வளர்மதி

வளர்மதி

வளர்மதி

பிறப்பு:
        சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தானூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வளர்மதி. வீட்டிற்கு ஒரே பெண். அப்பா- மாதையன், அம்மா- கமலா. எளிமையான பெற்றோர்க்குப் பிறந்த ஒரே மகள் இவர். பேரணியோ, போராட்டமோ அண்டாத தெருக்களில் தான் இவரின் குழந்தைப் பருவம் நடந்தது. வருங்காலத்தில், தன் மகள் ஓர் சமூகப் போராளியாக உருவெடுப்பாள் என்று அந்த தாய்க்கோ, தந்தைக்கோ தெரியாது. வளர்மதி முதன்முதலாகப் போராட்டம் என களத்தில் இறங்கி, கடலூர் சப்ஜெயிலில் 10 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது அவருக்குத் தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த முதல் பரிசு அவர்களின் எதிர்ப்பு தான். ஆனால், இன்று அதே பெற்றோர் அவரைப் பெருமிதமாய்ப் பார்க்கின்றனர், தன் மகளிற்குப் பக்கபலமாய் நிற்கின்றனர்.

முதல் போராட்டம்:
      2014 ஆகஸ்ட் மாதத்தின் ஓர் நாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வளர்மதியின் குரல் ஓங்கி ஒலித்தது. பல்கலைக்கழகம் தன் விடுதி மற்றும் கல்லூரி கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராடிக் கொண்டிருந்தார் அவர். போராட்டத்தை ஒடுக்க கல்லூரி நிர்வாகம் காவல் துறையை ஏவிவிட்ட போது தனி ஒருவராக அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த அவர் பின்னால் தான் மொத்த மாணவர் கூட்டமும் நின்று கொண்டிருந்தது. அவரின் முதல் சிறைவாசமும் அப்போது தான் நடந்தது. கல்லூரி நிர்வாகத்தைக் கேள்வி கேட்டதற்காகக் கடலூர் சப்ஜெயிலில் 10 நாட்கள் இருந்தார்.

இரண்டாவது சிறை வாசம்:
    விவசாய பூமியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தான் வளர்மதியை ரொம்பவே பாதித்தது. சேலம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் என ஊர் ஊராகச் சென்று மக்கள் மத்தியில் இந்த திட்டத்தின் விளைவுகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். அந்த காலகட்டத்தில், நெடுவாசலுக்கு வந்து மக்களை மூளைச்சலவை செய்ய முயன்ற ஹெச். ராஜாவை அந்த மக்களைக் கொண்டே திருப்பி அனுப்பி வைத்தார். இப்படி அதிகார வர்க்கங்களுக்கு எதிராக, நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராடியது தான் வளர்மதிக்கு இரண்டாவது முறையாக சிறை வாசத்தை சம்பாதித்துத் தந்தது. நெடுவாசல் போராட்டத்திற்காக மக்களிடம் பிரசாரம் செய்துகொண்டே, அவர் இரயிலில் பயணித்துக்கொண்டிருந்த போது காவல் துறையினர் மக்களைப் போராடத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி அவரைக் குளித்தலையில் கைது செய்தனர். அப்போது, 36 நாட்கள் திருச்சி மத்திய சிறைச் சாலையில் சிறை வைக்கப்பட்டார்.

பாய்ந்த குண்டர் சட்டம்:
   ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வெறியுடன் இருந்த அரசின் கண்களில் அப்போது கதிராமங்கலம் விழுந்திருந்தது. டெல்டா மக்களுக்காக வீதியில் இறங்கி, ஊர் ஊராகத் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து போராட்டத்திற்கு ஆதரவு சேகரித்த வளர்மதியை ஒடுக்க அரசு கையில் எடுத்த ஆயுதம் தான் குண்டர் சட்டம். ஜூலை 12இல் அனைத்துக் கட்சிகளின் சார்பாகப் புதுக்கோட்டையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடப்பதாக இருந்தது. இந்த போராட்டத்திற்கு வருமாறு சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளிடம் வளர்மதி துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். அப்போது, மாணவர்களைப் போராடத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி காவல் துறை அவரைக் கைது செய்தது. அவர் மீது பதியப்பட்டிருந்த மற்ற வழக்குகளை எல்லாம் தூசித்தட்டி எடுத்து மாநிலத்தின் அமைதியைக் கெடுக்கும் வகையில் நடப்பதாகக் குற்றம் சாட்டி, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் இருந்த வளர்மதி கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு கைதிக்கான அடிப்படை உரிமைகளும் அவருக்கு மறுக்கப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியும், தன் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியும், கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் தனக்கு மறுக்கப்படுவதையும் கண்டித்து அவர் சிறையிலேயே உண்ணாப்போராட்டத்தைத் தொடங்கினார். வெளியில், அவர் தந்தை மாதையன் தன் மகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல நாள் காத்திருப்பிற்குப் பிறகு அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

