வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு , பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.  தனது அரசியல் வாழ்வை கல்லூரி மாணவத் தலைவராக துவக்கினார். 2002 - 2004ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்ற அமைச்சராகவும் இருந்துள்ளார். 

பிறப்பு , கல்வி:

ஜூலை 1, 1949ஆம் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நெல்லூரில் பிறந்து பள்ளிப்படிப்பை VR உயர்நிலைப் பள்ளியிலும், மேலும் அதே VR கல்லூரியில் பொலிடிக்ஸ் & டிப்ளமோடிக் என்னும் பிரிவை தேர்ந்தெடுத்து பட்டதாரி ஆனார். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா சட்ட கல்லூரியில் சட்ட கல்வியையும் முடித்தார்.  

அரசியல் வாழ்க்கை:

சட்ட கல்லூரியில் பயின்ற போது மாணவத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகச்சிறந்த பேச்சாளரும் கூட என்பதால் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் ஆகிய மக்களின் மனதை பேச்சின் மூலம் வென்றார். இதே  உத்வேகத்துடன்  உதயகிரி தொகுதியில் நின்று 1978, 1983 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

BJP:

1988 ஆம் ஆண்டு ஆந்திர மாநில BJP தலைவராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு ராஜ்யவா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் 2004, 2010 ஆக மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் யூனியன் கேபினட் அமைச்சராகவும், மேலும் கிராமப்புற மேம்பாட்டுத்துறைஅமைச்சாக இருந்து "பிரதன் மந்திரி சடக் யோஜனா" இது போன்ற பல திட்டங்களை வித்திட்டுள்ளார்.

ஏற்றமும் / இறக்கமும்:

2002 - 2004 ஆம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் BJP தோல்வியுற்றதால் 18 அக்டோபர் 2004 தன் பதவியை ராஜினாமாசெய்தார். 3 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

மீண்டும் எழுச்சி :

2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், Parliement Affairs ஆக 26 மே 2014 பதவியற்றார் நாயுடு.

நாயுடுவின் அரசியல் வரலாறு.
 
1973 - 74-மாணவத் தலைவர்.

1977-78. ஜனதா கழகத்தின் இளஞ்சிறகுகள் அமைப்பின் தலைவர்.

1978-83&1983-88- உதயகிரி MLA.

1988 - 93 - பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர பிரதேச மாநிலத் தலைவர்

1998 -இதுவரை - ராஜ்யசபா உறுப்பினர்

2000 - 30 ஜீன் 2002  கிராமப்புற மேம்பாட்டுத்துறைஅமைச்சர்.

1 ஜீலை2002- 5 அக்டோபர் 2004- BJPன் தேசிய தலைவர்

2005 - இதுவரை - பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர்.

2014 - 17 வீட்டுப்புற மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர்

2016-17 தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர்.

சமூக சேவை:

" ஸ்வர்ணா பாரத் டிரஸ்ட் "என்ற அமைப்பைநெல்லூரில் ,வறுமை , ஆதரவற்ற மக்களுக்காக நடத்தி வருகிறார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ,சுய வேலை வாய்ப்புப் பயிற்சி திட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு ஜாவா, ஆரக்கிள்,.நெட் போன்ற பிரோகிராம் மொழிகளும் நடத்தப்படுகிறது. குடும்பம்: 1971 ஆம் ஆண்டு உஷா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு தீபாவெங்கட் என்ற மகளும் , ஹர்ஷ்வர்தன் என்ற மகனும் உள்ளனர்.

சுருங்கிய நாடாளுமன்ற நாள்கள்! - மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
ஆ.பழனியப்பன்

சுருங்கிய நாடாளுமன்ற நாள்கள்! - மக்கள் வரிப்பணம் வீணடிப்பு

``அன்புக்கு நன்றி... நாம் போட்டியாளர்களே தவிர எதிரிகள் அல்ல!'' - வெங்கைய நாயுடு உருக்கம்
சாலினி சுப்ரமணியம்

``அன்புக்கு நன்றி... நாம் போட்டியாளர்களே தவிர எதிரிகள் அல்ல!'' - வெங்கைய நாயுடு உருக்கம்

``உங்கள் பதவிக்காலம் முடிவுக்கு வரலாம் ஆனால்...” - வெங்கைய நாயுடு குறித்து மோடி உருக்கம்
சாலினி சுப்ரமணியம்

``உங்கள் பதவிக்காலம் முடிவுக்கு வரலாம் ஆனால்...” - வெங்கைய நாயுடு குறித்து மோடி உருக்கம்

``அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது; அது நம் கடமை!" - வெங்கைய நாயுடு
சி. அர்ச்சுணன்

``அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது; அது நம் கடமை!" - வெங்கைய நாயுடு

தமிழ்நாடு காவல்துறைக்கு மிக உயரிய `ஜனாதிபதி சிறப்புக் கொடி' - வெங்கைய நாயுடு  வழங்கினார்!
துரைராஜ் குணசேகரன்

தமிழ்நாடு காவல்துறைக்கு மிக உயரிய `ஜனாதிபதி சிறப்புக் கொடி' - வெங்கைய நாயுடு வழங்கினார்!

``ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார்..!" - வெங்கைய நாயுடு குறித்து காங்கிரஸ் தலைவர் ட்வீட்
சாலினி சுப்ரமணியம்

``ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார்..!" - வெங்கைய நாயுடு குறித்து காங்கிரஸ் தலைவர் ட்வீட்

``மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமையில்லை..!" - வெங்கைய நாயுடு
சி. அர்ச்சுணன்

``மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமையில்லை..!" - வெங்கைய நாயுடு

தன் மகள் வகுப்புத் தோழனின் கல்வி; துணை ஜனாதிபதி வரை முறையிட்டு உதவிய லோகோ பைலட்; நெகிழ்ச்சிக் கதை!
செ.சல்மான் பாரிஸ்

தன் மகள் வகுப்புத் தோழனின் கல்வி; துணை ஜனாதிபதி வரை முறையிட்டு உதவிய லோகோ பைலட்; நெகிழ்ச்சிக் கதை!

வெங்கைய நாயுடு வைத்த வேண்டுகோள் முதல் பாஜக அரசியலால் ஒன்றான திமுக கோஷ்டிகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்
கழுகார்

வெங்கைய நாயுடு வைத்த வேண்டுகோள் முதல் பாஜக அரசியலால் ஒன்றான திமுக கோஷ்டிகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்

``எந்தவொரு மதத்துக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகளை  ஒருபோதும் ஏற்க முடியாது" - வெங்கைய நாயுடு
சி. அர்ச்சுணன்

``எந்தவொரு மதத்துக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகளை ஒருபோதும் ஏற்க முடியாது" - வெங்கைய நாயுடு

ஆரம்பிக்கலாங்களா? - குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க - எதிர்க்கட்சிகள் போட்டி
ஆ.பழனியப்பன்

ஆரம்பிக்கலாங்களா? - குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க - எதிர்க்கட்சிகள் போட்டி

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!
கழுகார்

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!