விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி . எந்த ஒரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பு, திறமை என்னும் தாரக மந்திரம் மூலம் தனக்கென தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் .நடிப்பைத் தாண்டிச் சிறந்த தயாரிப்பாளர் , வசனக் கர்த்தா , பாடலாசிரியர் எனும் பன்முகங்களைக் கொண்டவர் .

பிறப்பு :

விஜய் குருநாத சேதுபதி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மதுரையை தாயகமாக கொண்டவர் . 1978 ஆம் ஆண்டு ஜனவரி மதம் 17 ஆம் நாள் பிறந்தார் .

குடும்பம் :

விருதுநகர் ராஜப்பாளையத்தில் வாழ்ந்து வந்த இவரது குடும்பம் இவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சென்னைக்கு குடிப்பெயர்ந்தது . இவரின் தந்தை காளிமுத்து , தாய் சரஸ்வதி . துபாயில் வேலை பார்க்கும் பொது கேரளாவை சேர்ந்தா ஜெஸ்ஸி என்னும் பெண்ணின் மீது காதல் கொண்டு அவரை கரமும் பிடித்தார் . சேதுபதி-ஜெஸ்ஸி தம்பதிக்கு சேதுபதி படம் போன்றே சூர்யா ஸ்ரீஜா என்னும் இரண்டு அழகான குழந்தைகள் உள்ளன .

இளமை மற்றும் கல்வி:

இன்றைய கல்வியைத் தாண்டியும் பிரகாசமான வாழ்க்கை உண்டு என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அதற்கு விஜய் சேதுபதியே பொருத்தமானவர். சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெரிதாக ஆர்வம் எதுவும் சேதுபதிக்கு கிடையாது . கல்வியைத் தாண்டி வேறு எதிலும் நாட்டமும் இல்லாத மாணவனாகவே கல்லூரி வரை இருந்துள்ளார் . பி.காம் வரை படித்துள்ள இவருக்குள் இப்படி ஒரு அவதாரம் இருக்கும் என கூத்துப் பட்டறையை காணும் முன் அவரே நம்பி இருக்கமாட்டார் .

துறை பங்களிப்பு :

திரையில் பின்னணி நடிகராகத் தோன்றியதே இவரின் சினிமா பயணத்திற்க்கான தொடக்கமாக இருந்தது .பல குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு கார்த்திக் சுப்புராஜ் என்ற இயக்குனருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு விருது வாங்கவும் மறக்கவில்லை . புதுப்பேட்டை படத்திற்கான துணை நடிகர் தேர்வுக்குச் சென்ற இவர் தனுஷின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு பெற்றதன் மூலம் திரையில் தோன்றினார் .லீ, சுசிந்திரம், வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது “ தென்மேற்கு பருவகாற்று “. அந்த காற்று மெல்ல மெல்ல இவர் வாழ்க்கையிலும் வீசத் தொடங்கியது .

சுந்தரபாண்டியனில் இவரது வில்லன் வேடம் இவரின் தனித்துவத்தை காட்டியது . பிட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்னும் படங்கள் சேதுபதியின் வேறு வேறு முகங்களைக் காட்டியன . எந்த நடிகரும் நடிக்கத் தயங்கும் ஒரு வேடத்தில் சூது கவ்வும் படத்தில் நடித்ததன் மூலம் யாரும் எழுதா புது இலக்கணம் படைத்தார் .

புதுமுகமாகத் தோன்றினாலும் தனக்கான நடிப்பின் மூலம் வருடத்திற்கு 2 முதல் 3 படம் தரும் அளவில் வளர்ந்து வரும் சேதுபதியின் கொள்கை இதுவரை நடித்த யாரின் நடிப்புத் தோரணையும் தன்னில் வெளிப்படக் கூடாது என்பர் . விஜய்க்கு அடுத்தப்படியாக இப்பொழுது விஜய் சேதுபதி என்று சினிமா விமர்சகர்கள் கூறினாலும் அவர் யாருடனும் எனக்கு போட்டியில்லை என்றே கூறுகிறார் . கவண் , விக்ரம் வேதா  என்று சக்கை போடு போடும் ஒவ்வொரு படமும் இவரின் அர்ப்பணிப்பின் அடையாளங்களே !

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!
நா.கதிர்வேலன்

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

சொல்றதை சொல்லிட்டோம்: பதவி விலகுவாரா அமித் ஷா? | 13-4-2021
தே.அசோக்குமார்

சொல்றதை சொல்லிட்டோம்: பதவி விலகுவாரா அமித் ஷா? | 13-4-2021

எத்தனை வருஷமானாலும் இதுதான் என் நிலைப்பாடு" வாக்களித்த பின் விஜய் சேதுபதி!
நமது நிருபர்

எத்தனை வருஷமானாலும் இதுதான் என் நிலைப்பாடு" வாக்களித்த பின் விஜய் சேதுபதி!

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

“தியாகராஜன் குமாரராஜா ஒரு முரட்டுத்தனமான புத்திசாலி!”
நா.கதிர்வேலன்

“தியாகராஜன் குமாரராஜா ஒரு முரட்டுத்தனமான புத்திசாலி!”

வெற்றிமாறனின் 'விடுதலை'.... போராளியாக விஜய் சேதுபதி... போலீஸாக சூரி?!
தேனூஸ்

வெற்றிமாறனின் 'விடுதலை'.... போராளியாக விஜய் சேதுபதி... போலீஸாக சூரி?!

'அசுரன்' தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது... விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!
தேனூஸ்

'அசுரன்' தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது... விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!

'குக்கு வித் கோமாளி'க்குப் போட்டி... சன் டிவியில் விஜய் சேதுபதியின் 'மாஸ்டர் செஃப்'... என்ன ஸ்பெஷல்?
எம்.எஸ்.அனுசுயா

'குக்கு வித் கோமாளி'க்குப் போட்டி... சன் டிவியில் விஜய் சேதுபதியின் 'மாஸ்டர் செஃப்'... என்ன ஸ்பெஷல்?

"ஜனநாதனின் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கும்... திட்டமிட்டபடி  ஏப்ரல் ரிலீஸ்!" - `லாபம்' தயாரிப்பாளர்
சனா

"ஜனநாதனின் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கும்... திட்டமிட்டபடி ஏப்ரல் ரிலீஸ்!" - `லாபம்' தயாரிப்பாளர்

மரணத்தோடு போராடிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்... மயிலாப்பூரில் இறுதி அஞ்சலி!
சனா

மரணத்தோடு போராடிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்... மயிலாப்பூரில் இறுதி அஞ்சலி!

`நான் கூப்பிட்டா என் டைரக்டர் எழுந்திருச்சிருவாரு!' - அப்போலோவில் கலங்கிய விஜய் சேதுபதி
ஜெனி ஃப்ரீடா

`நான் கூப்பிட்டா என் டைரக்டர் எழுந்திருச்சிருவாரு!' - அப்போலோவில் கலங்கிய விஜய் சேதுபதி