வடிவேலு

வடிவேலு

வடிவேலு

வைகைப் புயல் இவர்  தனது விடாமுயற்சியின் மூலம் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்டவர்  . நாகேஷின் காமெடியைத் தொடர்ந்து  தமிழ் மக்களுக்கு இவரின் காமெடி ஒரு வித்தியாசமான வரப்பிரசாதமே . காமெடி நடிகர் என்பதைத் தாண்டி ஹீரோவாகவும் சில படங்களில் முகம் காட்டியதன் மூலம் காமெடி நடிகர்களுக்கான புது அத்தியாத்தைத் தொடங்கி வைத்தவர் வடிவேலு .

பிறப்பு 
 1960 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் பிறந்தார் வடிவேலு . வைகைப் புயலான இவர் மதுரையைத் தாயகமாகக் கொண்டவர் .

குடும்பம்
வடிவேலு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் . இவரின் அப்பா ஒரு கம்பெனியில் வேலைப் பார்த்தவர் .வடிவேலுவின் மனைவி சரோஜினி . வடிவேலு சரோஜினியை திருமணம் செய்யும் போது சரோஜினி ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் . வடிவேலுக்கு தன் மனைவி மீது கொள்ளைப் பிரியம் . இந்த தம்பதிக்கு சுப்பிரமணியம் , மனோஜ் என்று இரண்டு ஆண் குழந்தைகளும் , காவ்யா என்று ஒரு பெண்குழந்தையும் உள்ளன .

கல்வியும் இளமையும் 
வடிவேலு இளமையில் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக போட்டோக்களுக்கான பெயிண்ட்டிங் மற்றும்  கண்ணாடி முகப்புகள் செய்து தரும்  கடையில் வேலைப் பார்த்து வந்தவர் . தமிழகத்தின் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்த அவர் அப்பொழுது நினைக்கவில்லை தமிழக மக்கள் பலரின் சிரிப்புக்கு தான் காரணமாகப் போவது . 

துறை வாழ்க்கை 
மதுரையைச் சேர்ந்தவரான ராஜ் கிரண் வடிவேலுவை  அலுவலக பணியாளராக தான் அறிமுகப்படுத்திக் கொண்டார் . ஆனால் வைகைப் புயலின் வாழ்க்கையிலும் அவரை அறியாமலே  நடிப்பு புயல் வீச ஆரம்பித்தது . "லவ்ஸ் " என்னும் படத்தின் மூலம் தன் நடிப்பு பயணத்தை ஆரம்பித்த இவர் ," போடாப் போடாப் புண்ணாக்கு " என்னும் பாடலின் மூலம் பாடகராகவும் மாறி இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களையும்  பாடியுள்ளார் .

இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரின் நடிப்பு "காதலன் "படத்தில் பிரபுதேவாவின் நண்பராக செய்யும்  சேட்டைகளின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலாமாகியது . தொடர்ந்து தனது வித்தியாசமான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துக் கொண்டிருந்த இவர் தமிழ் திரையுலகில் மிக முக்கிய காமெடி நடிகராக ஆகிப் போனார் ."சந்திரமுகி" இவரின் திறமையின் ஒரு முழு வெளிப்பாடு என சொல்லும் அளவுக்கு இவருக்கு பெயர் வாங்கித் தந்தப் படம் .

அதுவரை காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த இவர் "இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி" என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக புதுப் பரிமாணம் எடுத்தவர் வடிவேலு .
 
அரசியல் பிரவேசம் :
வடிவேலு அரசியலுக்குள் நுழைந்ததே எதிர்பாராமல் தான் . கேப்டன் விஜயகாந்துக்கும் இவருக்கும் ஏற்கனவே முன்பகை இருக்க 2011 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அரசியலில் குதித்தார் வடிவேலு . அந்த சமயம் விஜயகாந்த்தின் தேசிய திராவிட முற்போக்கு கழகம் ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு கூட்டணியில் இருந்தது . தேர்தல் பிரச்சாரத்தின் போது வடிவேலு விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வந்தார் . தேர்தலில் எதிர்பாராவிதமாக அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற வடிவேலு திரை உலகை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்தாலும் "தென்னாலி ராமன் " மூலம் தன்னுடைய இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் தமிழ் திரையுலகம் பல புது முகங்களை தன்னுள் இணைத்துக் கொண்டிருந்தது.

