விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

காதல், நகைச்சுவை இவர் படங்களில் தூக்கலாக இருக்கும் , இதற்கிடையில் சொல்ல வேண்டிய கருத்தையும் அழகாக கூறிவிடுவார்.இவரை பெரும்பாலும் இயக்குனராகத் தான் அனைவருக்கும் அடையாளம் தெரியும். நடிகர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்  இவர். 2014ஆம் ஆண்டு அனிருத் இசையமைப்பில் இவர் எழுதிய “சான்சே இல்ல” பாடல் தான் இன்றளவும் சென்னையின் கீதமாக ஒலித்து வருகிறது. 2015ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காதலர்கள் தினத்திற்கு அனிருத் இசையமைப்பில் விக்னேஷ் சிவன் வரிகளைக் கொண்ட பாடல் வெளியாகி வருகிறது.

 

இளமைக்காலம்:

            இவர் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி 1985ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள். இவரின் தந்தை காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர். இவரின் அம்மா வடபழனியில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். விக்னேஷ் சிவன் தன்னுடைய பள்ளி படிப்பை மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலும் மற்றும் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனா வாணி  உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். தனது கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார்.

திரைப்பயணம்:-

இயக்குனர் படலம்:-

            விக்னேஷ் சிவன் ஒரு குறும்படத்தை இயக்கினார் , அந்த குறும்படத்திற்கு இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்தார். ஜெமினி பிலிம் சர்க்கியுட் இதனை முழு நீள படமாக தயாரிக்க ஒப்புக்கொண்டது.  .சிம்பு தனது பள்ளியில் படித்தவர் என்பதால் அவரை சிறு வயதிலிருந்தே விக்னேஷ் சிவனுக்கு தெரியும். லயோலா கல்லூரியில் படித்தபோது வரலட்சுமி சரத்குமார் இவருக்கு மூத்த மாணவி.கல்லூரிகளில் இவரின் நடனத்திறமையை கண்டிருக்கிறார். சிம்புவை சந்தித்து கதையை சொன்னார், சிம்பு பச்சை கொடி காட்ட,” போடா போடி” உருவானது .எனவே இவர்கள் இருவரும் இந்த படத்தில் நடித்தால் படம் மிக அருமையாக வருமென நினைத்தார். இந்த படத்தை முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கினார். தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த ஆணுக்கும், மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்ந்த பெண்ணுக்கும் இடையே மலரும் காதலும் அதனால் வரும் மோதலுமே இந்த படத்தின் கரு. இந்தப்படம் 2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு  இளையதளபதி விஜய்யின் துப்பாக்கி படத்துடன் வெளியானதால், வணிக ரீதியாக “போடா போடி” தவிடுபொடியானது. அதிகப்படியான திரையரங்குகள் கிடைக்கவில்லை. வணிக ரீதியாக இந்தப் படம் தோல்வியை தழுவியது என்றாலும் , மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

                இந்த படத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு இவர் படம் இயக்கவில்லை. 2014ஆம் ஆண்டு வெளியான தனுஷின் வேலையில்லாப் பட்டதாரி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். 2015ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா , பார்த்திபன் ஆகியோரை  வைத்து “நானும் ரவுடி தான்” என்கிற படத்தை இயக்கினார். இந்தப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியாக உருவெடுத்தது. முதலில் பதினாறு வயது இளைஞன் ஒருவனின் கதையாகத்தான் இயற்றினார். அதனால் அந்த பாத்திரத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தை தான் இதில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக இருந்தார். அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் நடிக்க ஆரம்பித்துவிட்டால் தன்னுடைய இசைப்பயணம் பாதிக்கப்படுமோ என எண்ணி, வேண்டாம் என பின்னர் மறுத்துவிட்டார். அதன் பின்னர் கதைகளில் பல மாற்றங்களை செய்து விஜய் சேதுபதியை அணுகினார். பின்னரே “நானும் ரவுடி தான்” சாத்தியமானது.

             2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் விக்னேஷ் சிவனின் மூன்றாவது படமான “தானா சேர்ந்த கூட்டம்” வெளியானது. நகைச்சுவை அதிகம் கொண்ட ராபின்ஹூட் கதை தான் இது. ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் தான் “தானா சேர்ந்த கூட்டம்”. கதாநாயகிக்கும், காதலுக்கும் தனது படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டத்தில் அவற்றில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ரம்யா கிருஷ்ணன்,பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில்,ஆனந்த்ராஜ்,       நவரச நாயகன் கார்த்திக் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் கொண்டது , “தானா சேர்ந்த கூட்டம்”.    

பாடலாசிரியர் படலம்:-

                     இவர் இதுவரை இருபத்தியெட்டு பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் இருபத்தைந்து பாடல்கள் திரைப்படத்திற்காக எழுதியவை. தற்சார்புள்ள பாடல்களும் அனிருத் இசையமைப்பில் இயற்றினார். 2014ஆம் ஆண்டு சென்னை தினத்திற்காக அனிருத் இசையமைப்பில் “சான்சே இல்ல” எனும் பாடலை இயற்றினார். இது தமிழகத் தலைநகர் சென்னையின் புகழ் பாடும் பாடல். 2016ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு “அவளுக்கென” எனும் பாடலை இயற்றினார், இதற்கும், 2017ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு “ஒன்னுமே ஆகல” எனும் பாடலை இயற்றினார் இதற்கும் அனிருத் தான் இசையமைத்தார். இவர் எழுதிய இருபத்தியெட்டு பாடல்களில் , பத்தொன்பது பாடல்கள் அனிருத் இசையமைத்தவை

போயஸ் கார்டன்: ஒன்றல்ல... இரண்டு பிளாட்! நயன்தாராவின் அசத்தல் பிளான்?!
அய்யனார் ராஜன்

போயஸ் கார்டன்: ஒன்றல்ல... இரண்டு பிளாட்! நயன்தாராவின் அசத்தல் பிளான்?!

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

நெற்றிக்கண் - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

நெற்றிக்கண் - சினிமா விமர்சனம்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்?
மை.பாரதிராஜா

'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்?

நயன்தாராவின் டீ கடை பாசம்... விக்னேஷ் சிவனின் மீது கோடிகளில் நேசம்!
நமது நிருபர்

நயன்தாராவின் டீ கடை பாசம்... விக்னேஷ் சிவனின் மீது கோடிகளில் நேசம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...
ஆர்.வைதேகி

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...

''விரலோடு உயிர்கூட கோர்த்து...'' - விக்னேஷ் சிவன் - நயன்தாரா நிச்சயதார்த்தம் நடந்ததா?!
தேனூஸ்

''விரலோடு உயிர்கூட கோர்த்து...'' - விக்னேஷ் சிவன் - நயன்தாரா நிச்சயதார்த்தம் நடந்ததா?!

"ஆணவக்கொலையில் ரொமான்ட்டிசைசேஷனா விக்னேஷ் சிவன்?!"- ஒரு ரசிகையின் கடிதம்!
வித்யா.மு

"ஆணவக்கொலையில் ரொமான்ட்டிசைசேஷனா விக்னேஷ் சிவன்?!"- ஒரு ரசிகையின் கடிதம்!

"உயரமா இருந்தால்தான் கோரியோகிராபராக முடியுமா?" - `பாவக் கதைகள்' ஜாஃபர் ஆதங்கம்
உ. சுதர்சன் காந்தி

"உயரமா இருந்தால்தான் கோரியோகிராபராக முடியுமா?" - `பாவக் கதைகள்' ஜாஃபர் ஆதங்கம்