன் பின்பு தான் அவர் உயிர் தியாகத்தின் மூலம் நம்மை ஈழ போராட்டத்துக்கு அழைக்கிறார் என்று. அந்த சம்பவத்திற்கு பிறகே முழு நேர செயற்பாட்டாளராக மாறினார். மே 17 இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததில் இந்த நிகழ்வும் முக்கியமானது. இதன் விளைவே அவர் செயற்பாட்டாளராக மாறியதற்கு காரணம். அந்த வருடத்தில் இருந்து தமிழ் ஈழ மக்களுக்காக "தமிழர் கடல்" மெரினாவில் வருட வருடம் நினைவேந்தல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை இந்நினைவேந்தல் நடைபெறும். அதுமட்டுமல்லாது கூடங்குளம் அணுமின் நிலையம், கதிராமங்கலம் ஆயில் லீக், நெடுவாசல் மீத்தேன், கெயில் குழாய் எதிர்ப்பு, WTO ஒப்பந்தத்தின் எதிராக போராட்டம் போன்ற தமிழர் பிரச்சனைக்காக, தமிழ்நாட்டுக்காகவும் அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது தேர்தல் அரசியலை மக்கள் நம்பவில்லை. வேட்பாளரை மாற்றி ஓட்டுபோட்டும் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. பொறுத்து பார்த்து அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதன் விளைவே மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். இதை தான் பல நாட்களாக திருமுருகன் சொல்லி கொண்டிருந்தார். இப்போது மக்களே உணர ஆரம்பித்துவிட்டனர்.
திருமுருகன் முன் வைக்கும் அரசியல்:
தமிழகத்தில் தற்போதைய தேவை இயக்க அரசியல் மட்டுமே, தேர்தல் அரசியல் அல்ல. வலிமையான இயக்கம் பெரியாருக்கு பின்பு தமிழ்நாட்டில் இல்லை. தேர்தல் அரசியல் இல்லாத ஒரு அரசியல் தான் மிகப்பெரும் அரசியல். "அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், தந்தை பெரியார், வ.ஊ.சி, பெருஞ்சித்தனார், நம்மாழ்வார் போன்ற அனைவருமே தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் உரிமைகளுக்காக, நீதிகளுக்காக போராடியவர்கள். இவர்கள் யாரும் பதவி சுகம் அனுபவிப்பதற்காக போராடியவர்கள் இல்லை. இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில், ஒற்றை தலைவர் ஆட்சி முறையும், ஹீரோயிச ஆட்சி முறையும் இருக்க முடியாது. கூட்டு தலைமையில்தான் அரசியல் இருக்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்கள், முன்னிலையில் இளைஞகர்களும், மாணவர்களும் தான் அரசியலுக்கான தலைமை சக்தியாக இருக்க முடியும். எதிர்காலத்தில் தமிழ்நாட்டை வளமாக மாற்ற வேண்டும் என்றால் இதுவே சாத்தியம் என்று அவர் கூறியிருக்கிறார்.
குண்டர் சட்டம் பாய காரணம்:
ஈழத்திற்கு ஆதரவாக மே 17 இயக்கம் சார்பில் தமிழர் கடல் மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறும். அதே போல் எந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தியையும், தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் கடந்த 4 மாதமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். குண்டர் சட்டம் இவர்கள் மீது பாய வெளிப்படையாக அவர்கள் காட்டிய காரணம் இதுவே ஆனால் இதன் பின்பு பெரிய அரசியலே நேர்ந்திருக்கிறது. குண்டர் சட்டத்தை எதிர் பார்க்கவில்லை என்றாலும் [NSA , UABA ]போன்ற சட்டங்களை எங்கள் மீது ஏவுவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தது தான். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனவெறி யுத்தம் தமிழ்நாட்டிலும் நிகழும். இந்த இனப்படுகொலை நடத்துவதற்கான சதி அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது என்று நம் அனைவர்க்கும் உரக்க சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழர் பிரச்சனைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பதே இவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. தமிழ் மக்களுக்காக மீண்டும் சிறை செல்ல கூட நான் தயங்க மாட்டேன், எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது புலம்பாதீர்கள் மக்களே நாம் வீழமாட்டோம் என்று அவருடைய குரலின் மூலமாக மக்களை உத்வேக படுத்தி கொண்டிருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: கிரிமினல்களின் புகலிடமா? - உதார் நிர்வாகிகள்... உஷார் அண்ணாமலை!

``எதற்கெடுத்தாலும் கலவரம் வந்துவிடும் என அரசு பூச்சாண்டி காட்டுகிறது" - திருமுருகன் காந்தி

``தமிழருக்கான அரசியல்கூட பேச முடியாமல் தமிழினம் அடிமையாக இருக்கிறது!" - திருமுருகன் காந்தி

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி உருவான வரலாறு' - சிறப்புப் பகிர்வு!

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்' - கோரிக்கை வலுப்பதன் பின்னணி என்ன?

பெகாசஸ் ஸ்பைவேர்: ``நாளை அனைவர் மீதும் ஏவப்படும்''- எச்சரிக்கும் திருமுருகன் காந்தி!

அவர்களே... இவர்களே!

`மோடி குறித்து விமர்சனம்!’ - ஓவைசி, திருமுருகன் காந்தி உட்பட 17 பேர் மீது வழக்கு

சீமான், திருமுருகன் காந்தி மிரட்டப்பட்டார்களா? The Imperfect Show 09/02/2020

``காங்கிரஸ்காரர்களே பேசாத விஷயத்தை, தி.மு.க-வினர் ஏன் பேச வேண்டும்?’’- திருமுருகன் காந்தி கேள்வி!

உபா சட்டத்திருத்தம்: காங்கிரஸின் திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்துகிறது!
