அடல் பிகாரி வாஜ்பாய்

அடல் பிகாரி வாஜ்பாய்

அடல் பிகாரி வாஜ்பாய்

வாஜ்பாய் வரலாறு

இந்தியாவின் 10-வது பிரதமராகக் கடந்த 1996-ம் ஆண்டில் பொறுப்பேற்ற வாஜ்பாயின் முதல் பதவிக்காலம் 13 நாள்கள் மட்டுமே நீடித்தது. பின்னர், 1998-ம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். ஆனால், இந்தமுறை அவர் பதவியேற்று 13 மாதங்களே பிரதமராக நீடிக்க முடிந்தது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓர் ஓட்டில் தோல்வியடைந்து, பதவி விலகினார். அடுத்து 1999-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்தார். ஆனால், இந்தமுறை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமர் பதவியை அலங்கரித்த பெருமை வாஜ்பாயைச் சேரும். 

50 ஆண்டுக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய், மக்களவைக்கு ஒன்பது முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி என வெவ்வேறு மாநிலங்களிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி வாஜ்பாய் மட்டும்தான். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்து எதிர்த்தவர். 

பொக்ரான் அணுகுண்டு சோதனை

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான், இமயம் முதல் குமரிவரை இணைப்பை ஏற்படுத்தியுள்ள தங்க நாற்கரச் சாலை திட்டம் திட்டமிடப்பட்டு, கொண்டுவரப்பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவரைச் சேரும். இதுபோன்ற பல சாதனைகளைப் புரிந்தவர். சுதந்திரப் போராட்ட தியாகி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்த வாஜ்பாய், அரசியல் நாகரிகத்தின் அச்சாணியாய் விளங்கியவர்.  
 
Urinary Tract Infection that Afflicted Jayalalitha, Karunanidhi, Vajpayee, Don’t be callous about it!
V Amalan Stanley

Urinary Tract Infection that Afflicted Jayalalitha, Karunanidhi, Vajpayee, Don’t be callous about it!

3 முறை பிரதமர், 50 வருட அரசியல் இந்தியாவின் வளர்ச்சி குரல் வாஜ்பாய் #VikatanPhotocards
பெ.மதலை ஆரோன்

3 முறை பிரதமர், 50 வருட அரசியல் இந்தியாவின் வளர்ச்சி குரல் வாஜ்பாய் #VikatanPhotocards

வாஜ்பாய் டு மோடி வரை... பி.ஜே.பி-யும் ரஜினியும்!
ஜெ.பிரகாஷ்

வாஜ்பாய் டு மோடி வரை... பி.ஜே.பி-யும் ரஜினியும்!

இந்திரா காந்தியை கைது செய்தவர்! - முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் மறைவு
மலையரசு

இந்திரா காந்தியை கைது செய்தவர்! - முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் மறைவு

`2002-ல் மோடியை பதவிநீக்கம் செய்ய வாஜ்பாய் விரும்பினார்; அத்வானி தடுத்தார்!' - யஷ்வந்த் சின்ஹா
தினேஷ் ராமையா

`2002-ல் மோடியை பதவிநீக்கம் செய்ய வாஜ்பாய் விரும்பினார்; அத்வானி தடுத்தார்!' - யஷ்வந்த் சின்ஹா

வாஜ்பாயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி..!
கார்த்திக் துரைமகாராஜன்.சி

வாஜ்பாயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி..!

முக்கடல் சங்கமத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு
சிந்து ஆர்

முக்கடல் சங்கமத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு!
கார்த்திக் துரைமகாராஜன்.சி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு!