விஜய் சங்கர் | Latest tamil news about Vijay Shankar | VikatanPedia
Banner 1
கிரிக்கெட்வீரர்

விஜய் சங்கர்

தமிழகத்திலிருந்து இந்திய அணிக்குத் தேர்வான 27-வது வீரர். 2011-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முதல் தமிழக வீரர். ஆல் ரவுண்டர்.

2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர்களில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம். அந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7! இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ எனச் சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA).

தொகுப்பு : விகடன் டீம்