திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு

உலகை அளக்க வாமனருக்கு மூன்று அடிகள் தேவைப்பட்டது. ஆனால் திருவள்ளுவருக்கு இரண்டடிகளே போதுமானதாய் இருந்தது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருவர் எழுதிய செய்யுள் இன்றளவும் மனிதனை அறநெறியில் வழிநடத்துகிறது. சாதி, மதம் பேதம் இந்த மூன்றையும் கடந்த நூலாய் திருக்குறள் உள்ளது. அதனால் தான் திருக்குறளின் சிறப்பை உணர்ந்த மக்கள் அதை அவரவர் மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தனர். திருவள்ளுவரை குறித்து சரியான ஆதாரங்கள் இல்லை. இவர் ஒரு ஞானியா? தீர்கக்கதரிசியா? கடவுளா? என பல சந்தேகங்கள் உண்டு. 

பிறப்பு: 

திருவள்ளுவர் ஆதி - பகவன் பெற்றோருக்கு பிறந்ததாக சொல்கின்றனர்.  திருவள்ளுவரின் இயற்பெயர் மற்றும் அவர் வாழ்ந்த ஊர்,  இடம் சரியாக தெரியவில்லை. கி.மு.  முதல் நூற்றாண்டில் தற்போதைய சென்னைக்கு அருகில்  உள்ள  மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பாக்கம் அருகில் உள்ள மார்க்செயன் திருவள்ளுவரின்   கவிதிறனை கண்டு அவரது புதல்வியான வாசுகியை வள்ளுவர்க்கு  திருமணம் செய்து வைத்ததாகும் கூறப்படுகிறது. இவர் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு. கடைச்சங்க காலமான கி.பி.400-க்கும் கி.பி. 100- க்கும் இடைப்பட்ட  காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும்  பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றுவதற்கு  திருவள்ளுவர்  சிரமபட்டதாகவும்  முடிவில் ஔவையாரின் உதவியுடன் திருக்குறளை  அரங்கேற்றினார், என்றும் கூறப்படுகிறது. 

திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்:

தேவர்,  நாயனார்,  தெய்வப்புலவர்,  செந்நாப்போதார்,  பெருநாவலர்,  பொய்யில் புலவர்,  பொய்யாமொழிப்புலவர்,  மாதனுபங்கி,  முதற்பாவலர்  என வள்ளுவருக்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளது. 

   " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ",  என பாரதியார் வள்ளுவரை சிறப்பித்து பாடியுள்ளார். 

  " வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே,  புகழ் வையகமே " என பாரதிதாசன் புகழ்ந்து பாடியுள்ளார். 

திருவள்ளுவர் இயற்றிய வேறு நூல்கள் : 

திருக்குறளை தவிர திருவள்ளுவர் சில நூல்களையும் இயற்றியுள்ளார். 

1. ஞானவெட்டியான் மற்றும் பஞ்சரத்னம்.  இந்த இரண்டு நூல்களும் ஆயுர்வேத மருந்துகள் குறித்த தகவல்களை அளிக்கிறது. 

திருவள்ளுவரின் சமயம் : 

திருவள்ளுவர்  திருக்குறளில் எந்த  கடவுளையும் குறிப்பிட்டு   கூறவில்லை. திருக்குறளில்  கூறப்பட்டுள்ள  அறக்கோட்பாடுகள் சமணசமய நீதியை நெருங்கி  உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திக்க கூடும் என்று வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். 

சைவ சமயத்தை சார்ந்தவர்கள் 

திருவள்ளுவரை ' திருவள்ளுவ நாயனார் ' என  அழைக்கின்றனர். திருவள்ளுவர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் சிலர் கருதினர்.  சிலர் திருவள்ளுவரை புத்தமதத்தை சேர்ந்தவர் என்றும், சிலர் கிறிஸ்தவர் என்றும் பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.  திருவள்ளுவர் இந்த சமயத்தை தான் சேர்ந்தவர் என்பதற்க்கு ஆதாரங்கள் இல்லை. 

திருவள்ளுவரின் நினைவுசின்னங்ள் :

திருவள்ளுவர் கோயில்:

திருவள்ளுவர்  பிறந்த இடமான மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் கட்டப்பட்டுள்ளது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது.  இந்த சிலையை வடிவமைத்தவர் பிரபல சிற்பி வி.கணபதி ஸ்தபதி என்பவர். இதனை வடிவமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். சென்னையில் வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  1330 குறளும் குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ரஸ்ஸல் ஸ்குவேரில் இருக்கும் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிகன் ஸ்டடீஸ் (School of Oriental & African Studies)  எனும் கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவரின்  திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர்  காலம் :

கி.மு. 31- ல்  திருவள்ளுவர் பிறந்துள்ளார் என்பதன் அடிப்படையில் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு, தி.பி  என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள். மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின்  பயனாய் தமிழ் நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகிறது. திருவள்ளுவர்ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகளை கூட்ட வேண்டும். 

