த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா

தமிழ் திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா,தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரி சமமாக அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர்.சென்னையை பூர்வீகமாக கொண்ட தெளிவான தமிழ் பேசும் சிறந்த நடிகை.

இளமை பருவம்:
 

தனது பெற்றோருக்கு ஒரே மகளான  த்ரிஷா,1983-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி பிறந்தார்.சென்னையில் மவுண்ட் ரோடில் உள்ள சர்ச்பார்க் பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்த த்ரிஷா.சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் பி.பி,ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

சினிமா பயணம்:
 

திரைத்துறையில் படங்கள் நடிப்பதற்கு முன்பே மாடலிங்-யில் பிசியாக இருந்த த்ரிஷா,மிஸ் மெட்ராஸ்,மிஸ் சேலம் என நிறைய பட்டங்களை பெற்றுள்ளார்.மாடலிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் சினிமாவிற்கு வரமாட்டேன் என த்ரிஷா உறுதியாக கூறி இருந்தார்.

1999-ஆம் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி திரைபடத்தில்,சிம்ரனின் தோழியாக த்ரிஷா தோன்றி இருப்பார் இதுவே அவரின் முதல் திரை தோற்றம் ஆகும்.

இதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக “மௌனம் பேசியதே”திரைப்படத்தில் நடித்தார்.ஹீரோயினாக அவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவே.

தமிழ்திரையுலகின் கனவுக்கண்ணியாக மாறிய த்ரிஷா கில்லி,சாமி,உனக்கு இருபது என்க்கு பதினெட்டு என மசால படங்களுக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா,அபியும் நானும்,கொடி என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் த்ரிஷா.

பெரும்பாலும் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்த்தவர் த்ரிஷா தான்.உலக நாயகன்,தளபதி,தல என அனைவருடனும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜோடி சேர்ந்த த்ரிஷா இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த-உடன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்களுக்கு நிகராக தெலுங்கு படங்களில் நடித்து வந்த த்ரிஷா ஹிந்தியிலும் தன் காலை பதித்தார்.தமிழில் அவரை அறிமுகம் செய்த இயக்குனர் “ப்ரிய தர்ஷன்” இயக்கத்தில் “காட்டா மேத்தா”எனும் ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார் த்ரிஷா.

2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மனதில் க்ளாசிக் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் உள்ள ஜெஸ்சி-யின் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் த்ரிஷா,பல நிலையான அதே சமயம் த்ரிஷாவின் நடிப்பிற்கென அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் அமைந்த்து.தமிழ் ரசிகர்களின் மனதில் ஜெஸ்சி-க்கு என்றுமே நீங்காத இடம் உண்டு.

த்ரிஷாவிற்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளை பிரியம்,தன் 30வது பிறந்தநாள் அன்று உடல் உறுப்பு தானம் செய்து, தன் சமூக அக்கறையை இன்னும் அழுத்தமாகப் பதிந்தார் த்ரிஷா. ‘நான் பார்த்த ஒரு இங்கிலிஷ் மெடிக்கல் சீரிஸில் ஈர்க்கப்பட்டு நான் எடுத்த முடிவு இது’ என்கிறார் நம் சீனியர் ஹீரோயின்!

திருப்பாச்சி #VikatanReview
Vikatan Correspondent

திருப்பாச்சி #VikatanReview

கில்லி! #VikatanReview
விகடன் விமர்சனக்குழு

கில்லி! #VikatanReview

`Raghav ரொம்ப Romantic & Sensitive' - Preetha Raghav Interview
அவள் விகடன் டீம்

`Raghav ரொம்ப Romantic & Sensitive' - Preetha Raghav Interview

அரசியல் ராங்கி த்ரிஷா!
நா.கதிர்வேலன்

அரசியல் ராங்கி த்ரிஷா!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

வாசகர் மேடை! - வில்லன் விஜய்... ‘செல்லம்’ஜானு!
விகடன் டீம்

வாசகர் மேடை! - வில்லன் விஜய்... ‘செல்லம்’ஜானு!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

``அந்தக் கேள்வியை த்ரிஷா, நயன்தாராகிட்ட கேட்பாங்களா?'' - சீறும் சோனியா அகர்வால்
அவள் விகடன் டீம்

``அந்தக் கேள்வியை த்ரிஷா, நயன்தாராகிட்ட கேட்பாங்களா?'' - சீறும் சோனியா அகர்வால்

விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?
விகடன் டீம்

விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

"மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!”
எம்.குணா

"மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!”

ஆங்ரி பேர்ட் த்ரிஷா, கேரட் கேக் ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபீலிங் அமலா பால்... சோஷியல் மீடியா ரவுண்டப்!
உ. சுதர்சன் காந்தி

ஆங்ரி பேர்ட் த்ரிஷா, கேரட் கேக் ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபீலிங் அமலா பால்... சோஷியல் மீடியா ரவுண்டப்!

“எதிர்க்கிறவங்களுக்கு கதையே புரியலை!”
சனா

“எதிர்க்கிறவங்களுக்கு கதையே புரியலை!”