வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழக அரசியல் பெரும்பான்மை இடங்களை ஆண்களுக்கே தந்தது போக மீதி உள்ள இடங்களை ஏதோ ஒரு சிலரே தக்க வைத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவர் வானதி ஸ்ரீநிவாசன் . தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் துணைத் தலைவர் .

பிறப்பு :

மேற்கு தொடர்ச்சி மலையின் சாரல் வீசும் கோயம்புத்தூரின் உளியம்பாளையமே இவரின் சொந்த ஊர் . 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த வானதி ஸ்ரீநிவாசனுக்கு தற்போது வயது 47.

குடும்பம் :

பாரம்பரிய , விவசாயக் குடும்பம். அப்பா கந்தசுவாமி, அம்மா பூவாத்தாள். குடும்பத்தின் மூத்தப் பெண். இவருக்கு ஒரே தம்பி பெயர், திரு.சிவக்குமார். இவர் தற்போது நியூ ஜெர்சியில் வசித்து வருகிறார் . இவரின் கணவன் ஸ்ரீநிவாசன் அவரும் வக்கீல். வானதி ஸ்ரீநிவாசனுக்கு ஆதர்ஷ் , கைலாஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர் .

 

பள்ளியும் , இளமையும் :

இவரின் பள்ளிப்படிப்பு தொடங்கியது சாதாரண அரசு உதவி பெறும் பள்ளியில் தான் . கோயம்புத்தூரின் தொண்டமுத்தூர் பள்ளியில் படித்த இவர் சிறு வயதிலே படிப்பிலே கெட்டி, படிப்பில் மட்டுமல்ல பேச்சுப்போட்டி , நாடகம் , கட்டுரைப்போட்டி , வினாவிடை என ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் இவரின் பங்களிப்பு, பள்ளியில் இவருக்கென்று ஒரு தனி இடத்தை தந்து இருந்தது. பள்ளி படிப்பைத் தொடர்ந்து கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் வேதியியல் துறையில் இளங்கலை படிப்பை முடித்த பின்பு , சென்னையில் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார் .முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைகழகத்தில் “ சர்வதேச அரசியலமைப்பு “ என்னும் துறையில் பெற்றார் .

பணி வாழ்க்கை :

இவரின் பணி தொடங்கியது ஒரு வக்கீலாக தான் . பின்னர் சட்டம் பயின்றால் வக்கீலாக தானே இருப்பார் என்று நினைக்கலாம். அந்த வக்கீல் தொழில் தான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிகோலியது.

1983 ஆம் ஆண்டு முதன் முதலில் இவர் திரு.ஞானதேசிகன் அவரிடம் ஜூனியராக பணியாற்றினார். அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து சிறந்த சமுக செயற்பாட்டாளரான இவர் 2011 , 2016 ஆண்டு தேர்தலில் பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட பின்பே தமிழக அரசியலில் இவரின் முகம் பிரபலமானது . தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டுவந்த இவர் தான் , தற்போதைய பா.ஜ.க கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்

பிஜேபி என்றால் நேர்மைதான்! | Vanathi Srinivasan Exclusive Part-2
Vikatan Correspondent

பிஜேபி என்றால் நேர்மைதான்! | Vanathi Srinivasan Exclusive Part-2

Srinivasan's Body Building Tips!
Soundarya R

Srinivasan's Body Building Tips!

பிரம்மாண்ட படமாக வெளியாகிறதா ’வேள்பாரி’ | Vasanthabalan | B Srinivasan
Vikatan Correspondent

பிரம்மாண்ட படமாக வெளியாகிறதா ’வேள்பாரி’ | Vasanthabalan | B Srinivasan

"Adult Content Iruku.. Pasangaluku Jolly ah Irukum" | Amrutha Srinivasan & Roju | Kallachiruppu
Vikatan Correspondent

"Adult Content Iruku.. Pasangaluku Jolly ah Irukum" | Amrutha Srinivasan & Roju | Kallachiruppu

ஏன் கடைசி டைம்ல BIGG BOSS 2 மிஸ் ஆச்சு? உண்மையை சொல்லும் Power Star Dr. Srinivasan
Vikatan Correspondent

ஏன் கடைசி டைம்ல BIGG BOSS 2 மிஸ் ஆச்சு? உண்மையை சொல்லும் Power Star Dr. Srinivasan

``மோடிக்கு Economy தெரியாது!" - சு.சாமி சொல்வது சரியா ?தவறா?
Nivetha R

``மோடிக்கு Economy தெரியாது!" - சு.சாமி சொல்வது சரியா ?தவறா?

அவளும் நானும் - வானதி சீனிவாசன்
கே.கணேசன்

அவளும் நானும் - வானதி சீனிவாசன்

`உங்களுக்கு அந்த 5 சதவிகிதம் பற்றித் தெரியாதா?’-சிபிஐ காவல் குறித்த கேள்வியும் சிதம்பரத்தின் பதிலும்
கலிலுல்லா.ச

`உங்களுக்கு அந்த 5 சதவிகிதம் பற்றித் தெரியாதா?’-சிபிஐ காவல் குறித்த கேள்வியும் சிதம்பரத்தின் பதிலும்