   டெல்டா மக்களுக்காக மட்டுமல்ல ஜே.என்.யூ மாணவர் முத்துக் கிருஷ்ணன் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டும், பொன்.இராதாகிருஷ்ணனின் மீது செருப்பு வீசிய சாலமன் கைது செய்யப்பட்டு, அவர் எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்று அவரின் குடும்பத்திற்குக் கூட தகவல் தெரிவிக்கப்படாத போதும் வளர்மதி போராடினார். இப்போதும் போராடுகிறார், போராடுவார். அறத்தின் குரல்வளையை நசுக்க எங்கெல்லாம் கரங்கள் முயல்கின்றனவோ அங்கெல்லாம் வளர்மதிகளின் குரல்கள் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி வீட்டு பூஜை அறை | B. Valarmathi home Pooja Room Tour |
சைலபதி

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி வீட்டு பூஜை அறை | B. Valarmathi home Pooja Room Tour |

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?
மனோஜ் முத்தரசு

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

அமாவாசை டு நாகராஜசோழன் - பா.வளர்மதி அதிமுக!
ரெ.சு.வெங்கடேஷ்

அமாவாசை டு நாகராஜசோழன் - பா.வளர்மதி அதிமுக!

அதிமுக `நவரசா' இபிஎஸ்-க்கு இரட்டை குடைச்சல் | Elangovan Explains
சே.த இளங்கோவன்

அதிமுக `நவரசா' இபிஎஸ்-க்கு இரட்டை குடைச்சல் | Elangovan Explains

EPS Vs OPS அடவாடி; அதிரடி; யாருக்கு ஜாக்பாட் | Elangovan Explains
சே.த இளங்கோவன்

EPS Vs OPS அடவாடி; அதிரடி; யாருக்கு ஜாக்பாட் | Elangovan Explains

``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்" கோபமான ஓ.பி.எஸ்! - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இரா.செந்தில் கரிகாலன்

``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்" கோபமான ஓ.பி.எஸ்! - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அன்று வளர்மதி, இன்று லியோனி; பாடநூல் நிறுவனத் தலைவர் நியமனத்தை எப்படிப்  பார்ப்பது?
ச.அழகுசுப்பையா

அன்று வளர்மதி, இன்று லியோனி; பாடநூல் நிறுவனத் தலைவர் நியமனத்தை எப்படிப் பார்ப்பது?

ஒன் பை டூ
நா.சிபிச்சக்கரவர்த்தி

ஒன் பை டூ

ஜூ.வி பைட்ஸ்: அதிரடி வளர்மதி; பீட்டர் அல்போன்ஸ் `லாஜிக்', ``காமராஜர், அண்ணா, நான்..." - கமல்!
விகடன் டீம்

ஜூ.வி பைட்ஸ்: அதிரடி வளர்மதி; பீட்டர் அல்போன்ஸ் `லாஜிக்', ``காமராஜர், அண்ணா, நான்..." - கமல்!

“உதயநிதியெல்லாம் ஒரு ஆளா?” - அதிரடி வளர்மதி
ந.பொன்குமரகுருபரன்

“உதயநிதியெல்லாம் ஒரு ஆளா?” - அதிரடி வளர்மதி

நாங்கல்லாம் அப்பவே அப்படி!
இரா.செந்தில் கரிகாலன்

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

மழை புத்தகம் மக்கள் கவிதை  சமையல்
ஜெனிஃபர்.ம.ஆ

மழை புத்தகம் மக்கள் கவிதை சமையல்