திருக்குறள்:

பதினென்கீழ்கணக்கு எனப்படும்  நூல்களின் திரட்டில் திருக்குறள் காணப்படுகிறது. ஈரடியில் , அறத்துப்பால்,  பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்  உள்ளது.

1. அறத்துப்பால் :

பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல்,ஊழியல்  என்ற உட் பிரிவுகளோடு 38 அத்தியாயங்களை  கொண்டுள்ளது. 

2. பொருட்பால் :

அரசியல், அமைச்சியல்,  அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளோடு 70 அத்தியாயங்களை கொண்டுள்ளது.  

3. இன்பத்துப்பால் :

களவியல் கற்பியல் என 25 அத்தியாயங்களை கொண்டுள்ளது.  

திருக்குறளுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் :

திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக உலகப் பொதுமறை,  முப்பால்,  ஈரடி நூல், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை திருவள்ளுவம் போன்ற பெயர்களால் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

திருக்குறளை பற்றிய சில தகவல்கள் :

1.  திருக்குறளில்  மொத்தம் உள்ள எழுத்துக்கள் - 42,194.

2.  முதன் முதலில்  ஓலைச்சுவடியிலிருந்து திருக்குறள்  அச்சடிக்கப்பட்ட ஆண்டு - 1812. 

3. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

4. " தமிழ் " என்ற வார்த்தை திருக்குறளில் இல்லை.

5. 3, 9 என்ற எண்களை  தவிர திருக்குறளில் மற்ற வரிசை எண்கள் ஏராளமாகக் கையாளப்பட்டுள்ளது.

தமிழ் நெடுஞ்சாலை - 28 - தோழர் திருவள்ளுவர்
விகடன் டீம்

தமிழ் நெடுஞ்சாலை - 28 - தோழர் திருவள்ளுவர்

மனப்பாடமாக 1,330 குறள்; 30 அடியில் திருவள்ளுவர் ஓவியம்; 12 வயது மாணவி சாதனை!
பி.ஆண்டனிராஜ்

மனப்பாடமாக 1,330 குறள்; 30 அடியில் திருவள்ளுவர் ஓவியம்; 12 வயது மாணவி சாதனை!

`தலைகீழாவும் திருக்குறள் சொல்வேன்!' - 31 வழிகளில் குறள் சொல்லி அசத்தும் `திருக்குறள்’ எல்லப்பன்
பா. ஜெயவேல்

`தலைகீழாவும் திருக்குறள் சொல்வேன்!' - 31 வழிகளில் குறள் சொல்லி அசத்தும் `திருக்குறள்’ எல்லப்பன்

தமிழறிஞர் இளங்குமரனார் காலமானார் - தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த அவரது வாழ்வும் பணிகளும்!
வெ.நீலகண்டன்

தமிழறிஞர் இளங்குமரனார் காலமானார் - தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த அவரது வாழ்வும் பணிகளும்!

திருவள்ளுவர் பட விஷயத்தில் சொதப்பும் திமுக! | The Imperfect Show 05/07/2021
Nivetha R

திருவள்ளுவர் பட விஷயத்தில் சொதப்பும் திமுக! | The Imperfect Show 05/07/2021

 திருவள்ளுவன் என்னும் பிரபஞ்ச அறிஞன்..! - விவரிக்கும் வாசகர் #MyVikatan
விகடன் வாசகர்

திருவள்ளுவன் என்னும் பிரபஞ்ச அறிஞன்..! - விவரிக்கும் வாசகர் #MyVikatan

கோவை: மீண்டும் வெடித்த சர்ச்சை! - காவி நிற திருவள்ளுவர் படத்தை அகற்றிய வேளாண் பல்கலைக்கழகம்!
குருபிரசாத்

கோவை: மீண்டும் வெடித்த சர்ச்சை! - காவி நிற திருவள்ளுவர் படத்தை அகற்றிய வேளாண் பல்கலைக்கழகம்!

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; தொடரும் சர்ச்சை - வலுக்கும் கண்டனங்கள்
துரைராஜ் குணசேகரன்

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; தொடரும் சர்ச்சை - வலுக்கும் கண்டனங்கள்

நமக்குள்ளே...
ஆசிரியர்

நமக்குள்ளே...

திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு டீ... புதுக்கோட்டை டீக்கடைக்காரரின் நேசக்கரம்!
மணிமாறன்.இரா

திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு டீ... புதுக்கோட்டை டீக்கடைக்காரரின் நேசக்கரம்!

`வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசியது யார்?!' - கல்வித் தொலைக்காட்சியை கதிகலக்கிய சர்ச்சை
ஆ.விஜயானந்த்

`வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசியது யார்?!' - கல்வித் தொலைக்காட்சியை கதிகலக்கிய சர்ச்சை

வாசகர் மேடை: தாவிய தலைவி
விகடன் டீம்

வாசகர் மேடை: தாவிய தலைவி