விருதுகள் :
1996 - காலம் மாறிப் போச்சு 
1999 - முதல்வன் 
2000-வெற்றி கொடிக் கட்டு 
2006- இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 
2007- மருதமலை 
என்னும் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை 5 முறை வாங்கி சாதனைப் படைத்துள்ளார் .
 
"வடிவேலு சார், விவேக் சார், காமெடி நடிகர்கள் ஒண்ணா இருக்கும் ஒரே புகைப்படம்!"- முத்துக்காளை ஷேரிங்ஸ்
வெ.வித்யா காயத்ரி

"வடிவேலு சார், விவேக் சார், காமெடி நடிகர்கள் ஒண்ணா இருக்கும் ஒரே புகைப்படம்!"- முத்துக்காளை ஷேரிங்ஸ்

2021 - டாப் 25 பரபர
விகடன் டீம்

2021 - டாப் 25 பரபர

"இதோ புறப்பட்டு வர்றேன்!" - மருத்துவமனையிலிருந்து உற்சாக வடிவேலு! #VikatanExclusive
நா.கதிர்வேலன்

"இதோ புறப்பட்டு வர்றேன்!" - மருத்துவமனையிலிருந்து உற்சாக வடிவேலு! #VikatanExclusive

"வடிவேலு சாரோட நடிச்ச அந்த ஒரு சீன்தான் என் கரியருக்கே ஆபத்தா போச்சு!"- `வாம்மா மின்னல்’ தீபா
அய்யனார் ராஜன்

"வடிவேலு சாரோட நடிச்ச அந்த ஒரு சீன்தான் என் கரியருக்கே ஆபத்தா போச்சு!"- `வாம்மா மின்னல்’ தீபா

வாசகர் மேடை: குட் மார்னிங் கோச்!
பிரேம் டாவின்ஸி

வாசகர் மேடை: குட் மார்னிங் கோச்!

கருணாநிதி செய்த உதவி! - கமல் கேட்ட மன்னிப்பு! - ஸ்டாலினின் ஆட்சி! - மனம் திறக்கும் வடிவேலு!
நா.கதிர்வேலன்

கருணாநிதி செய்த உதவி! - கமல் கேட்ட மன்னிப்பு! - ஸ்டாலினின் ஆட்சி! - மனம் திறக்கும் வடிவேலு!

வாசகர் மேடை: அப்பவே அப்படி!
விகடன் டீம்

வாசகர் மேடை: அப்பவே அப்படி!

வடிவேலு ரீ-என்ட்ரி படம், நாகசைதன்யா படம் - விஜய் சேதுபதி மாதிரி ப்ரியா பவானி சங்கரும் பிஸி!
மை.பாரதிராஜா

வடிவேலு ரீ-என்ட்ரி படம், நாகசைதன்யா படம் - விஜய் சேதுபதி மாதிரி ப்ரியா பவானி சங்கரும் பிஸி!

வடிவேலு ரீ-என்ட்ரியிலும் சிக்கல்... கைநழுவிப்போகிறதா 'நாய் சேகர்' டைட்டில்?
நன்மதி

வடிவேலு ரீ-என்ட்ரியிலும் சிக்கல்... கைநழுவிப்போகிறதா 'நாய் சேகர்' டைட்டில்?

வடிவேலு ரீ என்ட்ரி… ‘கைப்புள்ள’யின் நகைச்சுவையை  தமிழ் சமூகம் ஏன் கொண்டாடியது?
சுரேஷ் கண்ணன்

வடிவேலு ரீ என்ட்ரி… ‘கைப்புள்ள’யின் நகைச்சுவையை தமிழ் சமூகம் ஏன் கொண்டாடியது?

`நாய் சேகர்' டைட்டில் வடிவேலுவுக்குக் கிடைக்குமா - சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு மாறுமா?
உ. சுதர்சன் காந்தி

`நாய் சேகர்' டைட்டில் வடிவேலுவுக்குக் கிடைக்குமா - சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு மாறுமா?

"அய்யனாரு கண்ண தொறந்துட்டாருண்ணே!" ரெட் கார்டு நீக்கம்... உற்சாகத்தில் வடிவேலு! நடந்தது என்ன?
நா.கதிர்வேலன்

"அய்யனாரு கண்ண தொறந்துட்டாருண்ணே!" ரெட் கார்டு நீக்கம்... உற்சாகத்தில் வடிவேலு! நடந்தது என்ன?