வெங்கையா நாயுடு | Latest tamil news about Venkaiah Naidu | VikatanPedia
Banner 1
அரசியல்வாதி

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு , பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். ஜூலை 1, 1949ஆம் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நெல்லூரில் பிறந்து பள்ளிப்படிப்பை VR உயர்நிலைப் பள்ளியிலும், மேலும் அதே VR கல்லூரியில் பொலிடிக்ஸ் & டிப்ளமோடிக் என்னும் பிரிவை தேர்ந்தெடுத்து பட்டதாரி ஆனார்.

வெங்கையா நாயுடு , பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.  தனது அரசியல் வாழ்வை கல்லூரி மாணவத் தலைவராக துவக்கினார். 2002 - 2004ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்ற அமைச்சராகவும் இருந்துள்ளார். 

பிறப்பு , கல்வி:

ஜூலை 1, 1949ஆம் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நெல்லூரில் பிறந்து பள்ளிப்படிப்பை VR உயர்நிலைப் பள்ளியிலும், மேலும் அதே VR கல்லூரியில் பொலிடிக்ஸ் & டிப்ளமோடிக் என்னும் பிரிவை தேர்ந்தெடுத்து பட்டதாரி ஆனார். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா சட்ட கல்லூரியில் சட்ட கல்வியையும் முடித்தார்.  

அரசியல் வாழ்க்கை:

சட்ட கல்லூரியில் பயின்ற போது மாணவத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகச்சிறந்த பேச்சாளரும் கூட என்பதால் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் ஆகிய மக்களின் மனதை பேச்சின் மூலம் வென்றார். இதே  உத்வேகத்துடன்  உதயகிரி தொகுதியில் நின்று 1978, 1983 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

BJP:

1988 ஆம் ஆண்டு ஆந்திர மாநில BJP தலைவராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு ராஜ்யவா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் 2004, 2010 ஆக மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் யூனியன் கேபினட் அமைச்சராகவும், மேலும் கிராமப்புற மேம்பாட்டுத்துறைஅமைச்சாக இருந்து "பிரதன் மந்திரி சடக் யோஜனா" இது போன்ற பல திட்டங்களை வித்திட்டுள்ளார்.

ஏற்றமும் / இறக்கமும்:

2002 - 2004 ஆம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் BJP தோல்வியுற்றதால் 18 அக்டோபர் 2004 தன் பதவியை ராஜினாமாசெய்தார். 3 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

மீண்டும் எழுச்சி :

2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், Parliement Affairs ஆக 26 மே 2014 பதவியற்றார் நாயுடு.

நாயுடுவின் அரசியல் வரலாறு.
 

1973 - 74-மாணவத் தலைவர்.

1977-78. ஜனதா கழகத்தின் இளஞ்சிறகுகள் அமைப்பின் தலைவர்.

1978-83&1983-88- உதயகிரி MLA.

1988 - 93 - பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர பிரதேச மாநிலத் தலைவர்

1998 -இதுவரை - ராஜ்யசபா உறுப்பினர்

2000 - 30 ஜீன் 2002  கிராமப்புற மேம்பாட்டுத்துறைஅமைச்சர்.

1 ஜீலை2002- 5 அக்டோபர் 2004- BJPன் தேசிய தலைவர்

2005 - இதுவரை - பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர்.

2014 - 17 வீட்டுப்புற மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர்

2016-17 தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர்.

 

சமூக சேவை:


" ஸ்வர்ணா பாரத் டிரஸ்ட் "என்ற அமைப்பைநெல்லூரில் ,வறுமை , ஆதரவற்ற மக்களுக்காக நடத்தி வருகிறார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ,சுய வேலை வாய்ப்புப் பயிற்சி திட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு ஜாவா, ஆரக்கிள்,.நெட் போன்ற பிரோகிராம் மொழிகளும் நடத்தப்படுகிறது. குடும்பம்: 1971 ஆம் ஆண்டு உஷா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு தீபாவெங்கட் என்ற மகளும் , ஹர்ஷ்வர்தன் என்ற மகனும் உள்ளனர்.

 

தொகுப்பு : ஜெ.ஆபிரகாம்